Advertisment

அருணாச்சல பிரதேச இடங்களுக்கு 3-வது பெயர் பட்டியலை வெளியிட்ட சீனா: நோக்கம் என்ன?

சீன குடிமை விவகார அமைச்சகம் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சீன, திபெத்திய மற்றும் பின்யின் எழுத்துக்களில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இந்தியாவில் உள்ள இடங்களுக்கு சீனா ஏன் பெயர் வைக்கிறது?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
china, LAC, arunachal pradesh, express explained, the indian express, renaming, chinese, LAC, mcmahon line, south tibet, ministry of external affairs

அருணாச்சலப் பிரதேசம்

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் புதிதாக சூட்டப்பட்ட பெயர்களின் பட்டியலை சீன அரசாங்கம் வெளியிட்ட 2 நாட்களுக்குப் பிறகு, இந்திய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 4) இந்த நடவடிக்கையை முற்றிலும் நிராகரிப்பதாகக் கூறினர். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அருணாச்சல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது. அது எப்போதும் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்கும்” என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Advertisment

மேலும், அவர், “இத்தகைய அறிக்கைகளை நாங்கள் பார்த்திருக்கிறோம். சீனா இத்தகைய முயற்சியை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. இதை நாங்கள் முற்றாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக இருந்து வருகிறது; இந்தியாவின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. கண்டுபிடிக்கப்பட்ட பெயர்களை வழங்குவதற்கான முயற்சிகள் இந்த யதார்த்தத்தை மாற்றாது” என்று கூறினார்.

சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் அருணாச்சலப் பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயர்களை சீன, திபெத்திய மற்றும் பின்யின் எழுத்துக்களில் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இது சீன அமைச்சரவைக்கு சமமான மாநில கவுன்சில் வழங்கிய புவியியல் பெயர்களின் விதிமுறைகளின்படி செயல்படுகிறது. ஏ.என்.ஐ செய்திப்படி, இந்த இடங்களில் இரண்டு நிலப்பகுதிகள், இரண்டு குடியிருப்பு பகுதிகள், ஐந்து மலை சிகரங்கள் மற்றும் இரண்டு ஆறுகள் உள்ளன. இது இடங்களின் பெயர்கள் மற்றும் அவற்றின் கீழ் உள்ள நிர்வாக மாவட்டங்களின் வகையையும் பட்டியலிட்டுள்ளது.

சீனா இப்படிச் செய்வது இது முதல் முறையல்ல. சீனா 2017 மற்றும் 2021-ம் ஆண்டுகளில் அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களின் நிலையான இரண்டு வெவ்வேறு பெயர்களை வெளியிட்டது.

இந்தியாவில் உள்ள இடங்களுக்கு சீனா ஏன் பெயர் வைக்கிறது?

அருணாச்சலப் பிரதேசத்தின் சுமார் 90,000 சதுர கிலோமீட்டர் பரப்பளவை சீனா தனது பகுதி என்று உரிமை கொண்டாடுகிறது. இது சீன மொழியில் ஜாங்னான் என்று அழைக்கிறது. தெற்கு திபெத் பற்றி மீண்டும் மீண்டும் குறிப்பிடுகிறது. சீன வரைபடங்கள் அருணாச்சலப் பிரதேசத்தை சீனாவின் ஒரு பகுதியாகக் காட்டுகின்றன. சில சமயங்களில் அடைப்புக்குறியில் அதை அருணாச்சல பிரதேசம் என்று குறிப்பிடுகிறது.

இந்த ஒருதலைப்பட்ச உரிமையை இந்தியப் பகுதிக்கு சுட்டிக்காட்ட சீனா அவ்வப்போது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அருணாச்சல பிரதேசத்தில் உள்ள இடங்களுக்கு சீனப் பெயர்கள் வைப்பது அந்த முயற்சியின் ஒரு பகுதியாகும்.

முந்தைய பட்டியல்களில் எந்த இடங்கள் இடம்பெற்றன?

அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 6 இடங்களைக் கொண்ட முதல் பட்டியல் ஏப்ரல் 14, 2017-ல் வெளியிடப்பட்டது. சீனாவின் சிவில் விவகார அமைச்சகம் அந்த நேரத்தில் நிலையான பெயர்களின் முதல் தொகுப்பை வெளியிடுவதாக கூறியது.

“இடத்தின் பெயர்களை நிர்வகிப்பதற்கான பொருத்தமான விதிமுறைகளின்படி, அந்த துறை சீனாவின் தெற்கு திபெத் பிராந்தியத்தில் சில இடப் பெயர்களை மாற்றி குறிப்பிட்டுள்ளது. தெற்கு திபெத்தில் உள்ள இடப் பெயர்களின் முதல் தொகுதியை (மொத்தம் ஆறு) வெளியிட்டுள்ளோம்” என்று சீன அரசு கூறியிருந்தது.

ரோமானிய எழுத்துக்களில் எழுதப்பட்ட அந்த பட்டியலில் இருந்த ஆறு பெயர்கள் ‘வோக்யின்லிங்’, ‘மிலா ரி’, ‘கொய்டெங்கர்போ ரி’, ‘மைன்குகா’, ‘புமோ லா’ மற்றும் ‘நம்கபுப் ரி’ ஆகும்.

பட்டியலிடப்பட்ட பெயர்களுடன் அட்சரேகை மற்றும் தீர்க்கரேகைகள் முறையே தவாங், கிரா தாடி, மேற்கு சியாங், சியாங் (மெச்சுகா அல்லது மென்சுகா ஒரு வளர்ந்து வரும் சுற்றுலாத் தலமாகும்), அஞ்சாவ் மற்றும் சுபன்சிரி என அந்த இடங்களைக் காட்டியுள்ளது.

இந்த ஆறு இடங்களும் அருணாச்சலப் பிரதேசத்தின் பரப்பளவில் உள்ளன. மேற்கில் வோக்யாயின்லிங், கிழக்கில் புமோ லா மற்றும் மற்ற நான்கு இடங்கள் மாநிலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளன.

முதல் பட்டியல் வெளியிடப்பட்டதும், இந்தியா எந்த அமைதியாக இருக்கவில்லை. சீனாவின் செயலைக் கண்டித்தது. வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், “உங்கள் அண்டை மாநிலங்களின் பெயர்களை மறுபெயரிடுவது அல்லது கண்டுபிடிப்பது சட்டவிரோத ஆக்கிரமிப்பை சட்டப்பூர்வமாக்காது” என்று கூறினார்.

பின்னர், நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, சீனா மாநிலத்தில் உள்ள இடங்களுக்கு மற்றொரு பெயர்களை வைத்தது. இதில் எட்டு குடியிருப்பு பகுதிகள், நான்கு மலைகள், இரண்டு ஆறுகள் மற்றும் ஒரு மலைப்பாதை ஆகியவை அடங்கும் என்று அரசு நடத்தும் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இம்முறையும் இந்த இடங்களின் அட்சரேகைகள் மற்றும் தீர்க்கரேகைகளை வழங்கியிருந்தது.

இரண்டாவது பட்டியலின் வெளியீட்டிற்கு கடுமையாக எதிர்வினையாற்றிய இந்தியா, அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்தது, இருக்கிறது, எப்போதும் இருக்கும் என்றும், புதிதாக சூட்டும் பெயர்கள் சீனாவின் கண்டுபிடிப்பு என்றும் கூறியது. சீன அதிகாரிகள் மாநிலத்தில் உள்ள மற்றொரு இடங்களின் பெயர்களை வெளியிட்ட பிறகு, இந்தியா ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 2) மீண்டும் இதை வலியுறுத்தியது.

ஆனால் இந்தப் பகுதிகளை உரிமை கொண்டாடுவதில் சீனாவின் வாதம் என்ன?

1914-ம் ஆண்டின் சிம்லா மாநாட்டில் - அதிகாரப்பூர்வமாக 'கிரேட் பிரிட்டன், சீனா மற்றும் திபெத் இடையேயான மாநாட்டில்-ல் ஒப்புக் கொள்ளப்பட்ட திபெத் மற்றும் பிரிட்டிஷ் இந்தியா இடையேயான எல்லையான மெக்மஹோன் கோட்டின் சட்டபூர்வமான நிலையை சீன மக்கள் குடியரசு மறுக்கிறது.

சிம்லா மாநாட்டில் சீனாவை பிரதிநிதித்துவப்படுத்தியது சீனக் குடியரசின் ப்ளீனிபோடென்ஷியரி. இது 1912-ல் குயிங் வம்சம் தூக்கியெறியப்பட்ட பின்னர் அறிவிக்கப்பட்டது. (தற்போதைய கம்யூனிஸ்ட் அரசாங்கம் 1949-ல் மக்கள் குடியரசு அறிவிக்கப்பட்டபோதுதான் ஆட்சிக்கு வந்தது.) சீனப் பிரதிநிதி சிம்லா மாநாட்டிற்குச் சம்மதிக்கவில்லை. சர்வதேச உடன்படிக்கைகளில் நுழைவதற்கு திபெத்துக்கு சுதந்திரமான அதிகாரம் இல்லை என்று கூறினார்.

சிம்லாவில் தலைமை பிரிட்டிஷ் பேச்சுவார்த்தையாளர் ஹென்றி மெக்மஹோன் பெயரால் அழைக்கப்படும் மெக்மஹோன் கோடு, பூட்டானின் கிழக்கு எல்லையிலிருந்து சீனா-மியான்மர் எல்லையில் உள்ள இசு ராஸி கணவாய் வரை வரையப்பட்டது. அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள மக்மஹோன் கோட்டின் தெற்கே உள்ள பகுதிக்கு சீனா உரிமை கோருகிறது.

தவாங் மற்றும் லாசாவில் உள்ள மடாலயங்களுக்கு இடையே இருந்த வரலாற்று உறவுகளின் அடிப்படையில் சீனாவும் தனது உரிமைகோரல்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

2017-ம் ஆண்டில், சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லு காங் கூறினார்: “சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான எல்லையில் சீனா ஒரு ஒத்திசைவான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை கொண்டுள்ளது. மாநில கவுன்சில் நிறுவிய விதிமுறைகளின்படி, அந்த சீன இடப் பெயர்களை பொதுமக்களுக்கு அறிவிப்பது சரியான நடவடிக்கை” என்று கூறினார்.

இந்த கருத்துகளால் சீனா என்ன ஆதாயம் தேடுகிறது?

முன்பு கூறியது போல், இந்தியப் பகுதியின் மீது தனது பிராந்திய உரிமைகளை நிலைநாட்டுவது சீன உத்தியின் ஒரு பகுதியாகும். இந்த உத்தியின் ஒரு பகுதியாக, அருணாச்சலப் பிரதேசத்திற்கு இந்திய உயரதிகாரி ஒருவர் வரும்போதெல்லாம் சீனா சீற்றத்துடன் அறிக்கைகளை வெளியிடுவது வழக்கம்.

பெய்ஜிங், அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் உடைமை என உலகத்தால் உறுதியாக நிறுவப்பட்டு அங்கீகரிக்கப்பட்டிருந்தாலும், அது சட்டவிரோதமானது என்று அதன் நிலையான மற்றும் தெளிவான நிலைப்பாட்டை தொடர்ந்து வலியுறுத்துகிறது. மேலும், எல்லைப் பிரச்சினையை சிக்கலாக்க நடவடிக்கை எடுப்பதை நிறுத்துமாறு புது டெல்லியைக் கேட்டுக்கொள்கிறது.

தலாய் லாமா அருணாச்சலப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த சில நாட்களுக்குப் பிறகு, 2017-ம் ஆண்டில் மறுபெயரிடுவதற்கான முதல் தொகுதி வந்தது. இதற்கு எதிராக பெய்ஜிங் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தது. இருப்பினும், தெற்கு திபெத்தில் பயன்படுத்தப்படும் அனைத்து பெயர்களும் சிறுபான்மை இனக்குழுக்களால் தலைமுறைகளாக வாய்வழியாகப் பெறப்பட்டவை என்பதால், புதிய பெயரிடுதல் அவசியம் என்று செய்தித் தொடர்பாளர் லூ கூறினார்.

“தெற்கு திபெத் பிராந்தியத்தின் இறையாண்மை உரிமை கோருவதற்கான சீனாவின் முன்மொழிவு ஒரு முக்கிய வரலாற்று, கலாச்சார, நிர்வாக மற்றும் அதிகார வரம்பைக் கொண்டுள்ளது என்பதை இந்தப் பெயர்கள் ஒரு அம்சத்திலிருந்து பிரதிபலிக்கின்றன மற்றும் சுட்டிக்காட்டுகின்றன” என்று லூ கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment