சீனாவின் கொரோனாவேக் தடுப்பூசியின் பரிசோதனைகள் தி லேன்செட் எனும் பிரபல மருத்துவ பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளது. அதில் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் 3-17 வயதுடைய குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரிடையே வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதாகவும் தெரியவந்துள்ளது.
மொத்தம் 550 பேரிடம் இந்த சோதனை நடத்தப்பட்டது. Sinovac தயாரித்த இரண்டு டோஸ் தடுப்பூசிகளை செலுத்திக்கொண்ட 96%-க்கும் மேற்பட்ட குழந்தைகள் மற்றும் இளம் பருத்தினர் இடையே நடத்தப்பட்ட சோதனையில் SARS-CoV-2 வுக்கு எதிரான நோய் எதிர்ப்பு திறனை இந்த தடுப்பூசி உருவாக்குவது தெரியவந்துள்ளது.
தடுப்பூசி செலுத்திய பிறகு பெரும்பாலான விளைவுகள் லேசான அல்லது மிதமானவைகயாக இருந்தன. பொதுவாக ஊசி செலுத்திய இடத்தில் உண்டாகும் வலி போன்றவை மட்டுமே இருந்துள்ளது.
அக்டோபர் மற்றும் டிசம்பர் 2020 மாதங்களுக்கிடையில் 1/2 மருத்துவ பரிசோதனையை நடத்தினர். தடுப்பூசி அல்லது கட்டுப்பாடு இரண்டு டோஸ்களில் (1.5 அல்லது 3 மைக்ரோகிராம்) இன்ட்ராமுஸ்குலர் ஊசி மூலம் வழங்கப்பட்டது.
முதல் கட்ட பரிசோதனையில் 1.5 மைக்ரோகிராம் மற்றும் 3 மைக்ரோகிராம் குழுக்களில் 100% பேர் பங்கேற்றனர். அனைவரது உடலிலும் ஆன்டிபாடிகள் உருவாகின. அதிலும் 3 மைக்ரோகிராம் குழுவில் பங்கேற்றவர்களின் வலுவான எதிர்ப்பு சக்தி கண்டறியப்பட்டது. 2ஆம் கட்ட பரிசோதனையில் 97% பேர் 1.5 மைக்ரோகிராம் குழுவில் பங்கேற்றனர். இது 97% எதிர்ப்பு திறானை உருவாக்கியது.
சினோவாக் லைஃப் சயின்சஸ் கோ, லிமிடெட் நிறுவனத்தின் கியாங் காவ் கூறுகையில், கொரோனாவேக் ஒரு வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது என்பது ஊக்கமளிக்கிறது. மேலும் மற்ற பிராந்தியங்களில் ஆய்வுகள் மேற்கொண்டால்அதுவும் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினர் சம்பந்தபட்ட நோய் தடுப்பு வழிமுறைகளை தெரிவிக்க தகுந்த தரவுகளை வழங்க முடியும் என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil