Advertisment

கிறிஸ்துமஸ் மரத்தின் பாரம்பரியம் எப்படி தோன்றியது?

கிறிஸ்துமஸ் மரம் எப்படி கிறிஸ்துமஸின் பிரிக்க முடியாத பகுதியாக மாறியது என்பதை இங்கே பார்க்கலாம்.

author-image
WebDesk
New Update
Christmas tree emerge

How did the tradition of the Christmas tree emerge?

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

கிறிஸ்மஸ் என்றாலே உடனே நினைவுக்கு வருவது கிறிஸ்துமஸ் தாத்தாவும், கிறிஸ்துமஸ் மரங்களும் தான். இதில் பொதுவாக ஒரு பைன், ஸ்ப்ரூஸ் அல்லது ஃபிர் மரங்கள் விளக்குகள், வேடிக்கையான அலங்காரங்கள், பளபளப்பான டின்ஸல் ஆகியவற்றால் போர்த்தப்பட்டிருக்கும்.

Advertisment

ஆனால் கிறிஸ்துமஸ் மரம் வைத்திருக்கும் பாரம்பரியம் பைபிளில் இல்லை. இது ஜெர்மனியில் தோன்றிய ஒரு நவீன கண்டுபிடிப்பு..

கிறிஸ்துமஸ் மரம் எப்படி கிறிஸ்துமஸின் பிரிக்க முடியாத பகுதியாக மாறியது என்பதை இங்கே பார்க்கலாம்.

தோற்றம்

கிறிஸ்துமஸ் மரத்தின் தோற்றம் பற்றிய புராணக் கதைகளுக்கு பஞ்சமில்லை. அதில் மிகவும் பிரபலமான ஒன்று, 16 ஆம் நூற்றாண்டின் புராட்டஸ்டன்ட் சீர்திருத்தவாதியான மார்ட்டின் லூதர், விடுமுறைக்காக பைன் மரத்தை அலங்கரித்த முதல் நபர் என்று சொல்வது உண்டு. எனினும், இது உண்மையல்ல. அவரது கடிதங்களிலோ அல்லது அவரது சமகாலத்தவர்களின் சுயசரிதையிலோ இது போன்ற எந்தக் குறிப்பும் இல்லை. 

கிறிஸ்மஸ் மரம் 17 ஆம் நூற்றாண்டில் தென்மேற்கு ஜெர்மன் எல்லையான அல்சேஸ் ஸ்ட்ராஸ்பேர்க்கில் தோன்றியது, இது தற்போதைய பிரான்சில் உள்ள ரைன்லாந்தின் ஒரு பகுதியாக இருந்தது.

குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தின் விரிவுரையாளரான ஜேம்ஸ் ஏடி லான்காஸ்டர், தி கான்வேர்சேஷனின் ஒரு கட்டுரையில்:ஸ்ட்ராஸ்பேர்க்கின் ஜெர்மன் குடிமக்கள் கிறிஸ்துமஸ் நாளில் தீர்ப்பு பாரம்பரியத்தின் ஒரு பகுதியாக ஒரு மரத்தைச் சேர்த்தனர்.

அன்று பெற்றோர் குழந்தைகளை மதிப்பிடுவார்கள். நன்றாக இருந்தால், மரத்தடியில் சாக்லேட் வைப்பார்கள். மோசமாக இருந்தால், சாக்லேட் இருக்காது - தீர்ப்பு நாளில் என்ன வரப்போகிறது என்பதற்கான குறிப்பு இது.

இந்த சடங்கு படிப்படியாக 1770 களில் ஜெர்மனியின் பிற பகுதிகளுக்கும் பரவியது. ஆனால் இது 1830 கள் வரை நாட்டில் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அதே நேரத்தில் அது ஐக்கிய இராச்சியத்தை அடைந்து அமெரிக்காவில் பிரபலமடையத் தொடங்கியது, என்று லான்காஸ்டர் எழுதினார்.

பிரபலம்

மான்செஸ்டரில் உள்ள ஜெர்மன் வணிகர்களால் கிறிஸ்துமஸ் மரம் இங்கிலாந்திற்கு வந்தது.

இது மட்டுமின்றி, அதே நேரத்தில் ஜெர்மன் வம்சாவளியைச் சேர்ந்த மன்னர்கள் ஜார்ஜ் III மற்றும் வில்லியம் IV ஆகியோர், பிரிட்டிஷ் மேற்குடி மக்களுக்கு இந்த பாரம்பரியத்தை அறிமுகப்படுத்தினர்.

இந்த சடங்கு இங்கிலாந்தில் 1837 முதல் 1901 வரை ஆட்சி செய்த ராணி விக்டோரியா மற்றும் அவரது கணவர் இளவரசர் ஆல்பர்ட் ஆகியோரால் பரவலாக பிரபலமாகியது. இளவரசர் ஆல்பர்ட் 1840 இல் ஹவுஸ் ஆஃப் விண்ட்சரில் முதல் முறையாக ஒரு கிறிஸ்துமஸ் மரத்தை அமைத்தார்.

முதலில், மக்கள் தங்கள் மரங்கள் சிறியதாக இருந்ததால் அவற்றை டேபிளில் வைத்தார்கள். ஆனால் நார்வேயில் இருந்து பெரிய மரங்களைப் பெறுவது சாத்தியம் ஆனதும், மக்கள் தங்கள் மரங்களை தரையில், கீழே பரிசுகளுடன் வைக்கத் தொடங்கினர், என்று பிபிசி ஒரு அறிக்கையில் கூறியது.

அமெரிக்காவில், கிறிஸ்துமஸ் மரங்கள் 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வந்தன. அதன் அறிமுகத்திற்கான காரணம் பண்டிகை கொண்டாடுவது மட்டும் அல்ல. இது கிறிஸ்மஸ் சமயத்தில் நடக்கும் ரவுடித்தனத்தை கட்டுப்படுத்துவதுடன் தொடர்புடையது.

1800 களில், அமெரிக்காவில் மக்கள் கிறிஸ்மஸை ஒரு திருவிழாவாகக் கொண்டாடினர், அதில் குடிப்பழக்கம், காழ்ப்புணர்ச்சி மற்றும் மோசமான செயல்கள் இருந்தன என்று லான்காஸ்டர் எழுதினார். இதை சமாளிக்க, உட்புற, குழந்தைகளுக்கு விருப்பமான கிறிஸ்துமஸ் மரம் பாரம்பரியம் பிரச்சாரம் செய்யப்பட்டது.

வணிகமயமாக்கல்

கிறிஸ்மஸ் மரத்தின் கீழ் பரிசுகளை வைப்பது அமெரிக்காவில் 1840 களில் தொடங்கியது. இந்த யோசனை ஜெர்மன் குடியேறியவர்களிடமிருந்து வரவில்லை, மாறாக புத்தக வெளியீட்டாளர்களிடமிருந்து வந்தது, அவர்கள் பரிசுகளை வழங்குவதை சந்தைப்படுத்தல் உத்தியாகக் கண்டனர்.

புத்தக விற்பனையாளர்கள் கிறிஸ் கிரிங்கிலின் கிறிஸ்துமஸ் மரம் (1845) போன்ற சிறுகதைகள் மற்றும் கவிதைகளின் தொகுப்புகளை வெளியிட்டனர்.

இதில் குழந்தைகள் புத்தகங்கள், வாள்கள், டிரம்ஸ் அல்லது பொம்மைகள் ஆகியவற்றை பரிசாக பெற்றனர், என்று லான்காஸ்டர் கூறுகிறார்.

குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்குவது வெளியில் நடக்கும் போக்கிரித்தனத்தில் இருந்து அவர்களை வீட்டிற்குள்ளேயே வைத்திருக்க ஒரு வழியாக முன்னிறுத்தப்பட்டது.

இந்த புத்தகங்கள், கிறிஸ்துமஸ் மரத்தின் கீழ் பரிசுகளை வைப்பது பைபிள் சடங்கு மற்றும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களின் இன்றியமையாத பகுதியாகும் என்று பெற்றோரை நம்ப வைத்தது.

Read in English: How did the tradition of the Christmas tree emerge?

Christmas
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment