Chhattisgarh Maoist attack : பிஜாப்பூர் மாவட்ட மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை படுக்கை ஒன்றில் படுத்திருந்த வீரர் காலில் பலத்த காயமும், கையில் பலத்த குண்டடியும் ஏற்பட்டுள்ளது. சத்தீஸ்கர் மாநில காவல்ப்படை பிரிவை சேர்ந்த அவரால் ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற சம்பவங்களில் இருந்து மீள்வது மிகவும் கடினமாக இருக்கும். அவர் இப்போது ஒரு மிகப்பெரிய முடிவுக்கு வந்துள்ளார்: அவரும் அவரது சகாக்களும் மாவோயிஸ்டுகளால் போடப்பட்ட ஒரு வலையில் நுழைந்தனர்.
நாங்கள் அந்த இடத்தை அடைந்த போது எதையும் காணவில்லை. பிறகு நாங்கள் அங்கிருந்து திரும்பி வர துவங்கும் போது அவர்கள் எங்களை சுற்றி வளைத்தனர். நிறைய பேர் திடீரென எங்களை சூழ, இது திட்டமிட்டு நடத்தப்பட்டதாகவே தோன்றியது. இந்தியன் எக்ஸ்பிரஸிடம் பேசிய வட்டாரங்கள், இந்த நடவடிக்கைக்காக 10 குழுக்கள் களம் இறக்கப்பட்டன. இரண்டு சுக்மா மாவட்டத்திலும் பிஜாப்பூரில் உள்ள மூன்று முகாம்களில் இருந்து 8 குழுக்களும் கொண்டு வரப்பட்டிருந்தன.
சத்தீஸ்கர் மாவட்ட காவல்த்துறை படை, எஸ்.டி.எஃப்., டி.ஆர்.ஜி., சி.ஆர்.பி.எஃப். மற்றும் கோப்ரா யூனிட் என கிட்டத்தட்ட 1000 பேரை கொண்டு நடைபெற்ற மிகப்பெரிய நடவடிக்கை இதுவாகும். பிஜாப்பூரில் உள்ள 8 முகாம்களில் உள்ள 6 முகாம் வீரர்கள் டர்ரெம் முகாமை சேர்ந்தவர்கள். மீதம் இருக்கும் இரண்டு படையினர் உஷார் மற்றும் பமேத் பகுதிகளை சேர்ந்தவர்கள்.
அந்த ஆறு அணிகளில் மூன்று - மாவட்ட ரிசர்வ் கார்ட் (DRG) மற்றும் சிறப்பு பணிக்குழு பிரிவை சேர்ந்தவர்கள். டி.ஆர்.ஜி. குழு மற்றும் கோப்ரா குழு ஏப்ரல் 2ம் தேதி அன்று இரவு 10 மணிக்கு நிறுவப்பட்டது. தெற்கு டர்ரெம் பகுதியில் இருந்து முறையே 11 மற்றும் 12 கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள அலுப்புடா மற்றும் ஜோனகுடா பகுதிக்கு சென்று அடுத்த நாள் 6 மணிக்கு திரும்ப வேண்டும் என்பது தான் அவர்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையாகும். அவர்கள் தான் தாக்குதலுக்கு ஆளாகி திரும்பி வந்தவர்கள்.
இந்த கொலை வெறி தாக்குதலில் தப்பித்த ராணுவ வீரர்கள் பலர், எந்த விசயங்கள் தவறாய் முடிந்தன என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர்.
பிஜாப்பூர் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வீரர் ஒருவர், நாங்கள் இலக்கில் எதையும் காணவில்லை என்பதால் திரும்பி வந்து கொண்டிருந்த போது எங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. எங்களை எப்படி அவர்கள் சுற்றி வளைத்தனர் என்பது எங்களுக்கு தெரியவே இல்லை. அவர்கள் அதிக அளவில் மிகவும் மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களை பயன்படுத்தினர் என்று கூறினார். சில இடங்களில் அபாயங்கள் இருந்தன என்பதையும் அவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகாரிகள் கடந்து சென்ற ஜிராகவுன் மற்றும் டெக்லகுடெம் முற்றிலுமாக காலி செய்யப்பட்ட நிலையில் இருந்தது. இரண்டு கிராமங்களும் முற்றிலுமாக காலி செய்யப்பட்டு இருந்தது. ஆனால் ஏதோ தவறு நடந்திருக்கிறது என்பதை உணர எங்களுக்கு நேரம் ஆனது என்று மற்றொரு வீரர் கூறினார். அவர் அங்கிருந்து காட்டின் நடுவே இருக்கும் சாலை வழியே தப்பித்து ஓடு சில்கெர் முகாமிற்கு வந்துவிட்டார்.
ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது சக ஊழியர்களின் உடல்களையும் அவர்களது அணியின் மற்ற உறுப்பினர்களையும் மீட்டெடுக்க திரும்பிய அவர், மரங்களால் மூடப்பட்டிருக்கும் மலைகளை கைகாட்டி, நாங்கள் அங்கு தான் அனைத்து பகுதிகளில் இருந்தும் சுற்றி வளைக்கப்பட்டோம். நாங்கள் இறந்தவர்களையும், காயம் அடைந்தவர்களையும் காக்க முயற்சி செய்தோம். ஆனால் அவர்களை நாங்கள் கைவிட வேண்டிய சூழல் உருவாகியது.
டர்ரெம் முகாமில் இருந்து 12 கி.மீ அப்பால் இருக்கும் தெகுலுகுடம் பகுதியில் இருந்து தான் முதலில் தாக்குதல் ஆரம்பமானது. தெகுலுகுடம் மலையில் இருந்து கீழே வந்த பிறகு அந்த வீடுகளில் சில பாதுகாப்பு படையினர் தஞ்சம் அடைய முயன்றனர். ஆனால் அங்கும் குண்டுகள், கையெறி குண்டுகள் ஆகியவை மூலம் தாக்குதல் நடைபெற்றது. இதனை தொடர்ந்து அவர்கள் முற்றிலும் மலைப்பகுதியில் இருந்து சமவெளிப்பகுதிக்கு துரத்தப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தியன் எக்ஸ்பிரஸ் அங்கே சென்ற போது 7 உடல்கள் அங்கே கிடத்தி வைக்கப்பட்டிருந்தன.
மாவோய்ஸ்ட்டின் தாக்குதல் பிரிவு 1ன் தலைவர் ஹித்மாவின் நடமாட்டம் இருக்கும் என்று சத்தீஸ்கர் காவல்த்துறைக்கு உளவுத்துறை அதிகாரிகள் உள்ளீடு கொடுத்துள்ளனர். அதனை தொடர்ந்து தாக்குதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோப்ராவில் உள்ள உறுப்பினர்களும் ஹித்மா பிரிவினரின் தாக்குதல் தொடர்பான ஆதாரங்கள் இருப்பதை உறுதி செய்தனர்.
பிற உளவுத்துறை அமைப்புகளும் உள்ளீடு கொடுத்துள்ளன. இந்த எதிர்தாக்குதல் பணி, சில்ஜெரில் 60 முதல் 70 மாவோய்ஸ்ட்கள் மார்ச் 26ம் தேதி அன்று இருந்ததாக சி.ஐ.பி. தந்த உள்ளீடுகளின் அடிப்படையிலும், இண்டெலிஜென்ஸ் கொடகுடாவில் மார்ச் 25ம் தேதி அன்று 40 முதல் 50 மாவோய்ஸ்ட்கள் நடமாட்டம் இருந்ததாக தந்த உள்ளீட்டின் அடிப்படையிலும் தாக்குதலுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. சத்தீஸ்கர் மாநில பாதுகாப்பு பிரிவு இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இந்த தாக்குதல் குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்ததாக கூறியுள்ளனர்.
அவர்கள் பெற்ற தகவல்களின் தரம். இந்நாட்களில் எங்களுக்கு தகவல் தரும் முதன்மை ஆதாரங்களில் ஒன்று தண்ட்டேவாடா மலையில் பொருத்தப்பட்ட ரீசவர். அது சமீபத்தில் இடைமறிக்கப்பட்டது. இது ஒன்றும் புதிய முறை அல்ல. ஏற்கனவே மின்பாவில் ஒரு முறை இப்படி நடைபெற்றது. அங்கு இருக்கும் மாவோய்ஸ்ட்கள் அவர்களின் கோடுகளை நாங்கள் கவனித்து வருகின்றோம் என்று நன்றாகவே அறிந்துள்ளனர். நாங்கள் இங்கு வசமாக சிக்கவைக்கப்பட்டிருக்கின்றோம். அவர்கள் தாக்குதல் நடத்திய விதம், தாக்குதல் நடத்திய இடம் அனைத்தும் நன்றாக திட்டமிடப்பட்டதே. இலக்கில் நாங்கள் எதையும் பெறமாட்டோம் என்பதை அவர்கள் நன்றாக அறிந்தே வைத்திருக்கின்றனர். நாங்கள் அப்படி திரும்பி வரும் போது அவர்கள் காத்திருந்து எங்களை தாக்கினர் என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார். மற்றொரு அதிகாரி, “பெரிய, திறமையற்ற, 1,000-பணியாளர்கள்-கூடுதல் செயல்பாடுகள்” என்ற முழு கருத்தையும் திரும்பப் பெற வேண்டும் என்றார்.
தெளிவாக நாங்கள் கடுமையான தாக்குதலை எதிர்கொண்டோம். சிலர் முகாமிற்கு திரும்பி வந்தனர். பலர் திரும்பி சண்டையிட்டு உயிர் மாண்டனர். இந்த உண்மையை மறைக்க ஒன்றும் இல்லை. இரவில் 5 பேர் உயிரிழந்தனர். 21 பேர் அங்கிருந்து நகர்ந்தனர். மாவோய்ஸ்டுகளுக்கு எங்கள் வீரர்களின் ஆயுதங்களை எடுத்து செல்ல அவர்களுக்கு அதிக நேரம் இருந்தது. இதில் கவலை அடைய வேண்டிய விசயம் என்னவென்றால் இது மிகவும் அடர்ந்த காடாவும் இல்லை. பத்திரிக்கை துறையினர் சம்பவம் நட்டைபெற்ற இடத்திற்கு அடுத்த நாள் காலையிலேயே வந்திருந்தனர். ஏன் என்றால் அது முகாமிற்கும் சாலைக்கும் வெகு அருகிலேயே அமைந்திருந்தது. எப்படி முகாமிற்கு அருகிலேயே இப்படி மாட்டிக்கொண்டோம் என்பதை நாங்கள் விசாரிக்க வேண்டும். மாவோய்ஸ்ட்களின் தந்திரம் மற்றும் எங்களின் தந்திரங்கள் குறித்த ஆழமான தீவிர சிந்தனை வேண்டும். இது ஒன்றும் மோசமாக திட்டமிடப்பட்ட செயல்பாடு அல்ல என்று மூத்த அதிகாரி ஒருவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.