Advertisment

குளிர்காலத்தில் கே 2 மலை ஏறிய நேபாள அணிக்கு என்ன தேவைப்பட்டது?

Nepali team to climb k2 in winter உயரமான மலையேறுதலின் கடைசி பெரிய பரிசு இது.

author-image
WebDesk
New Update
Challenge of mountaineering nepali team to climb k2 in winter Tamil News

Nepali team to climb k2 in winter

Challenge of mountaineering Nepali team to climb K2 in winter : ஜனவரி 16-ம் தேதி, நேபாள மலையேறுபவர்களின் குழு குளிர்காலத்தில் கே 2 சிகரத்தை ஏறிய முதல் மலையேறுபவர்களாக ஆனார்கள். இது ஏன் முக்கியமானது, அது எவ்வாறு அடையப்பட்டது?

Advertisment

கே 2 என்றால் என்ன?

8,611 மீட்டர் உயரத்தில், எவரெஸ்ட் சிகரத்திற்குப் பிறகு, கே 2 உலகின் இரண்டாவது மிக உயர்ந்த மலை. அதன் சமீபத்திய உயரம் 8,848 மீ. பாக்கிஸ்தான் ஆக்கிரமித்துள்ள கில்கிட்-பால்டிஸ்தான் பிராந்தியத்திற்கும் சீனாவிற்கும் இடையிலான எல்லையில் கே 2 அமைந்துள்ளது. கே 2, முதன்முதலில் 1954-ல் ஏற்பட்டது. ஆனால், வெற்றிகரமான சிகரம் அடைதல் அனைத்தும் வெப்பமான மாதங்களில் மட்டுமே இப்போது வரை இருந்துள்ளன. மிகவும் குளிரான மாதங்களில் ஆறு முறை மட்டுமே முயற்சி செய்யப்பட்டுள்ளது. ஆனால், ஒவ்வொரு முயற்சியும் தோல்வியிலேயே முடிவடைந்தது. "குளிர்காலத்தில் கே 2-ஐ அளவிடுவது 20-ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மேற்கு ஐரோப்பிய நாடுகளிடையே தேசிய வலிமையின் வெளிப்பாடாகப் பிறந்த ஒரு விளையாட்டு. உயரமான மலையேறுதலின் கடைசி பெரிய பரிசு இது" என்று ஏறும் வழிகாட்டி ஃப்ரெடி வில்கின்சன் தி நியூயார்க் டைம்ஸில் எழுதினார்.

வெப்பநிலை மற்றும் கடுமையான காற்று ஆகியவற்றால் தடைசெய்யப்பட்ட கே 2, பனிச்சரிவுகளுக்கு ஆளாகக்கூடியது மற்றும் மிகவும் வலிமையானது. அது ‘சாவேஜ் மலை’ என்றும் அழைக்கப்படுகிறது. அதன் உச்சத்தை அடையும் ஒவ்வொரு நான்கு பேரிலும் ஒருவர் இறந்து விடுகிறார் என்று NYT ஒரு கட்டுரையில் கூறுகிறது. 400 மலை ஏறுபவர்கள் கூட அதன் உச்சத்தை எட்டவில்லை. இது, விண்வெளிக்குச் சென்றவர்களைக் காட்டிலும் குறைவு.

மிஷன்

கடந்த கோடையில் Seven Summit Trek நிறுவன அலுவலகம் கோவிட் -19 காரணமாக நேபாளத்தில் மலையேறுதலை நிறுத்தியிருந்த நேரத்தில் இந்த சாகசம் திட்டமிடப்பட்டது. நிறுவனத்தின் மிங்மா ஷெர்பா மலை ஏறுபவர்களின் கூட்டத்தை வழிநடத்தினார். கட்டுப்பாடுகள் மத்தியில் மலையேறும் சமூகம் வகிக்க வேண்டிய பங்கு குறித்து அப்போது விவாதிக்கப்பட்டது. "அது எப்படி இருக்க வேண்டும் என்பதை நாம் இன்று தீர்மானிக்க வேண்டும்" என்று அவர்கள் பகிர்ந்துகொண்டனர்.

"ஜனவரி 16-ம் தேதி, 1656 மணிநேரத்தில் மலை ஏறுபவர்களின் குழு (அனைவரும் நேபாளர்கள்) கடந்த  ஜூன் மாதத்தில் நடந்த சந்திப்பின் விளைவுதான்" என்று மிங்மா ஷெர்பா தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் தெரிவித்தார். "எங்கள் தற்போதைய பணி முடிந்துவிட்டது, ஆனால் எங்கள் பொறுப்பு மற்றும் பெரிய பிரச்சாரம் தொடரும்" என்று மேலும் அவர் கூறினார்.

மலை ஏறுபவர்கள்

நிர்மல் பூர்ஜா, கெல்ஜே ஷெர்பா, மிங்மா டேவிட் ஷெர்பா, மிங்மா ஜி, சோனா ஷெர்பா, மிங்மா டென்சி ஷெர்பா, பிரேம் சிரி ஷெர்பா, தாவா டெம்பா ஷெர்பா, கில்லி பெம்பா ஷெர்பா மற்றும் தாவா டென்சிங் ஷெர்பா ஆகியோர் இரண்டு அணிகளாகச் சென்ற மலை ஏறுபவர்கள். ஏறிய 10 நாட்களுக்குப் பிறகு அவர்கள் கடந்த செவ்வாய்க்கிழமை நேபாளத்திற்குத் திரும்பினார்கள்.

"சகோதரருக்குச் சகோதரராக, தோளோடு தோள் சேர்த்து, நாங்கள் நேபாள தேசிய கீதத்தைப் பாடிக்கொண்டு மலைச் சிகரத்தை நோக்கி ஒன்றாக நடந்தோம். இந்த வரலாற்றுச் சாதனையைக் குறிக்கும் ஒரு அணியாக நாங்கள் அனைவரும் சிகரத்தை அடைவதற்கு முன்பு 10 மீட்டர் தூரத்தில் நின்றோம்” என்று நிர்மல் பூர்ஜா ட்வீட் செய்துள்ளார்.

சமவெளியில் உள்ள சிட்வான் மாவட்டத்தைச் சேர்ந்தவரும், பிரிட்டிஷ் இராணுவத்தின் ஓய்வுபெற்ற கூர்காவுமான பூர்ஜா, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலகின் பதினான்கு 8,000 மீட்டர் உயரமுள்ள அனைத்து மலைகளையும் எறியுள்ளார். இது அனைத்தும் ஆறு மாதங்கள் மற்றும் ஆறு நாட்களுக்குள் நடைபெற்றது. இதில் கே -2-ம் அடங்கும். ஆனால், அந்த ஏற்றங்கள் யாவும் கோடையில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

மலையேற்ற நிறுவனம் விருப்பமுள்ள பயணக் கலைஞர்களிடமிருந்து பங்கேற்பைக் கோரிய பின்னர், பூர்ஜா நிம்ஸ்டாய் குழுவான மேலும் ஐந்து பேருடன் பங்கேற்க முன்வந்தார். அதில் அவரைத் தவிர அனைவரும் ஷெர்பா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். கெல்ஜென் ஷெர்பா அவருடன் பல இமாலய சிகரங்களை 2019-ல் எறியுள்ளார். மிங்மா டேவிட் ஷெர்பா எவரெஸ்டின் சரிவுகளிலிருந்து 52 மலை ஏறுபவர்களை 2016-ம் ஆண்டில் மீட்டெடுத்தார்.

எவரெஸ்ட் சிகரத்தை ஐந்து முறை, கே 2 இருமுறை ஏறிய ஷெர்பா மிங்மா ஜி, அவருடைய  20 வயதில் உலகின் 8,000 மீட்டர் சிகரங்கள் ஏறியபோது ஷெர்பாஸின் தனி அணியையும் வழிநடத்தினார்.

பயணம்

வாரம் முழுவதும் 90 கி.மீ. நடைப்பயணம். பாதை மற்றும் மேற்புறம், 65 முதல் -70 டிகிரி வரை வெப்பநிலை இருந்தது. மேலும் நீல பனி மற்றும் பாறைகள் வழியாகச் செல்ல பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருந்தது. ஆனால், ஏறும் போது அணி சம்பாதித்த நம்பிக்கை எதிர்கால சாகசக்காரர்களுக்கு ஒரு உத்வேகமாக இருக்கும் என்று நினைப்பதாக ஓர் பயணவியலாளர் கூறினார்.

பாட்டில்நெக் எனப்படும் ஒரு மோசமான பத்தியில் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். மிக வேகமாக நகரும் ஆபத்துக்கள் நிறைந்த பகுதி. இது நுரையீரல் ரத்த நாளங்களின் குறுக்கீட்டை ஏற்படுத்தி இறுதியில் மரணத்திற்கும் வழிவகுக்கும். "பனிக்கு இடையே பொருத்தப்பட்ட ஒரு கயிற்றில் அவர்கள் இணைக்கப்பட்டுள்ளனர். பூர்ஜாவும் மற்ற மலை ஏறுபவர்களும் பல சிதைந்த பனிக்கட்டி வீடுகள் போன்ற பேசப்படாத உண்மைகளைச் சுற்றி வந்தனர்" என்று NYT எழுதியது.

“குளிர்காலத்தில் கே 2-ன் முதல் ஏற்றம். தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் இல்லை, தனிப்பட்ட பேராசை இல்லை. ஆனால், ஒற்றுமை மற்றும் நேபாள அணியின் கூட்டு சக்தி பகிரப்பட்ட பார்வை மட்டுமே இது” என சிகரத்திலிருந்து திரும்பிய பூர்ஜா ட்வீட் செய்தார்.

அடுத்து என்ன?

பாகிஸ்தான்-சீனா எல்லையில் உள்ள மலையின் உச்சியை அடைய இந்த பயணத்தின் 40 உறுப்பினர்கள் இன்னும் தங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்கின்றனர். அவர்களில் 19 பேர் நேபாளிகள் என்று மிங்மா ஷெர்பா கூறுகிறார்.

காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றில் இந்த நோக்கம் கவனம் செலுத்தும் என்று பூர்ஜா கூறினார். “புவி வெப்பமடைதல் மற்றும் காலநிலை மாற்றம் என்பது இப்போது உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சவால்களில் ஒன்று. இந்த சகாப்தத்தின் மிகவும் அச்சுறுத்தலான தற்செயலான நெருக்கடியை எதிர்கொள்ள மனித இனம் ஒன்றுபட வேண்டும். நாம் ஒன்றிணைந்தால் எதையும் சாத்தியமாக்க முடியும்” என்று பூர்ஜா ட்வீட் செய்துள்ளார்.

சிகரத்திலிருந்து திரும்பியபோது, மலையேறுபவர்கள் பாகிஸ்தானில் ராணுவத் தளபதி ஜெனரல் கமர் ஜாவேத் பஜ்வாவை அழைத்து, பாகிஸ்தான் அரசாங்கத்திற்கு அளித்த ஆதரவுக்கு நன்றி தெரிவித்தனர். "நாங்கள் வெற்றியுடன் தாழ்மையுடன் இருக்கிறோம். எங்களுக்குச் சிறந்த விருந்தோம்பல் கிடைத்தது. பாகிஸ்தான் எங்கள் இரண்டாவது வீடு” என்று ஒரு பிரதிநிதி கூறினார். பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமித்த பிராந்தியங்களில் பதினான்கு 8,000 மீட்டர் மலைகள் உள்ளன. அவை எதிர்கால சாகசங்களில் அதிக மலையேறுபவர்களை ஒன்றிணைக்கக்கூடும்.

ஆனால், வெற்றிகரமான ஏற்றம் நேபாள பெருமையைப் பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Mountains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment