கடந்த சில வாரங்களில் சீனாவில் கொரோனா நோய்த்தொற்றுகளின் அதிகரிப்பு, வரவிருக்கும் மாதங்களில் நாடு ஒரு மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளைக் காணக்கூடும் என்ற எச்சரிக்கைகளைத் தூண்டியுள்ளது.
ராய்ட்டர்ஸ் அறிக்கையின்படி, சீனாவில் திங்கள்கிழமை ஐந்து மற்றும் ஞாயிற்றுக்கிழமை இரண்டு இறப்புகள் பதிவாகியுள்ளன, அதன் மொத்த இறப்பு எண்ணிக்கை 5,242 ஆக உள்ளது. திங்களன்று சுமார் 2,700 புதிய பாதிப்புகள் பதிவாகியுள்ளன, இது இரண்டு வாரங்களுக்கு முன்பு பதிவாகிய கிட்டத்தட்ட 40,000 பாதிப்புகளை விட கணிசமாகக் குறைவு. இருப்பினும், பல ஊடக அறிக்கைகள் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகக் கூறுகின்றன.
சீனாவில் கொரோனா பரவல்: என்ன நடக்கிறது?
பொது எதிர்ப்புகளைத் தொடர்ந்து கடந்த மாதம் முகமுடி அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியதிலிருந்து சீனா பாதிப்புகளின் அதிகரிப்பைக் காண்கிறது. அதன் பிறகு நோய்த்தொற்றுகள் வேகமாக பரவி வருகின்றன - தினசரி பாதிப்பு எண்ணிக்கை இந்த மாதத்தின் முதல் இரண்டு வாரங்களில் புதிய பதிவுகளைத் தொட்டது. இப்போது தினசரி பாதிப்புகள் குறைந்துவிட்டாலும், மருத்துவமனைகள் நிரம்பி வருகின்றன, காய்ச்சல் மருந்துகளின் பற்றாக்குறை உள்ளது மற்றும் பள்ளிகள் மீண்டும் ஆன்லைனுக்கு திரும்பி வருகின்றன.
சீனா கடந்த மூன்று ஆண்டுகளாக பூஜ்ஜிய கோவிட் கொள்கையை பின்பற்றி வருகிறது, இது பாதிப்புகளின் எந்தவொரு எழுச்சியையும் சமாளிக்க மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கைகளை உள்ளடக்கியது.
இதில் அறியப்பட்ட ஒவ்வொரு பாதிப்பும், அறிகுறியற்றதாக இருந்தாலும், கட்டாயமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டன, மேலும் சந்தேகிக்கப்படும் பாதிப்புகள் மற்றும் அவர்களின் தொடர்புகள் அனைத்தும் நீண்ட தனிமையில் வைக்கப்பட்டன. வெளிநாட்டு பயணிகள் கட்டாயமாக 10 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
மூன்று ஆண்டுகளாக வைரஸ் பரவுவதைக் கண்காணிப்பதில் இந்த நடவடிக்கைகள் வலிமிகுந்தவை ஆனால் பயனுள்ளவை. எவ்வாறாயினும், மக்கள்தொகையில் பெரும் பகுதியினர் ஒருபோதும் வைரஸால் பாதிக்கப்படவில்லை, மேலும் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி இல்லை எனில் இது மிகவும் எளிதில் பாதிக்கக்கூடியதாக ஆக்குகிறது.
எனவே, வைரஸ் தற்காப்பு நடவடவடிக்கைகளை தளர்த்த தொடங்கியதும், அது மக்களிடையே வேகமாக பரவியது. இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் சீனாவில் முதல்முறையாக பாதிப்புகள் அதிகரித்த போது அதுதான் நடந்தது.
வேகமாக பரவும் மாறுபாடு
BF.7 வைரஸ் திரிபு தான் இப்போது சீனாவில் ஆதிக்கம் செலுத்துகிறது, இது ஒமிக்ரான் வைரஸின் துணை மாறுபாடு ஆகும், இது ஒரு வருடத்திற்கும் மேலாக புழக்கத்தில் உள்ளது. 500க்கும் மேற்பட்ட ஓமிக்ரான் துணை வகைகள் தற்போது புழக்கத்தில் உள்ளன.
BF.7 என்பது BA.5.2.1.7க்கான பெயர், இது BA.5 துணை மாறுபாட்டிலிருந்து உருவானது.
BF.7 என்பது சீனாவில் மட்டுமல்ல. இது அக்டோபரில் அமெரிக்காவில் 5 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகளிலும், இங்கிலாந்தில் 7 சதவீதத்திற்கும் அதிகமான பாதிப்புகளிலும் பதிவாகியது.
ஆனால் வைராலஜிஸ்ட் டாக்டர் ஏக்தா குப்தாவின் கூற்றுப்படி, சீனாவின் புதிய எழுச்சிக்கும் அங்கு புழக்கத்தில் இருக்கும் மாறுபாட்டிற்கும் எந்த தொடர்பும் இல்லை.
சீனாவில் எழுச்சியை இயக்கும் ஒரு குறிப்பிட்ட மாறுபாடு இருப்பதாகக் கூற எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை. நீங்கள் Gisaid தரவைப் பார்த்தால் (Sars-CoV-2 மரபணுக்களின் உலகளாவிய தரவுத்தளம்), நாட்டிலிருந்து வேறுபட்ட எதுவும் பதிவேற்றப்படவில்லை, என்று வைராலஜிஸ்ட் டாக்டர் குப்தா கூறினார்.
பாதிக்கப்படக்கூடிய பெரிய மக்கள் தொகை, அதுதான் எழுச்சியின் முக்கிய இயக்கி.
நான் புரிந்துகொள்வதிலிருந்து, சீனாவில் கடுமையான ஊரடங்கால் மக்கள்தொகையில் பெரும் பகுதியினருக்கு நோய்த்தொற்று ஏற்படவில்லை, இயற்கையான தொற்று கொரோனாவுக்கு எதிராக பரந்த மற்றும் நீண்ட நோய் எதிர்ப்பு சக்தியை வழங்குகிறது என்பதை நாம் பார்க்கிறோம்.
இந்தியாவில் இப்போது மாஸ்க் இல்லாமல் கூட மக்கள் வெளியே சென்று பார்க்கிறோம், ஆனால் அதிக எண்ணிக்கையிலான பாதிப்புகளை நாம் புகாரளிக்கவில்லை, ஏனெனில் மக்களுக்கு இயற்கையான தொற்று மற்றும் அதிக அளவிலான தடுப்பூசிகள் ஆகியவற்றிலிருந்து கலப்பின நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்துள்ளது, என்று டாக்டர் குப்தா கூறினார்.
உலகத்தின் மீதான அக்கறை
இந்த எழுச்சி சீனாவில் இருந்தாலும், சர்வதேச பயணம் இப்போது கொரோனாவுக்கு முந்தைய நிலைக்குத் திரும்பியுள்ளதால் இது மற்ற நாடுகளுக்கும் பரவக்கூடும் என்ற அச்சம் உள்ளது. இன்னும் பெரிய கவலை என்னவென்றால், சீனாவில் அதிக எண்ணிக்கையிலான நோய்த்தொற்றுகள் பரவுவதை கருத்தில் கொண்டு, வைரஸ் மிகவும் ஆபத்தான மாறுபாடுகளாக உருவாகும் சாத்தியம் உள்ளது.
வைரஸ் மேலும் புதிய வடிவங்களில் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இந்த புதிய பிறழ்வுகள் எவ்வளவு ஆபத்தானவை என்பதை யாராலும் கணிக்க முடியாது என்று டாக்டர் விரந்தர் சௌஹான் கூறினார்.
பயங்கரமான கணிப்புகள்
சீனாவின் புதிய எழுச்சி, நாட்டில் மில்லியன் கணக்கான இறப்புகளை சுட்டிக்காட்டும் கடுமையான எச்சரிக்கைகளைத் தூண்டியுள்ளது. திங்கட்கிழமை நேச்சரில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை அடுத்த சில மாதங்களில் சீனாவில் கிட்டத்தட்ட 1 மில்லியன் மக்கள் இறக்கக்கூடும் என்று ஒரு ஆய்வை மேற்கோளிட்டுள்ளது.
சீனாவில் 1 மில்லியன் முதல் 2.1 மில்லியன் இறப்புகள் வரை கணிக்கப்பட்டுள்ள மற்ற மூன்று சமீபத்திய ஆய்வுகளை ராய்ட்டர்ஸ் பட்டியலிட்டுள்ளது.
கடந்த காலங்களில் இதுபோன்ற கணிப்புகள் இருந்தபோதிலும் - தொற்றுநோயின் தொடக்கத்தில் ஒரு ஆய்வு, ஏப்ரல் 2020 நடுப்பகுதியில் இந்தியாவில் 1-3 மில்லியன் மக்கள் இறக்க வாய்ப்புள்ளது என்று கூறியது. மற்ற நாடுகள் எதிர்கொண்டதை விட தற்போது சீனாவின் நிலைமை முற்றிலும் வேறுபட்டது.
சீனாவில் கிட்டத்தட்ட 1.4 பில்லியன் மக்கள் உள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் தொற்றுநோயால் பாதிக்கப்படலாம். ஒரே நேரத்தில் மிகப் பெரிய எண்ணிக்கையிலான மக்கள் நோய்வாய்ப்படுவர்.
சீன தடுப்பூசிகள், சினோவாக் மற்றும் சினோபார்ம் ஆகியவை மிகவும் பயனுள்ளதாக இல்லை என்று கூறப்படுகிறது. ஜூன் 2020 இல், அதன் மக்களுக்கு தடுப்பூசி போடத் தொடங்கிய முதல் நாடு சீனா. ஆனால் அந்த நேரத்தில் தடுப்பூசி முழுமையாக உருவாக்கப்படவில்லை என்பதையும் இது குறிக்கிறது.
தடுப்பூசிகள் எந்தவொரு குறிப்பிடத்தக்க வகையிலும் தொற்றுநோயைத் தடுக்கவில்லை, ஆனால் கடுமையான நோய்கள் மற்றும் பிற இடங்களில் ஏற்படும் இறப்புகளைத் தடுப்பதில் அவை மிகவும் பயனுள்ளதாக இருந்தன. ஆனால் தற்போது சீனாவில் இது சந்தேகமாக உள்ளது.
சீனாவின் தற்போதைய கொரோனா நெருக்கடியின் முடிவை தீர்மானிப்பதில் சீன தடுப்பூசிகளின் செயல்திறன் மிக முக்கியமான காரணியாக இருக்கும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.