scorecardresearch

சீனாவின் புதிய எல்லைச் சட்டமும், இந்தியாவும்

சீனாவின் புதிய சட்டம் 2022 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்தியா தனது எல்லைப் பகுதிகளைப் பற்றி கவலைப்பட வேண்டும் என்று சிலர் கூறுகிறார்கள். ஆனால், சீனாவின் நடவடிக்கைகள் சட்டம் இல்லாமல் கூட ஆக்ரோஷமாக தான் இருப்பதாகக் மற்றவர்கள் தெரிவிக்கின்றனர்.

சீனாவின் புதிய நில எல்லைச் சட்டமானது 2022ம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. கிழக்கு லடாக்கில் எல்லைப் பிரச்சனை தீர்க்கப்படாத நிலையில், இந்த புதிய சட்டத்தின் கீழ் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 15 இடங்களின் பெயர்களை சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் மாற்றியுள்ளது.

இதுதொடர்பாக திபெத்திய நாடாளுமன்றம் நடத்திய இரவு விருந்தில் கலந்து கொண்ட அமைச்சர் உட்பட இந்திய எம்.பி.க்களுக்கு, டெல்லியில் உள்ள சீன தூதரகம் கடிதம் எழுதியுள்ளது.

புதிய சட்டம் சொல்வது என்ன?

சீனாவின் தேசிய மக்கள் காங்கிரஸின் நிலைக்குழு “நாட்டின் நில எல்லைப் பகுதிகளின் பாதுகாப்பு மற்றும் சுரண்டல்” சட்டத்தை நிறைவேற்றியது.

புதிய சட்டத்தின் கீழ், சீனாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு புனிதமானது மற்றும் மீற முடியாதது. பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் நில எல்லைகளைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதே போல், எந்தவொரு செயலையும் எதிர்த்து போராட வேண்டும் என அந்நாட்டு ஊடகம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், இச்சட்டம் எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், பொருளாதாரம் மற்றும் சமூக மேம்பாட்டிற்கு ஆதரவளிக்கவும், எல்லைப் பகுதிகளில் திறப்பதற்கும், பொதுச் சேவைகள் மற்றும் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், மக்களின் வாழ்க்கை மற்றும் வேலைகளை ஊக்குவித்தல் மற்றும் ஆதரித்தல் மற்றும் இடையே ஒருங்கிணைப்பை மேம்படுத்துதல் போன்ற நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடுகிறது. அதேபோல், எல்லையில் பாதுகாப்பு, சமூக, பொருளாதார வளர்ச்சியை இடையிலான தொடர்பை வலுப்படுத்துகிறது, அதாவது, எல்லைப் பகுதிகளில் உள்ள கிராம மக்களின் வளர்ச்சியை ஊக்குவிப்பதாக உள்ளது.

எவ்வாறாயினும், “சமத்துவம், பரஸ்பர நம்பிக்கை மற்றும் நட்புரீதியான ஆலோசனை, நில எல்லை தொடர்பான விவகாரங்களை பேச்சுவார்த்தை மூலம் பேச்சுவார்த்தை மூலம் சமரசம் செய்வது, நீண்ட காலமாக நிலவும் எல்லைப் பிரச்சனைகள் கையாளுதல் போன்ற கொள்கைகளை மாநில அரசுகள் பின்பற்ற வேண்டும் என தெரிகிறது.

மேலும், எல்லையை மூடுவது உட்பட அவசர நடவடிக்கைகளை அரசு விதிக்கக்கூடிய நான்கு நிபந்தனைகளை சட்டம் வழங்குகிறது

சீனா ஏன் கொண்டு வந்தது?

வாஷிங்டன் DC-ஐ தளமாகக் கொண்ட ஜான் எல் தோர்ன்டன் சைனா சென்டர் ஆஃப் தி ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிட்யூட்டில் பிந்தைய முனைவர் பட்டம் பெற்ற ஷுக்சியன் லுவோ, பல காரணிகள் சீனாவை இந்த நடவடிக்கைக்கு வழிவகுத்திருக்கலாம் என்று நவம்பரில் எழுதியிருந்தார்.

அவர், இந்தச் சட்டம் பெய்ஜிங்கின் நில எல்லையின் பாதுகாப்பு குறித்த புதுப்பிக்கப்பட்ட கவலைகளை பிரதிபலிக்கிறது. அதே நேரத்தில் கடல் எல்லையில் தீர்க்கப்படாத சர்ச்சைகளை எதிர்கொள்கிறது.

அண்மையில், சீன-இந்திய எல்லைகளில் ஏற்பட்ட மோதல்கள் காரணமாக, நிலம் மற்றும் கடல்சார் களங்களில் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்க தன்னை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என முடிவு செய்திருக்கலாம்.

கோவிட்-19 தொற்றுநோயும் எல்லையில் அதிகக் கட்டுப்பாட்டை செலுத்த வேண்டிய கட்டாயத்தை பெய்ஜிங்கிற்கு எடுத்துரைத்தது.அதே போல், இந்த புதிய சட்டம் அமெரிக்கப் படைகள் திரும்பப் பெறுதல் மற்றும் தலிபான் கையகப்படுத்துதல் ஆகியவை “பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தின் மையமாக ஆப்கானிஸ்தான் மாறி, சின்ஜியாங் வரை பரவக்கூடும் என்ற பெய்ஜிங்கின் கவலைகளை காட்டுகிறது.

புதிய சட்டம் இந்தியாவை குறித்ததா?

இந்த சட்டம் இந்தியாவுக்கானது அல்ல என்றாலும், அது சில தாக்கத்தை ஏற்படுத்தும்.சீனாவும் இந்தியாவும் சர்ச்சைக்குரிய 3,488-கிமீ எல்லையைப் பகிர்ந்து கொள்கின்றன. இது, 14 நாடுகளுடன் சீனாவின் 22,457-கிமீ நில எல்லைகளில் மூன்றாவது மிக நீளமானது. இந்தியாவைத் தவிர, பூட்டான் (477 கிமீ) மட்டுமே சீனாவுடன் சர்ச்சைக்குரிய நில எல்லையைக் கொண்டுள்ளது.

இந்த புதிய சட்டம் அமலுக்கு வருவதன் காரணமாக தான் கிழக்கு லடாக்கில் பேச்சுவார்த்தையை சீனா நிறுத்தி வைத்திருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்து வருகிறது.கார்ப்ஸ் கமாண்டர்கள் கடைசியாக அக்டோபர் மாதம் சந்தித்து பேசினர். ஹாட் ஸ்பிரிங்ஸில் ரோந்துப் புள்ளி 15ல் இருந்து விலக சீனா ஒப்புக்கொள்ளும் என்று இந்தியா நம்பியது, ஆனால் அது நடைபெறவில்லை. சீனப் பிரதிநிதிகள் புதிய சட்டத்தைப் பயன்படுத்தி தங்களின் தற்போதைய நிலைகளை வலுப்படுத்த முயற்சிக்கலாம் என்ற கவலைகளுக்கு மத்தியில், அடுத்த கட்ட பேச்சுவார்த்தை தேதி அறிவிப்பு வருமென இந்திய அதிகாரிகள் காத்திருக்கின்றனர்.

PP15 தவிர, சீனா PP10, PP11, PP11A, PP12 மற்றும் PP13 ஆகிய டெப்சாங் சமவெளியில் இந்திய துருப்புக்களை அணுகுவதைத் தடுக்கிறது. அந்த வகையில், பொதுமக்கள் என கூறிக்கொண்டு, டெம்சோக்கில் உள்ள இந்தியாவின் எல்ஓசி பகுதியில் கூடாரங்களை அமைத்து, அதைக் காலி செய்ய மறுத்து வருகின்றனர்.

சீனாவின் அனுமதியின்றி எல்லைக்கு அருகில் நிரந்தர உள்கட்டமைப்புகளை உருவாக்குவதை புதிய சட்டம் தடைசெய்கிறது என்பது மற்றொரு முக்கிய அம்சமாகும். இந்தியாவும் சீனாவும் இடையே போர் தொடங்கிய முதலே, பல சாலைகள், பாலங்கள், மற்றும் பிற வசதிகளை வேகமாக உருவாக்கி வருகின்றன.

இந்தியா-சீனா உறவுகளில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இரண்டு வகையில் தாக்கம் ஏற்படலாம். புதிய சட்டத்தை பொருத்தப்படுத்தாமல், சீனா தனது நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.

புதிய சட்டம் சீனா அரசாங்கம் விரும்பினால் பயன்படுத்தும் ஒரு கருவி மட்டுமே என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.

ப்ரூக்கிங்ஸ் கட்டுரைபடி, பெய்ஜிங் அதன் விருப்பமான விதிமுறைகளில் எல்லைப் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான உறுதியை சமிக்ஞை செய்வதாகத் தோன்றுகிறது.புதிய சட்டம் ஒரு ஒட்டுமொத்த தீர்வை முன்கூட்டியே அமைக்கிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

2017-18ல் சீனாவுக்கான இந்தியத் தூதராக இருந்த கௌதம் பம்பாவாலே, தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசுகையில், “ஒவ்வொரு நாடும் அதன் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதில் ஈடுபட்டுள்ளது என்பதை புதிய சட்டம் “வெளிப்படையாகக் கூறுகிறது”. தற்போது தோன்றும் ஒரே கேள்வி, உங்கள் பகுதி என்று எதை கூறுகிறீர்கள் என்பது தான். நிலப்பிரச்சினையில் ஏற்கனவே இரண்டு இடத்திலும் தகராறு உள்ளது. சீனர்கள் பேச்சுவார்த்தைகள் மூலம் எல்லை அல்லது எல்ஏசியை தீர்க்க முயற்சிப்பதில் சோர்வடைந்துவிட்டதை தெளிவாகக் குறிப்பிடுகின்றனர். ஆட்கள் பலத்துடன் அதனை செய்துமுடிப்பார்கள் என்றார்.

திங்க் டேங்க் சென்டர் இதழில் ஓய்வு பெற்ற ராணுவ மேஜர் ஜெனரல் அசோக் குமார் எழுதியதாவது, இது இந்தியா மற்றும் பூட்டானுடனான எல்லைகளை ஒருதலைப்பட்சமாக வரையறுக்கும் சீனாவின் சமீபத்திய முயற்சியாகும். இந்தச் சட்டம் “இந்தியாவுக்குப் பெரும் தாக்கங்களை ஏற்படுத்தும். இந்தப் பிரச்சினைக்கு ராணுவத் தீர்வை விட முழு தேசத் தீர்வு தேவைப்படுகிறது.

624 ‘சியாகோங்’ கிராமங்களை விரைவாகக் கட்டுவதுடன், இந்தியாவுடனான சர்ச்சைக்குரிய நில எல்லைகளை கையாளவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி (CCP) எல்லைப் பிரச்சினைக்கு ராணுவமயமாக்கப்பட்ட தீர்வுக்கான நிலைமையை உருவாக்கியுள்ளது.

கிராமங்களுக்கும், புதிய சட்டங்களுக்கும் என்ன சம்பந்தம்

புதிய சட்டமானது, அனைத்து துறைகளிலும் உள்ள எல்லை கட்டுப்பாட்டு பகுதிகளில் எல்லை பாதுகாப்பு கிராமங்களை உருவாக்கிட ஊக்குவிக்குகிறது.

கடந்த ஜூலை மாதம் அருணாச்சல பிரதேச எல்லைக்கு அருகே திபெத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு அதிபர் ஜி விஜயம் செய்திருந்தார்.

அக்டோபரில், சட்டம் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, சிக்கிம் முதல் அருணாச்சல பிரதேசம் வரையிலான 1,346 கிமீ LACக்கு பொறுப்பான கிழக்கு ராணுவ தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மனோஜ் பாண்டே கூறியதாவது, “சொந்த கொள்கை அல்லது மூலோபாயத்தின்படி, எல்லைகளில் மாதிரி கிராமங்கள் வந்துள்ளன.ஆனால், எங்களுக்கு இது கவலைக்குரிய விஷயம் தான். எப்படி ஒரே நேரத்தில் சிவில் மற்றும் ராணுவத்தை கையாள வளங்கள் பயன்படுத்துவது என்பது தான் என தெரிவித்தார்.

முன்னாள் வடக்கு இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் டிஎஸ் ஹூடா இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் முன்பு கூறியதாவது, “சீனா ஏற்கனவே எல்லையில் மக்கள் குடியேற வைக்க தொடங்கியுள்ளது. ஆனால், அது இந்தியாவின் எல்லையாக கருதப்படுகிறது. வரும் காலத்தில்,எல்லை குறித்து விவாதிக்கப்படும் பட்சத்தில், சீனா ஏற்கனவே குடியேற தொடங்கிவிட்டோம் என விவாதிக்கும் என்றார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: China new law on land borders has come into effect from the new year