அக். 15 முதல் திரையரங்குகள் திறக்கப்படும்: புதிய விதிகள்; வழிகாட்டு நெறிமுறைகள்

பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு ஏறக்குறைய 7 மாதங்களுக்குப் பிறகு, திரையரங்குகள் அக்டோபர் 15ம் தேதி மீண்டும் திறக்கப்பட உள்ளன. புதிய வழிகாட்டுதல்களின்படி இப்போது என்ன மாற்றம் ஏற்படும்? மக்கள் நினைவில் கொள்ள வேண்டியது என்ன?

By: October 6, 2020, 7:27:05 PM

அரசாங்கம் அக்டோபர் 15 முதல் திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ்களை மீண்டும் திறப்பதற்கான வழிகாட்டுதல் நெறிமுறைகளை செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. புதிய அன்லாக் 5 வழிகாட்டுதல்களின்படி, திரையரங்குகள் மற்றும் மல்டிபிளெக்ஸ்கள் 50 சதவீத இருக்கை பார்வையாளர்களுடன் மீண்டும் திறப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் இன்று காலை நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அவற்றை அனைத்து திரையரங்குகளும் மல்டிபிளெக்ஸ்களும் பின்பற்ற வேண்டும்.

திரைப்படங்களில் என்ன மாற்றம்?

பொதுமுடக்க அறிவிக்கப்பட்டு கிட்டத்தட்ட 7 மாதங்களுக்குப் பிறகும், வழிகாட்டு நெறிமுறைகளின்படி, திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ்கள் அக்டோபர் 15 முதல் திறக்க அனுமதிக்கப்படும். இருப்பினும், கலையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.

நிலையான வழிகாட்டு நெறிமுறைகளின்படி, பார்வையாளர்கள் அமரும்போது தனிநபர் இடைவெளி விட்டு அமர்வது கட்டாயமாகும். அதனால், ஒரு இருக்கை இடைவெளி விட்டு அமர வேண்டும். இரண்டு பேர்களுக்கு இடையில் ஒரு இருக்கை காலியாக இருக்க வேண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், திரையரங்குகள் சானிடைசர்கள், கை கழுவுவதற்கான வசதிகளை வழங்க வேண்டும். சினிமாவுக்கு செல்பவர்கள் அனைவரும் உள்ளே நுழைவதற்கு முன்பு, உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களிடம் ஆரோக்யா சேது செயலி பயன்பாட்டை ஊக்குவிக்க வேண்டும். திரையரங்குகளுக்குள் தொற்று அறிகுறி இல்லாதவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

பாக்ஸ் ஆஃபிஸில் டிக்கிட் வாங்க முடியுமா?

திரையரங்குகளில் பாக்ஸ் ஆபிஸ் கவுண்ட்டர்கள் தொடர்ந்து திறந்திருக்கும். அமைச்சகம் ஆன்லைன் முன்பதிவுகளை முடிந்தவரை ஊக்குவித்துள்ளது.

பாக்ஸ் ஆபிஸ் கவுண்ட்டர்கள், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகள்படி, நாள் முழுவதும் நாள் முழுவதும் திறந்திருக்கும். கூட்டத்தைத் தவிர்ப்பதற்காக முன்பதிவு செய்ய அனுமதிக்கப்படும். மேலும், தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டியும் வரிசையாக செல்ல அறிவுறுத்தி அறிவிப்பு அட்டைகள் வைக்கப்படும்.

திரையரங்குகளுக்குள் உணவு மற்றும் பானங்கள் விற்பனை பற்றி கூறப்பட்டுள்ளது என்ன?

சினிமாவுக்கு செல்வோர் இடைவேளையின் போது வெளியே செல்வதை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி, அரங்குக்குள் உணவு மற்றும் பானங்கள் விநியோகிக்க அனுமதிக்கப்படாது. பேக் செய்யப்பட்ட உணவு மற்றும் பானங்கள் மட்டுமே விற்கப்படும். நீண்ட வரிசைகளைத் தடுக்க உணவு கவுண்ட்டர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.

வேறு என்ன மாற்றங்கள்?

காட்சி நேரங்களில், ஒரு படம் துவங்குவதற்கு முன்பு திரையரங்குகளுக்கு வெளியே பெரிய கூட்டம் கூடுவதைத் தடுக்க சினிமா அரங்குகள் காட்சி தொடங்கப்படும் நேரங்களைக் தெரிவித்து பலகைகளை வைத்திருக்க வேண்டும்.

திரையரங்குகளில் பாக்ஸ் ஆபிஸ் உள்ளிட்ட பிற பகுதிகளையும் தவறாமல் சுத்தப்படுத்த வேண்டும். சினிமா அரங்குகளுக்குள் அனைத்து ஏர் கண்டிஷனர்களின் வெப்பநிலை அமைப்பும் 24-30 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும்.

திரையிடலுக்கு முன்னும் பின்னும் இடைவேளையின்போதும் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளி பின்பற்றுவது, ஹாண்ட் சானிடைசர் பயன்படுத்துவது குறித்த பொது சேவை அறிவிப்புகள் செய்யப்படும். தேவை ஏற்பட்டால் தொடர்புத் தடமறிய உதவுவதற்காக சினிமா மண்டபத்தில் உங்கள் தொலைபேசி எண்ணை பார்வையாளர்கள் வழங்க வேண்டியிருக்கலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Cinema theatres multiplexes to open from october 15 new rules standard operating procedures

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X