Interstellar to re-release: 'இன்டர்ஸ்டெல்லர்' படத்தில் இத கவனிச்சீங்களா? மிஸ் பண்ணி இருந்தா மார்ச் 14-ல் பாருங்க!

இந்த ஆண்டில் 2-வது முறையாக மீண்டும் 'இன்டர்ஸ்டெல்லர்' படம் ரீ-ரிலீசாக உள்ளது. மார்ச் 14 முதல் 21 வரை இந்திய ஐமேக்ஸ் திரைகளில் ரீ-ரிலீசாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

author-image
Meenakshi Sundaram S
புதுப்பிக்கப்பட்டது
New Update
rerelase

கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான சயின்ஸ் பிக்சன் படம் 'இன்டர்ஸ்டெல்லார்'

கடந்த பிப். 7 முதல் 14 வரை இந்தியாவில் ஐமேக்ஸ் திரைகளில் இன்டர்ஸ்டெல்லர் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதனை பல ரசிகர்கள் கண்டுகளித்தனர். இதில் ரூ.2 கோடிக்கும் அதிகமாக வசூலைக் குவித்தது. இந்நிலையில், மீண்டும் 'இன்டர்ஸ்டெல்லர்'படம் ரீ-ரிலீசாக உள்ளது. மார்ச் 14 முதல் 21 வரை மீண்டும் இந்திய ஐமேக்ஸ் திரைகளில் ரீ-ரிலீசாகும் என அறிவித்துள்ளனர். கடந்தமுறை பார்ப்பதற்கான வாய்ப்பும் டிக்கெட்டும் கிடைக்காத ரசிகர்கள் இம்முறை தவறவிடக்கூடாது என உற்சாகமடைந்துள்ளனர்.

Advertisment

இன்டர்ஸ்டெல்லர் படம் அறிவியல் புனைகதை உலகில் ஒரு மைல்கல் என்றே சொல்லலாம். வெறும் விண்வெளிப் பயணம் பற்றியது மட்டுமல்ல, காலம், இடம் மற்றும் மனித உறவுகள், உணர்வு போன்ற ஆழமான தத்துவங்களையும் பேசுகிறது.படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்று ஐந்தாவது பரிமாணம் (5th Dimension) என்ற கருத்து. இந்த ஐந்தாவது பரிமாணம் என்ன, அது படத்தில் எப்படி சித்தரிக்கப்படுகிறது

nolan

இன்டர்ஸ்டெல்லர் படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு முன் சில விஷயங்களைத் தெரிந்துக்கொண்டால் படத்தை ஈஸியாக புரிந்துக் கொள்ளலாம்.

Advertisment
Advertisements

உலகம் முழுவதும் ஒருவகையான தாவர நோய் பரவி பயிர்களை முற்றிலுமாக அழித்துவிடுகிறது. குறிப்பாக நெல், கரும்பு என மக்காச் சோளத்தை தவிர அனைத்தும் அழிந்து போகிற நிலை ஏற்படுகிறது.

நோயை உருவாக்கும் பாக்டீரியா நைட்ரஜன் மூலமாக அதிகமாக பரவும் என விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கின்றனர். ஆனால், நமது பூமியில் 78% நைட்ரஜன் இருப்பதால், இந்தப் பாக்டீரியாவை அழிக்க முடியவில்லை. எனவே மொத்த மக்களும் மக்காச்சோள விளைச்சலை நம்பிதான் இருக்கிறார்கள்.

nola 2

ஹீரோவின் மகள் ''மார்ஃப்'' ரூமில், அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த புத்தகங்கள் அடிக்கடி தானாக கீழே விழுகின்றன. அதேபோல, அந்த ரூமில் தூசியும் அதிகமாக படிகிறது. இதை மார்ஃப் பேய் என்கிறார். ஆனால் ஹீரோவான தந்தை, ஈர்ப்பு விசை ஒழுங்கிண்மை காரணமாகத்தான் இது நடக்கிறது என்று புரிய வைக்கிறார். 

ஆனால் அடுத்த நாள், மார்ப் ரூமில் படிந்த தூசியில் ஏதோ எழுதப்பட்டிருக்கிறது. இதை பார்த்த அவள், அப்பாவை கூப்பிட்டு காட்டுகிறாள். அது ஒரு மேப், அட்சரேகை, தீர்க ரேகையை குறிக்கும் மேப். அந்த புதிரை கண்டுபிடித்து அது எந்த இடத்தை குறிக்கிறது? என்பதை தெரிந்துக்கொள்ள மகளும், அப்பாவும் கிளம்புகிறார்கள். இவர்கள் போய் சேரும் இடம்தான் நாசாவின் ரகசிய ஆய்வுக்கூடம்.

உலகமே சோத்துக்கு கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கும் இந்த நேரத்தில், விண்வெளி ஆய்வுகளுக்கு எதற்குப் பணம்? என மக்கள் கொந்தளித்ததால், நாசா தனது ஆய்வை ரசகியமாக நடத்தி வருகிறது. 

இந்த ஆய்வு கூடத்திற்குதான் ஹீரோவும், மகள் மார்ஃப் இருவரும் வந்து சேர்கிறார்கள். ஆய்வு மையத்தின் மூத்த விஞ்ஞானி ஹீரோவை அழைத்து, "இங்க பாருப்பா, உலகத்துல இனிமே மனுஷங்களால வாழ முடியாது. எனவே நாங்க வேறு ஒரு உலகத்தை கண்டுபிடிக்க முடிவு செஞ்சோம். அதற்காக ஆய்வு செஞ்சு, பூமி மாதிரியே இருக்கக் கூடிய கிரகங்களை அடையாளம் கண்டு, அங்கு மனுஷங்களால வாழ முடியுமா? என்பதை தெரிந்துகொள்ள விண்வெளி வீரர்களையும் அனுப்பி வைத்தோம்.

அவர்களிடமிருந்து சில பாசிட்டிவ் தகவல்கள் வந்திருக்கிறது. அங்கு போய் நீங்கள் பார்த்துவிட்டு வர வேண்டும். உங்க கூட மூனு பேரு வருவாங்க" என சொல்லி அவரை விண்வெளிக்கும் அனுப்பிவைத்தார். இது மகள் மார்ஃப்-க்கு பிடிக்கவில்லை. அப்பா போக கூடாது என அழுகிறாள். ஆனால் அழுகையால் ஹீரோவின் பயணத்தை தடுக்க முடியவில்லை.

interstellar 7

விண்வெளிக்கு சென்ற ஹீரோ டீம், சனி கோள் பக்கத்தில் ஒரு வாரம்ஹோல் (wormhole) இருப்பதை கண்டுபிடிக்கிறது. அந்த வழியாக வேறு ஒரு இணை பிரபஞ்சத்திற்குச் செல்கிறார்கள். 

நாம் வாழும் பூமி, சூரியக்குடும்பம் போல வேறுஒரு இடத்தில் இருக்கும் பிரபஞ்சம்தான் இணை பிரபஞ்சம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் பயணித்து 3 கிரகங்கைளை ஆய்வு செய்து பல பிரச்னைகளில் சிக்கி கொள்கிறார்கள்.

அதில் 2 கிரகங்களில் மனிதர்கள் வாழ்வதற்கு வாய்ப்பு இல்லை என்று தெரிய வந்திருக்கிறது. மூன்றாவதாக உள்ள கிரகத்திற்கு போக வேண்டும். இதற்கிடையில் இந்த டீமின் ராக்கெட் பழுதாகிவிடுகிறது. எனவே, போதுமான எரிபொருள் இல்லை. ஆனால் ஒரே ஒரு வழி மட்டும் இருக்கிறது. 

interstella

'பிளாக் ஹோல்' (black hole) ஈர்ப்பு விசையை பயன்படுத்தி, அங்கிருந்து மூன்றாவதாக இருக்கும் கிரகத்திற்கு போக முடியும். ஆனால் ராக்கெட்டின் எடையை குறைக்க வேண்டும். எனவே ஹீரோ சிறிய ராக்கெட்டை எடுத்துக்கொண்டு தனியாக சென்றுவிடுகிறார். டீமின் மற்றவர்கள் மூன்றாவது கிரத்திற்கு செல்கிறார்கள்.

தனியாக வந்த ஹீரோ 'பிளாக் ஹோலில்' விழுகிறார். உண்மையில் இதில் மாட்டினால் தப்பிக்க முடியாது. ஆனால் ஹீரோ தப்பித்து வருவதாக திரைப்படத்தில் காட்டப்பட்டிருக்கிறது. 

2

இங்கு ஹீரோ சந்திக்கும் விஷயங்கள் பார்வையாளர்களை குழப்பலாம். அதாவது ஹீரோ ஐந்தாவது பரிமாணத்திற்கு (5th Dimension) செல்கிறார். அங்கிருந்து அவரது மகளை ஈர்ப்பு விசை மூலம் தொடர்புகொள்ள நினைக்கிறார். இதனால்தான் மார்ப் ரூமில் புத்தகங்கள் தானாக விழும் பிரச்சனை ஏற்படுகிறது.

ஆக ஹீரோவை இந்த இடத்திற்கு அழைத்து வந்தது, யார்? என்பது இந்தப் படத்தின் பிரதான கேள்வியாக இருக்கிறது. அவர்களை 'THEY' என குறிப்பிடுகிறார்கள். இவர்கள் 5வது பரிணாமத்தில் வாழ்வதாக சொல்லப்படுகிறது. இவர்கள் நேரத்தையும் கட்டுப்படுத்த முடியுமாம். 

இவர்கள் மனிதர்கள்தான் என்று சிலர் கூறுகிறார்கள். 'THEY' என்பது நாம்தான் என படத்தின் இயக்குநர் கிறிஸ்டோபர் நோலன் கூறுகிறார். எதிர்காலத்தில் நம்மால் நேரத்தையும் கட்டுப்படுத்த முடியும் என்று திரைப்படத்தின் மூலம் அவர் கூறியிருக்கிறார். 

interstellar 9

முக்கிய குறிப்பு:

படம் பார்ப்பதற்கு முன்பு Black Hole, Wormhole, Gravity, Singularity, 3 Dimension, 4th Dimension, 5th Dimension, Time Travel என்றால் என்னவென்று தெரிந்துகொண்டால், படம் பார்க்கும்போது திருத்திருவென முழிக்க மாட்டீர்கள்..

christopher nolan interstellar re-release

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: