Advertisment

உலகின் மிக இளம் வயது செஸ் வீரர்... சாதனை படைத்த 3 வயது இந்தியர்: ஃபிடே ரேட்டிங் செயல்படுவது எப்படி?

3 வயதான அனிஷ் சர்க்கார் என்ற இந்திய இளம் வீரர் சர்வதேச செஸ் கூட்டமைப்பால் தரவரிசைப் படுத்தப்பட்ட உலகின் இளம் செஸ் வீரர் என்கிற சாதனையைப் படைத்துள்ளார்.

author-image
WebDesk
New Update
chess FIDE rating Ranking explained in Tamil

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த அனிஷ் சர்க்கார் என்கிற 3 வயது செஸ் வீரர் மற்றும் அவரது பயிற்சியாளர் திபியேந்து பருவா. (எக்ஸ்பிரஸ் புகைப்படம் - பார்த்தா பால்)

இளம் செஸ் வீரர்கள் சமீபத்திய ஆண்டுகளில் வெற்றி வாகை சூடி தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்து வருகிறார்கள். குறிப்பாக, இந்திய கிராண்ட்மாஸ்டர்களான குகேஷ் மற்றும் பிரக்ஞானந்தா போன்றவர்கள் தங்கள் பதின்பருவத்தில் முக்கிய வீரர்களாக மாறி வருகின்றனர். இப்போது, ​​அனிஷ் சர்க்கார் என்ற இந்திய இளம் வீரர் சர்வதேச செஸ் கூட்டமைப்பால் தரவரிசைப் படுத்தப்பட்ட உலகின் இளம் செஸ் வீரராக ஆகியுள்ளார். அதுவும் மூன்று வயதில் இந்த சாதனையை அவர் படைத்திருக்கிறார். 

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: Indian 3-year-old now youngest rated chess player in the world: How FIDE ratings work

கொல்கத்தாவைச் சேர்ந்த சர்க்கார் மார்ச் மாதம் தனுகா துன்சேரி டிபியெண்டு பருவா செஸ் அகாடமியில் சேர்ந்தார் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்பு செய்தி வெளியிட்டது. அதைத் தொடர்ந்து, அவர் 9 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் பங்கேற்று இரண்டு மதிப்பிடப்பட்ட எதிரிகளைத் தோற்கடித்து 24வது இடத்தைப் பிடித்தார். 13 வயதுக்குட்பட்ட மாநில அளவிலான போட்டியில், களமாடிய அவர், சர்வதேச செஸ் கூட்டமைப்பு (ஃபிடே) மூலம் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தரவரிசையில் நுழைவதற்கு, ஐந்து மதிப்பிடப்பட்ட வீரர்களை எதிர்கொண்டார்.

அவர் தற்போது 1555 மதிப்பீட்டைக் கொண்டுள்ளார் மற்றும் அவரது உலகத் தரவரிசை 1,46,736 ஆகும். இந்நிலையில், செஸ் போட்டியில் குறிப்பிடப்படும் மதிப்பீடுகள் (ரேட்டிங்) மற்றும் தரவரிசைகள் என்றால் என்ன மற்றும் செஸ் வீரர்கள் ஃபிடே-ஆல் அங்கீகரிக்கப்படுவதற்கு என்ன செய்ய வேண்டும்? என்பதை இங்கு விளக்கியுள்ளோம். 

மதிப்பீடுகளுக்காக ஃபிடே போட்டிகளில் ஆடுவது 

ஃபிடே தகுதி ஆணையத்தின்படி, வீரர்கள் ஃபிடே மதிப்பிடப்பட்ட போட்டிகளில் பங்கேற்பதன் மூலம் அதிகாரப்பூர்வ மதிப்பீடுகளைப் பெறுகிறார்கள். ஃபிடே மிகக் குறைவான போட்டிகளையே ஏற்பாடு செய்கிறது என்று கூறுகிறது. அவை பெரும்பாலும் உலக சாம்பியன்ஷிப் மற்றும் அதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் மற்றும் பிற உலக சாம்பியன்ஷிப் போன்ற உலகளாவிய போட்டிகளை மட்டுமே நடத்துகிறது. 

பெரும்பாலான ஃபிடே மதிப்பீடு செய்யப்பட்ட போட்டிகள் ஒரு நாட்டின் கூட்டமைப்புக்குள் நடக்கும் போட்டிகளாக இருக்கும். ஒன்று கூட்டமைப்பு அவற்றை ஒழுங்கமைக்கிறது, அல்லது சுயாதீன அமைப்புகள் அதன் அனுமதியுடன் அவ்வாறு செய்கின்றன. வழக்கமாக, செஸ் கூட்டமைப்பின் இணையதளங்களில் எந்தப் போட்டிகள் ஃபிடே மதிப்பிடப்பட்டவை மற்றும் எது இல்லை என்பதைத் தெளிவாகக் குறிக்கும் போட்டி காலெண்டர்களைக் கொண்டிருக்கும்.

மதிப்பீடுகளின் வகைகள்

"நீங்கள் அடையக்கூடிய மூன்று வகையான மதிப்பீடுகள் உள்ளன: ஸ்டாண்டர்ட், ரேபிட் மற்றும் பிளிட்ஸ். இது வெவ்வேறு விளையாட்டு நேர அளவுகளை பிரதிபலிக்கிறது. நிலையான மதிப்பீட்டைப் பெற, நீங்கள் ஏற்கனவே மதிப்பிடப்பட்ட வீரர்களுக்கு எதிராக குறைந்தது 5 கேம்களை விளையாட வேண்டும், மேலும் அந்த கேம்களில் குறைந்தது ½ புள்ளியை (டிரா) பெற வேண்டும்." என்று செஸ் கமிஷனின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டின் தொடக்கத்தில் புதுப்பிக்கப்பட்ட ஃபிடே விதிமுறைகளின் படி, “பட்டியலுக்குப் புதிதாக ஒரு வீரருக்கான மதிப்பீடு, மதிப்பிடப்பட்ட எதிரிகளுக்கு எதிராக குறைந்தபட்சம் 5 ஆட்டங்களை அடிப்படையாகக் கொண்டு வெளியிடப்படும். இதை ஒரு போட்டியில் சந்திக்க வேண்டியதில்லை. 26 மாதங்களுக்கு மிகாமல் தொடர்ச்சியான ரேட்டிங் காலங்களுக்குள் விளையாடிய பிற போட்டிகளின் முடிவுகள் ஆரம்ப மதிப்பீட்டைப் பெறுவதற்காகத் தொகுக்கப்படுகின்றன. மதிப்பீடு குறைந்தது 1400 ஆக இருக்க வேண்டும்.

இந்த மதிப்பீடு எப்படி வந்தது? என்றால், “ஃபிடே மதிப்பீடு அமைப்பு என்பது ஒரு எண் அமைப்பாகும், இதில் பகுதியளவு மதிப்பெண்கள் மதிப்பீடு வேறுபாடுகளாகவும் நேர்மாறாகவும் மாற்றப்படுகின்றன. சிறந்த புள்ளிவிவரத் தரத்தின் அளவீட்டுத் தகவலை உருவாக்குவதே இதன் செயல்பாடு." என்று ஃபிடே இணையதளம் கூறுகிறது. 

தற்போது, ​​ஃபிடே கிளாசிக்கல் அல்லது ஸ்டாண்டர்ட் மதிப்பான 2,500 மற்றும் மூன்று கிராண்ட்மாஸ்டர் நெறிமுறைகளை அடையக்கூடிய ஒரு வீரருக்கு செஸ்ஸின் உயரிய கவுரவத்தை ஃபிடே வழங்குகிறது. இந்த விதிமுறைகள் ஃபிடே தலைப்பு விதிமுறைகளில் குறிப்பிடப்பட்டுள்ள போட்டிகள், விளையாட்டுகள் மற்றும் வீரர்கள் தொடர்பான சிக்கலான மற்றும் கடுமையான விதிகளின் தொகுப்பால் வரையறுக்கப்படுகின்றன.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Chess International Chess Fedration
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment