முக்கிய கட்டத்தில் சந்திரயான்-2 : அடுத்து என்ன?

அதாவது சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணிக்கும்.

சந்திரயான்-2 என்பது மூன்று பகுதிகளை உடைய ஒரு விண்கல அமைப்பு. அதில், நிலவை சுற்றுவதற்கான கலன்(ஆர்பிட்டர்) ஒன்றும், நிலவில் தரையிறங்குவதற்கான கலன் ஒன்றும் (விக்ரம்), நிலவின் தரைப்பரப்பில் ஊர்ந்து சென்று(பிரக்யன்) ஆய்வுகள் செய்வதற்கான உலாவி (ரோவர்) ஒன்றும் இருக்கும்.

கடந்த புதன்கிழமையன்று(ஆகஸ்ட் 14), சந்திரயான் -2 விண்கலம் பூமியின் சுற்றுப்பாதையை விட்டு வெளியேறி நிலவை நோக்கி நகர்ந்தது. இது இறுதியாக செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் திட்டமிடப்பட்டப்படி  மென்மையாக தரையிறங்கும்.

இதுவரையில், ஜூலை 22 அன்று விண்ணில் பாய்ந்த  சந்திரயான் -2  பூமியை விட்டு தொலைதூரத்தில் இருக்கும் சுற்றுப்பாதைக்கு நகர்ந்தது.  இது,“பூம பிணைப்பிலுள்ள சுற்றுப்பாதையில் உயர்த்தும் நிகழ்வு” என்ற யுக்திகளால்  சாத்தியப்படுகிறது.

அதாவது சந்திரயான்-2 நேர்க்கோட்டுப் பாதையில் நிலவை நோக்கிப் பயணிக்காமல் புவியைச் சுற்றி சுற்றி அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் பயணித்து ஒரு கட்டத்தில் நிலவின் சுற்றுவட்டப்பாதையில் நுழையும்.

புதன்கிழமை(ஆகஸ்ட் 14 ),சந்திரயான் பூமியை விட்டு வெளியேறுவதற்கு முன், அது பூம பிணைப்பிலுள்ள சுற்றுப்பாதையில் அடுத்தடுத்து பெரிய வட்டப் பாதையில் சென்ற  விவரங்கள் பின்வருமாறு: 230 × 45,163 கிமீ (ஜூலை 24), 251 × 54,829 கிமீ (ஜூலை 26), 276 × 71,792 கிமீ (ஜூலை 29), 277 × 89,472 கிமீ (ஆகஸ்ட் 2) மற்றும் 276 × 1,42,975 கிமீ (ஆகஸ்ட் 6).

புதன்கிழமை அன்று , இறுதி சுற்றுப்பாதையை உயர்த்தும் நிகழ்வு  மேற்கொள்ளப்பட்டது. அதனால், சந்திரயான் 2 இப்போது நிலவு பரிமாற்றப் பாதையில் (பூமிக்கும்-நிலவுக்கும் இடையில் உள்ள பாதை)நுழைந்துள்ளது. இது தனது அடுத்த இல்லகான நிலவு சுற்றுப்பாதையை நோக்கி நகரும்.

ஆகஸ்ட் 20 அன்று, சந்திரயான் -2 நிலவின் சுற்றுப் பாதைக்கு செல்லும். இதைத் தொடர்ந்து, நிலவின் மேற்பரப்பில் இருந்து சுமார் 100 கி.மீ தூரத்தில் இருக்கும் சுற்றுப் பாதையில் வட்டமிடும்.

அதன் பிறகு, செப்டம்பர் இரண்டாம் தேதி விக்ரம் என்கிற தரையிறங்கும் கலன்,  ஆர்பிட்டரில்  இருந்து பிரியும். இந்த தரையிறங்கும் கலன் செப்டம்பர் ஏழாம் நாள் நிலவின் தென்துருவத்தில் தரை இறங்கும். பிரக்யன் என்கிற  ரோவர் ஊர்தி வெளியேறும் .

 

பிரக்யன் ரோவர் இதுவரை எந்தவொரு நாடும் சென்றிராத நிலவின் தென்துருவ பிரதேசத்திற்கு செல்ல விருக்கிறது. அங்கு, நீர் இருப்பதற்கான வாய்ப்பு உள்ளது என்று பொதுவான கருத்து ஒன்று உள்ளது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close