Advertisment

நிலவை நோக்கிய விண்வெளி ஆய்வுகள் - ஒரு பார்வை

Chandrayaan 2 : சந்திரயான் 2 என்ற நிலவை நோக்கிய ஆய்வு திட்டம் 110வது திட்டம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அதுதான் உண்மை

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chandrayaan-2, Chandrayaan-2 Moon landing today, different kinds of moon missions, Chandrayaan-1, Apollo11

Chandrayaan-2, Chandrayaan-2 Moon landing today, different kinds of moon missions, Chandrayaan-1, Apollo11, Indian express, chandrayaan 2, chandrayaan 2 rover name, chandrayaan 2 rover, chandrayaan 2 landing, chandrayan 2, chandrayaan 2 news, what is the name of chandrayaan 2 rover, சந்திரயான் 1, சந்திரயான் 2, லேண்டர், ரோவர், நாசா

Amitabh Sinha

Advertisment

சந்திரயான் 2 விண்கலத்தில் உள்ள விக்ரம் லேண்டர், செப்டம்பர் 7ம் தேதி அதிகாலை நிலவின் தெற்பகுதியில் வெற்றிகரமாக தரையிறங்க உள்ளது. இதன்மூலம், விண்வெளி வரலாற்றில் இந்தியா புதிய சாதனையை நிகழ்த்த உள்ளது.

இஸ்ரோ தற்போது மேற்கொண்டுள்ள சந்திரயான் 2 என்ற நிலவை நோக்கிய ஆய்வு திட்டம் 110வது திட்டம் என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அதுதான் உண்மை. நிலவை நோக்கிய விண்வெளி ஆய்வுகள் 100க்கும் மேல், சர்வதேச நாடுகளால் நிகழ்த்தப்பட்டு வந்துகொண்டிருக்கின்றன.

1958 முதல் 1976ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் 90 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நடப்பு பத்தாண்டில், சந்திரயான் 2 ஆய்வு 11வது சோதனை என்பது குறிப்பிடத்தக்கது.நிலவை பற்றிய ஆய்வுகள் 1990ம் ஆண்டிற்கு பிறகு மீண்டும் வேகம் எடுக்க துவங்கின. நிலவில் தண்ணீர் இருப்பதாக 2008ம் ஆண்டில் இஸ்ரோவால் அனுப்பப்பட்ட சந்திரயான் கண்டுபிடித்ததை தொடர்ந்து, சர்வதேச நாடுகள் நிலவு பற்றிய ஆராய்ச்சிகள் அதிக கவனம் கொள்ள துவங்கின.

சர்வதேச நாடுகள் மேற்கொண்ட நிலா குறித்த ஆய்வுகள் சிலவற்றை இங்கு காண்போம்

Flybys– இந்த ஆய்வு, நிலவை நோக்கி வடிவமைக்கப்பட்டிருந்தாலும், நிலவின் சுற்றுவட்டப்பாதை அளவிற்கு மட்டுமே இந்த விண்கலம் இயக்கப்பட்டது. நிலவின் தொலைவு, அதன் சுற்றுவட்டப்பாதையில் உள்ள மற்ற கோள்கள். நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இயங்கும்போது ஏற்படும் மாற்றம் உள்ளிட்டவைகள் இந்த ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டன. இந்த Flybys ஆய்வினை தொடர்ந்து அமெரிக்கா பயனீயர் 3 மற்றும் 4 ஆய்வுகளையும் சோவியத் ரஷ்யாவால் லுனா 3 ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.

Orbiters - நிலவின் சுற்றுவட்டப்பாதையின் வடிவமைப்பு, நிலவின் மேற்பரப்பு மற்றும் அதன் வளிமண்டலம் குறித்து அறிவதற்காக இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் சந்திரயான் 1 விண்கலமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச நாடுகள் 46 ஆர்பிட்டர்களை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது. நிலா மற்றும் செவ்வாய் கிரகங்களில் மட்டுமே தரையிறங்கும் வசதி உள்ளதால், ஆர்பிட்டர்கள் மற்றும் பிளைபை ஆய்வுகள் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன.

Impact Mission : ஆர்பிட்டர் மிஷன்களின் நீட்சியாக இது கருதப்படுகிறது. விண்கலத்தின் முக்கிய பகுதி நிலவை சுற்றி வரும்போது, விண்கலத்தின் சில பகுதிகள், நிலவில் தரையிறங்க செய்வர். இதன்மூலம் என்ன பாதிப்பு நிகழ்கிறது என்பதை ஆராய்வர். இதன்மூலம் நிலா மற்றும் அதன் சுற்றுவட்டபாதை குறித்த அரிய தகவல்கள் நமக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. சந்திரயான் 1 விண்கலத்தில் Moon Impact Probe இத்தகைய ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டது. நிலவின் மேற்பகுதியில் Moon Impact Probe மோதச்செய்ததன் மூலமாகவே, அங்கு தண்ணீர் இருப்பது தெரியவந்தது. கேலிபரேசன் பிழைகள் இருந்ததன் காரணமாக, இதுகுறித்த தகவல்கள் பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Landers :- ஆர்பிட்டர் ஆய்வுகளிலேயே மிகவும் கடினமான கட்டமைப்புடன் கூடியதாக இந்த லேண்டர்கள் உள்ளன. முதல் 11 லேண்டர் மிஷன்கள் தோல்வியிலேயே முடிந்துள்ளன. 1966ம் ஆண்டு ஜனவரி 31ம் தேதி சோவியத் ரஷ்யாவால் அனுப்பப்பட்ட லுனா 9 விண்கலம் மூலம் முதல் லேண்டர் மிஷன் வெற்றிகரமாக நிகழ்த்தப்பட்டது. நிலவின் மேற்பரப்பை இது புகைப்படம் எடுத்து அனுப்பியது.

Rovers : லேண்டர் மிஷன்களின் நீட்சியே ரோவர்கள் ஆகும். லேண்டர் விண்கலத்திற்கு கால்கள் போன்ற அமைப்பு உள்ளன. இதன்மூலம் இது எளிதாக தரையிறங்கும்.இதில் உள்ள உபகரணங்கள் ஆய்வுகளை மேற்கொண்டு தகவல்களை திரட்டும். இதனால், நிலவின் மேற்பரப்பிலோ அல்லது அதன் சுற்றுவட்டப்பாதையிலோ எவ்வித தொடர்பும் வைத்துக்கொள்ள இயலாது. இந்த குறையை போக்கும்பொருட்டு ரோவர் வடிவமைக்கப்பட்டது. ரோவர்களின் சிறப்பு தன்மை கொண்ட சக்கரங்கள் போன்ற அமைப்பு உள்ளது. இதன்மூலம், இவை லேண்டர்களிலிருந்து விடுபட்டு நிலவின் மேற்பரப்பில் சுற்றி வருகின்றன. லேண்டர் விண்கலத்தால் பெறமுடியாத தகவல்களை, இந்த ரோவரின் உதவியால் நாம் எளிதாக பெறமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது. சந்திரயான் 2 விண்கலத்தில் பொருத்தப்பட்டுள்ள விக்ரம் லேண்டருக்கு பிரக்யான் என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தாண்டு துவக்கத்தில் சீனாவின் லேண்டர் மற்றும் ரோவர் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Human missions : நிலவின் மேற்பரப்பில் விண்வெளி வீரர்கள் தரையிறங்க Human missions உதவுகின்றன. இதுவரை அமெரிக்காவின் நாசா மட்டுமே, நிலவிற்கு மனிதர்களை அனுப்பியுள்ளது. 1969 முதல் 1972ம் வரையிலான காலகட்டத்தில், 2 விண்வெளி வீரர்கள் 6 முறை நிலவில் கால்பதித்துள்ளனர். அதற்குப்பிறகு, நிலவிற்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்தை எந்தவொரு நாடும் மேற்கொள்ளவில்லை. இருந்தபோதிலும், 2024ம் ஆண்டில், மீண்டும் நிலவிற்கு மனிதர்களை அனுப்ப இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Nasa Isro
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment