Advertisment

Explained : கிரீமி லேயர் பட்டியலில் எஸ்சி/எஸ்டி பிரிவை சேர்ப்பது பற்றிய விவாதங்கள் என்னென்ன?

மத்திய அரசாங்கம் உச்ச நீதிமன்றத்தில், நாகராஜ்  வழக்கில் "இந்திரன் சாவ்னி தீர்ப்பு தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டது " என்று கூறியது.     

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
supreme court on quota, supreme court on reservations, sc on sc st reservation

supreme court on quota, supreme court on reservations, sc on sc st reservation

கடந்த வாரம், அரசு வேலைகளில், பட்டியல் ஜாதி/பட்டியல் பழங்குடியின பிரிவு மக்களுக்கு அரசுப் பணி உயர்வுகளின் போது கிரீமி லேயர் கொள்கையை பின்பற்றவேண்டும் என்ற கடந்த ஆண்டு உச்சநீதிமன்ற உத்தரவை, ஒரு பெரிய அரசியலமைப்பு அமர்வுக்கு மாற்றவேண்டும் என்று மத்திய அரசு உச்சநீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டது.

Advertisment

என்ன வழக்கு? 

கடந்த ஆண்டு ஜர்னைல் சிங் Vs லட்சுமி நரேன் குப்தா (2018) என்ற வழக்கில், எம் நாகராஜ் & மற்றவர்கள் vs யூனியன் ஆஃப் இந்தியா (2006)  என்ற உச்ச நீதிமன்ற வழக்கின் சாராம்சங்களைப் பற்றி விசாரித்தது. இந்த எம்.நாகராஜ் வழக்கு அரசியலமைப்பில் செய்யப்பட்ட நான்கு திருத்தங்களை எதிராக 2006ம் ஆண்டு விசாரிக்கப்பட்ட வழக்காகும். நாகராஜன் வழக்கில், நான்கு திருத்தங்களையும் அப்போதைய உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒப்புக் கொண்டன.

இந்த திருத்தங்கள் என்ன?

77 வது அரசியலமைப்பு திருத்தம்: இது அரசியலமைப்பில் பிரிவு 4 (ஏ) வை அறிமுகப்படுத்தியது.  எஸ்சி / எஸ்டி அரசு பணியாளர்களுக்கு பதவி உயர்விலும்  இடஒதுக்கீடு செய்வதற்கான ஏற்பாடுகளை செய்ய அரசுக்கு அதிகாரம் அளித்தது.

81 வது திருத்தம்: இது ஒரு குறிப்பிட்ட ஆண்டின் நிரப்பப்படாத எஸ்சி/எஸ்டி ஒதுக்கீட்டை, அடுத்த ஆண்டுக்கு முன்னெடுத்துச் செல்லும்போது, ​​அந்த ஆண்டின் மொத்த ஒதுக்கீட்டில் இணைக்கபடாது என்பதை உறுதி செய்கிறது. உச்சநீதிமன்ற வரம்பை அந்த ஆண்டு ஒதுக்கீட்டில் மீறுகிறதா? என்பதைக் கணக்கீடு செய்யும்போது கடந்தஆண்டு நிரப்பபடாத பணிகள் கணக்கு செய்யாத வகையில் உறுதி அளிக்கிறது.

அரசியலமைப்பின் 82வது திருத்தம்:  எஸ்சி /எஸ்டி பிரிவு மக்களுக்கு, 335-வது பிரிவின் கீழ்  எந்தவொரு தேர்விலும் தகுதி மதிப்பெண்களில் தளர்வு அல்லது மதிப்பீட்டின் தரத்தை குறைப்பதற்கு வழிவகை செய்கிறது.

அரசியலமைப்பின் 85வது திருத்தம்: எஸ்சி/எஸ்டி ஊழியர்களுக்கான தொடர்ச்சியான சீனியாரிட்டியை (Consequential Seniority) உறுதிபடுத்துகிறது.

நாகராஜ் வழக்கின் கருத்து ?

நாகராஜன் வழக்கில்,  மேலே குரிபிர்டப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தங்கள் 1992 ம் ஆண்டின் இந்திர சாவ்னி வழக்கில் (மண்டல் கமிஷன் வழக்கு) தீர்ப்பை மாற்றியமைப்பதற்காக கொண்டுவரப்பட்டதாக மனுதாரர் கூறினார்.

இந்திர சாவ்னி வழக்கில் உச்சநீதிமன்றம்  கிரீமி லேயரில் இருக்கும் ஓபிசி பிரிவு மக்களளுக்கு  ஒதுக்கீடு தடைசெய்து உத்தரவிட்டது.

இருந்தாலும், நாகராஜ் தீர்ப்பில், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி ஒய் கே சபர்வால் நீதிபதிகள் கே ஜி பாலகிருஷ்ணன், எஸ் எச் கபாடியா, சி.கே தாக்கர், பி கே பாலசுப்பிரமணியன் என ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, மேற் சொல்லப்பட்ட  நான்கு   திருத்தங்களை தடை விதிக்க மறுத்துவிட்டது.

இடஒதுக்கீடு ஒரு வரையறுக்கப்பட்ட அர்த்தத்தில் பயன்படுத்தப்பட வேண்டும், இல்லையெனில் அது நாட்டில் சாதிவாதத்தை நிலைநிறுத்தும் என்று கூறிய நீதிபதிகள், 16 (4 ஏ),16 (4 பி) அரசியலமைப்பு சமத்துவத்தை மீறவில்லை, மாறாக பிரிவு 14,16(4) அரசியலமைப்பு பிரிவை உறுதி செய்கின்றது என்று கூறினர்.

உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பில் “பதவி உயர்வு விஷயத்தில் எஸ்சி /எஸ்டிக்கு இட ஒதுக்கீடு செய்ய அரசு கட்டுப்படவில்லை. எவ்வாறாயினும், அத்தகைய ஏற்பாடுகளைச் செய்வதற்கு அரசு விரும்பினால், வர்க்கத்தின் பின்தங்கிய நிலையையும், பிரிவு 335-ல்சொல்வதை போன்று , அந்த  குறிப்பிட்ட வர்க்கம்  பொது வேலைவாய்ப்பில் போதுமான பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை என்ற தரவுகளையும் அரசு சேகரிக்க வேண்டும்" என்று கூறியிருந்தது.

மேலும், எஸ்/சி, எஸ்.டி பிரிவு மக்களுக்கும் கிரீமி லேயர் பட்டியல்  உட்படுத்தப்படும் என்று தீர்பளித்தது .

 ஜர்னைல் சிங் வழக்கில் என்ன நடந்தது?

நாகராஜ் தீர்ப்பை இரண்டு காரணங்களுக்காக மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு  வாதிட்டது (ஜர்னைல் சிங் வழக்கில்).

முதலாவதாக, “அரசு பணி ஒதுக்கீட்டிற்காக பின்தங்கிய தன்மையைக் காட்டும் தரவுகளை சேகரிப்பது இந்திரா சாவ்னியின் ஒன்பது நீதிபதிகள் கொண்ட பெஞ்சிற்கு முரணானது. எஸ்.சி/எஸ்.டி என இந்திய அரசியலமைப்பின் 341, 342 வது பிரிவுகளின் கீழ் ஜனாதிபதி பட்டியலில் சேர்க்கப்பட்டவுடன்,டேட்டாக்களின் அடிப்படையில் பின்தங்கி நிலைமையை நிரூபிக்க வேண்டிய அவசியமில்லை என்று வாதிட்டது”.

இரண்டாவதாக, பட்டியல் சாதியினருக்கும்,பட்டியல் பழங்குடியினருக்கும் கிரீமி லேயர் கொள்கையை உட்படுத்துவது  இந்திரன் சாவ்னி வழக்கிற்கு எதிரானது. மத்திய அரசாங்கம், நாகராஜ்  வழக்கில் "இந்திரன் சாவ்னி தீர்ப்பை தவறாகப் புரிந்துக் கொள்ளப்பட்டது " என்று கூறியது.

மத்திய அரசிற்காக ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால், “ இவர்கள் தான் பட்டியல் சாதியினர்/பட்டியல் பழங்குடியினர் என்று ஜனாதிபதி பட்டியலில் அறிவிக்கப்பட்டால், அவர்கள் பட்டியல் சாதியினர்/பட்டியல் பழங்குடியினர் என்றே கருதப்படுவார்கள். மேலும் அரசியலமைப்பு பிரிவு 341 மற்றும் 342ன் கீழ் ஜனாதிபதி பட்டியலை மாற்றக் கூடிய அதிகாரம் பாராளுமன்றத்தைத் தவிர வேறு யாருக்கும் இல்லை என்று கூறியுள்ளது.

கடந்த ஆண்டு நீதிமன்றம் எவ்வாறு தீர்ப்பு அளித்தது ?

கடந்த ஆண்டில், அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தளமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியலமைப்பு அமர்வு, நாகராஜ் தீர்ப்பை ஒரு பெரிய அமர்வுக்கு மாற்றவேண்டியதில்லை என்று தீர்ப்பு அளித்தது. நீதிபதி குரியன் ஜோசப், ஆர் எஃப் நரிமன், எஸ் கே கவுல் இந்தூ மல்ஹோத்ரா ஆகியோரும் அந்த அமர்வில் இருந்ததனர்.

எவ்வாறாயினும், எஸ்சி மற்றும் எஸ்.டி பிரிவு மக்களுக்கு பதவி உயர்வுகளின் போது, அவர்களின் பின்தங்கிய நிலையைக்  குறித்த டேட்டாக்களை  சேகரிக்க வேண்டும் என்ற நாகராஜ் தீர்ப்பு "செல்லுபடியாகாது" என்று தீபக் மிஸ்ரா தெளிவுபடுத்தினார்.

ஆனால், அந்த வர்க்க மக்கள் போதிய அளவு  அரசு சேவைகளில் போதிய பிரதிநிதித்துவம் செய்யப்படவில்லை என்ற தரவுகளை சேகரிக்க வேண்டும் என்றும்,  இட ஒதுக்கீட்டின் பயனை அனைவரும் அனுபவிக்க வேண்டும் என்பதற்காக கிரீமி லேயர் பட்டியலை எஸ்சி/எஸ்.டி பிரிவுக்கும் உட்படுத்தியது.

"குறிப்பிட்ட வகுப்பினுள் இருக்கும் கிரீமி லேயர் மக்கள் மட்டுமே பொதுத்துறையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டால் இந்தியாவில் சமத்துவம் சாத்தியமில்லை, மீதமுள்ள மக்களை அவர்கள் எப்போதும் போலவே பின்தங்கிய நிலையில் விட்டுவிடுவார்கள்,”என்று பெஞ்ச் கூறியது.

தற்போதைய நிலை என்ன ?

மத்திய அரசு , 2018 தீர்ப்பை ஒரு பெரிய பெஞ்சிற்கு குறிப்பிட வேண்டும் என்று உச்ச்சநீதிமன்றத்தில் வாதாடும் போது, 1992 இந்திரா சாவ்னி தீர்ப்பையும் குறிப்பிட்டது. இந்திரா  வழக்கில் உச்சநீதிமன்றம் கிரீமி லேயர்பட்டியலை எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவு மக்களுக்கு உட்படுத்தவில்லை என்று மத்திய அரசு சுட்டிக் காட்டியுள்ளது. இந்த விவகாரம் இரண்டு வாரங்களுக்குப் பிறகு கேட்கப்படும் என்று நீதிமன்ற பெஞ்ச் கூறியிருக்கிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment