பிரதமர் அலுவலகத்துடன் பேச்சு: தலைமைத் தேர்தல் ஆணையரின் நடவடிக்கை ஏன் கேள்விகளை எழுப்புகிறது?

ஒரு விவாதத்தின் போது தலைமைத் தேர்தல் ஆணையர் உடனிருப்பார் என்று பிரதமரின் முதன்மைச் செயலாளர் “எதிர்பார்ப்பதாக” அந்த கடித்த்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு அரசாங்க அதிகாரி பணி மூப்பில் எவ்வளவு சீனியராக இருந்தாலும் சரி தலைமைத் தேர்தல் ஆணையரை ஆலோசனைக்கு அழைக்க முடியாது என்று முன்னாள் தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

CEC ECs interaction with PMO
CEC Sushil Chandra (centre) with ECs Rajiv Kumar (left) and Anup Chandra Pandey in Chandigarh Thursday. (Express Photo: Kamleshwar Singh)

 Ritika Chopra 

CEC ECs interaction with PMO : அரசு அதிகாரி ஒருவர், பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் தலைமை தாங்கும் ஆலோசனைக் கூட்டம் ஒன்றில் தலைமை தேர்தல் ஆணையர் கலந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று குறிப்பு ஒன்றை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பலாமா? இதற்கு முன்பு இருந்த ஆணையர்கள் மற்றும் தெளிவாக நிறுவப்பட்ட கோடுகளோடு இதனை தொடர்புபடுத்தினால் பதில் கூடாது என்று தான் சொல்ல வேண்டும்.

தேர்தல் ஆணையம் என்பது ஒரு அரசியலமைப்பு அதிகாரமாகும், அதன் செயல்பாடுகள் நிர்வாகத்திடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டு, மூன்று ஆணையர்களும் அரசாங்கத்திடம் இருந்து தூரத்தை பேணுவது உறுதி செய்யப்படுகிறது.

முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்கள் மிகவும் அரிதான காலங்களில் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளனர். உதாரணமாக 1999ம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் எம்.எஸ். ஜில், அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயிக்கு தேர்தல் முறைகளில் சீர்திருத்தங்களை கொண்டு வர வேண்டும் என்று கடிதம் எழுதினார். அதே போன்று 2016ம் ஆண்டு, தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி வி.வி. பேட் இயந்திரங்களுக்கான நிதியை உடனே தர வேண்டும் என்று கடிதம் எழுதினார்.

இந்த இரண்டு நிகழ்வுகளிலும் தலைமைத் தேர்தல் ஆணையர்கள், தங்கள் விருப்பத்தின் அடிப்படையில், ஒரு சிக்கலை கொடியிட்டு காட்டி நிர்வாகத்திற்கு கடிதம் எழுப்பியது. ஆனால் இந்த விவகாரத்தில், பிரதமர் அலுவலகம் தலைமை தேர்தல் அதிகாரியை ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இது மிகவும் அசாதாரணமானது என்று அதிகாரி ஒருவர் கூறினார்.

உண்மையில் மூன்று தேர்தல் ஆணையர்களும் பொதுமக்களின் பார்வையில் சுதந்திரத்தின் பிம்பத்தைத் தக்கவைக்க அரசாங்க அதிகாரிகள் அழைக்கும் கூட்டங்கள் அல்லது விவாதங்களில் கலந்துகொள்வதில்லை. இது பிம்பம் மட்டுமின்றி நெறிமுறையும் கூட. இதற்காகத்தான் நவம்பர் 15ஆம் தேதி தேர்தல் ஆணையத்துக்கு சட்ட அமைச்சகம் எழுதிய கடிதத்தின் தொனி கேள்விகளை எழுப்புகிறது என்று வட்டாரங்கள் கூறுகின்றன.

ஒரு விவாதத்தின் போது தலைமைத் தேர்தல் ஆணையர் உடனிருப்பார் என்று பிரதமரின் முதன்மைச் செயலாளர் “எதிர்பார்ப்பதாக” அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு அரசாங்க அதிகாரி பணி மூப்பில் எவ்வளவு சீனியராக இருந்தாலும் சரி தலைமைத் தேர்தல் ஆணையரை ஆலோசனைக்கு அழைக்க முடியாது என்று முன்னாள் தேர்தல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சட்ட அமைச்சர் அலுவலகத்தில் இருந்து வந்த கடிதத்தின் தொனி குறித்து தன்னுடைய அதிருப்தியை தலைமை தேர்தல் ஆணையர் பதிவு செய்திருப்பதோடு அந்த வீடியோ ஆலோசனைக் கூட்டத்தில் இருந்தும் பங்கேற்கவில்லை என்று தெரியவந்துள்ளாது. ஆனால் அவருக்கு கீழே பணியாற்றும் ஆணையர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இருப்பினும், இன்னும் சரியான கேள்விகளை எழுப்புவது என்னவென்றால், மூன்று கமிஷனர்களும் மிஸ்ராவுடன் தொடர்பு கொள்ள ஒப்புக்கொண்டனர் என்பது தான்.

நிர்வாகத்தில் இருந்து ஆணையத்தின் சுதந்திரம் உச்ச நீதிமன்றத்தால் மீண்டும் வலியுறுத்தப்பட்டது. 1995 இல், உச்ச நீதிமன்றம், டி.என். சேஷன் v இந்திய ஒன்றியம் மற்றும் பலர் – வழக்கில் கீழ் கண்டவாறு தீர்ப்பு வழங்கப்பட்டது.

சட்டமன்றங்களுக்கு தேர்தல் பணிகளை நடத்த பொறுப்புகளை ஒப்படைக்கும் அமைப்பானது அன்றைய அதிகாரத்தில் உள்ள கட்சியிடம் இருந்தும் நிர்வாகத்திடம் இருந்தும் முழுமையாக தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும். அரசியலமைப்பின் 324 (1) பிரிவின் கீழ் நிரந்தர அமைப்பான தேர்தல் ஆணையத்தை அமைப்பதன் மூலம் இந்த நோக்கம் அடையப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டது.

குறிப்பிடத்தக்க வகையில், சமீபத்திய நிகழ்வு, கடந்த ஐந்தாண்டுகளில், குறிப்பாக கண்காணிப்புக் குழுவின் சுதந்திரத்தை கேள்விக்குள்ளாக்கிய அரசியல் கட்சிகளிடம் இருந்து, கமிஷன் விமர்சனத்திற்கு உள்ளாகும்போது வருகிறது.

2017ம் ஆண்டு தலைமை தேர்தல் ஆணையர் ஆச்சல் குமார் ஜோதி தலைமையில் தேர்தல் ஆணையம் குஜராத் தேர்தல் தேதிகளை அறிவிப்பதை தாமதம் செய்தது தொடர்பாக விமர்சனங்களை சந்தித்தது. 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் 12ம் தேதி அன்று இமாச்சலப் பிரதேசத்தில் நவம்பர் 9 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என்று ஆணையம் அறிவித்தது, ஆனால் ஒரு சில மாதங்களுக்குள் தேர்தல் நடைபெறும் மாநிலங்களின் தேர்தல் அட்டவணைகள் அறிவிக்கப்பட்டாலும் குஜராத்தில் தேர்தல் தேதிகளை அறிவிக்கவில்லை என்று குற்றம் சுமத்தப்பட்டது. இந்த காலதாமதம் குஜராத்தில் ஆளும் பாஜகவுக்கு ஆட்சியைப் பற்றிய அறிவிப்புகளை வெளியிட அதிக அவகாசம் அளித்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கூறியுள்ளன.

2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின் போது சுனில் அரோரா தலைமையிலான தேர்தல் ஆணையம் தற்போதைய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அப்போதைய பாஜக தலைவர் அமித் ஷாவின் பேச்சுக்கள் உட்பட, தேர்தல் விதிமுறை மீறல்கள் தொடர்பான புகார்களுக்கு மாறுபட்ட கருத்துகளை கொண்டிருந்தனர். அப்போது, தேர்தல் ஆணையர் அசோக் லவாசா, குறைந்தபட்சம் ஐந்து முறை ஆல்-க்ளியர் வழங்கியதை எதிர்த்தார்.

இந்த ஆண்டு, மேற்கு வங்க தேர்தலின் போது பிரச்சாரத்தைத் தடை செய்வதில் தாமதம் குறித்து தேர்தல் ஆணையம் மீண்டும் விமர்சனத்திற்கு வந்தது. கொரோனா இரண்டாம் அலை வேகம் எடுக்க துவங்கிய போது திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சி பிரச்சாரத்தை முடித்துக் கொள்ளவும், மீதமுள்ள தேர்தல் தேதிகளை மாற்றவும் வலியுறுத்தி மனுக்களை தாக்கல் செய்தன.

ஆனால், முரணாக மேற்கு வங்கத்தில் ரோட்ஷோக்கள், வாகனப் பேரணிகள் மற்றும் 500க்கும் மேற்பட்டவர்களின் பொதுக் கூட்டங்களுக்கு அதன் தடை ஏப்ரல் 22 ஆம் தேதி பிற்பகுதியில் வந்தது. இதுவும் பிரதமர் மோடி நான்கு பேரணிகளை ரத்து செய்த ஒரு மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வந்தது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cec ecs interaction with pmo why this raises questions and breaches a red line

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express