Advertisment

“குடியுரிமை திருத்த சட்டமும், தமிழ் அகதிகளும்” - நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?

சிலர் கடல் மார்க்கம் மூலமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Citizenship Act in context of Tamil Nadu’s politics, refugees’ issue

Citizenship Act in context of Tamil Nadu’s politics, refugees’ issue

Citizenship Act in context of Tamil Nadu’s politics, refugees’ issue : திங்கள் கிழமையன்று (17/12/2019) தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் புதிய குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினார்கள். பாஜக இந்த நாட்டை அழிக்கிறது என்றும் அதற்கு துணையாக அதிமுக அந்த மசோதாவுக்கு வாக்களித்ததாகவும் குரல் கொடுத்தனர். காஞ்சிபுரத்தில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற முக ஸ்டாலின், அகதி முகாம்களில் வாழும் இந்திய தமிழர்களுக்கும், இலங்கை தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று போராட்டம் நடத்தினர்.

Advertisment

சி.ஏ.ஏவுக்கு எதிராக போராடும் மாணவர்கள்

தமிழ் அகதிகளுக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது அகதிகள் யார், சட்டத்திற்கு புறம்பாக நாட்டுக்குள் நுழைந்தவர்கள் யார் என்ற விவாதம் முன்வைக்கப்பட்டது. மேலும் மதம் சார்ந்த ஒடுக்குமுறைகளால் இந்தியாவுக்குள் வந்த இலங்கை மக்களுக்கும், போரினால் வெளியேறிய இலங்கை மக்களுக்கும் இடையே இருக்கும் வித்தியாசங்கள் குறித்த விவாதங்களும் முன் வைக்கப்பட்டது.

இந்த கட்டுரையை ஆங்கிலத்தில் படிக்க

யார் தமிழ் அகதிகள்?

தமிழகம் முழுவதும் தமிழக அரசின் பார்வையில் இயங்கி வரும் அகதிகள் முகாம்களில் வசிப்பவர்கள்.

முகாம்களில் வாழாமல், ஆனால் அகதிகளுக்கான சான்றுகளை மாவட்ட ஆட்சியர்களிடம் பெற்றுக் கொண்டு, அருகில் உள்ள காவல் நிலையத்தில் பதிவு செய்த பின்னர் வெளியில் வாழும் தமிழர்கள் ஒரு 30 ஆயிரம் நபர்கள் உள்ளனர்.

முறையான பயண ஆவணங்களுடன் இந்தியாவில் இருப்பவர்கள். இந்தியாவில் இருந்து ஐரோப்பா செல்வதற்காக அவர்களின் விசா முடிவுற்ற பிறகும் கூட இங்கு வசிக்கும் இலங்கை தமிழர்கள்.

தமிழ் புலிகளாக போராட்டத்தில் பங்கேற்றவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்கியிருக்கும் சிறப்பு முகாம்கள்.

போர் முடிந்த பிறகு வாழ்வாதாரம் தேடி தமிழகம் வந்தவர்கள். சிலர் இலங்கை கடற்படை உதவியுடன் இந்தியா வந்தார்கள். சிலர் கடல் மார்க்கம் மூலமாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு செல்வதையும் வழக்கமாக கொண்டுள்ளனர்.

தமிழ் அகதிகளின் எண்ணிக்கை எவ்வளவு ?

ஜனவரி 2015ம் ஆண்டு, அன்றைய முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வம் பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதிய கடிதம் ஒன்றில் 34,524 குடும்பங்களை சேர்ந்த 1,02,055 அகதிகள் இங்கு வாழ்ந்து வருகின்றனர் என்றும், அதில் 19,625 குடும்பங்களை சேர்ந்த 64,924 நபர்கள் தமிழகத்தில் இருக்கும் 107 முகாம்களில் வசித்து வருகிறார்கள் என்றும் கூறியிருந்தார்.

எப்போது தமிழகம் வந்தார்கள் இலங்கை தமிழர்கள்?

முதன்முறையாக ஜூலை மாதம் 1983ம் ஆண்டு தான் துவங்கியது. தமிழ் புலிகள் இந்த நாளில் 13 இலங்கை இராணுவ படையினரை கொன்றுவிட்டனர். இதனைத் தொடர்ந்து தமிழக மக்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது. கோபம் கொண்ட சிங்களர்கள் பலர் தமிழர்களை கொன்று குவித்தனர். வரலாற்றில் இந்நாள் ப்ளாக் ஜூலை என்று அழைக்கப்படுகிறது.

இந்த நிலை 1987ம் ஆண்டு வரை, இந்தியாவுக்கும் - இலங்கைக்கும்  இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படும் வரை நடைபெற்றது. 1983ம் ஆண்டு முதல் 1987ம் ஆண்டு வரை சுமார் 1.34 லட்சம் இலங்கை தமிழர்கள் இந்தியா வந்தடைந்தனர். அனைவரும் தமிழகத்திற்கு கப்பல் மூலமாக வந்தடைந்தனர். அதில் பலரும் திரும்பி தங்களின் சொந்த நாட்டிற்கே திரும்பி செல்ல விரும்பியதாக கூறப்படுகிறது. 1987ம் ஆண்டு முதல் 1989ம் ஆண்டு வரை சுமார் 25 ஆயிரத்து 600 அகதிகள் இலங்கைக்கு திரும்பி சென்றனர்.

1990ம் ஆண்டு இலங்கை ராணுவம் மற்றும் தமிழ் புலிகளுக்கு இடையே நடைபெற்ற போர் மீண்டும் உச்சம் அடைந்தது. அந்த சமயத்தில் தமிழகத்திற்கு 1,22,000 நபர்கள் வந்தனர். அதே நேரத்தில் தான் பலரும் தங்களின் வாழ்வாதாரம் தேடி ஐரோப்பா மற்றும் கனடா நாடுகளுக்கு சென்றனர். ராஜீவ் காந்தி மே மாதம் 21ம் தேதி, 1991ம் ஆண்டு கொல்லப்பட்ட பிறகு, 1992 முதல் 1995 ஆண்டு வரை சுமார் 54 ஆயிரம் அகதிகளை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது இந்திய அரசு.

மீண்டும் இலங்கை ராணுவம் - தமிழ் புலிகளுக்கு இடையே 1995ம் ஆண்டு போர் மூள, 1995 ஆண்டு முதல் 2002 வரையில் சுமார் 23 ஆயிரம் தமிழர்கள் தமிழகம் வந்தடைந்தனர். தமிழ் புலிகளின் முக்கிய இடமான வடக்கு மாகாணத்தில் இலங்கை ராணுவம் போர் தொடுக்க ஆரம்பித்த பிறகு இந்தியா வரும் அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வந்தது. 2009ம் ஆண்டு தமிழ் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்ட பிறகு அடுத்த நான்கு ஆண்டுகளில் தமிழகம் வந்த அகதிகளின் எண்ணிக்கை தொடர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வந்தது.

திமுகவின் போராட்டம்

இலங்கை தமிழர்கள் விவகாரம் தமிழக அரசியலில் மிகவும் முக்கியமான பிரச்சனையாக பார்க்கப்படுகிறது. பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆஃப்கானில் இருந்து மத ரீதியான காரணங்களால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு குடியுரிமை வழங்கும் திருத்தப்பட்ட குடியுரிமை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தது அதிமுக. ஆனால் தமிழகத்தில் 30 ஆண்டுகளாக முகாம்களில் வாழும் 1 லட்சம் அகதிகளின் நிலையை பற்றி கருத்தில் கொள்ளவில்லை. அதிமுக தலைவர்களான எம்.ஜி. ஆர் மற்றும் ஜெ. ஜெயலலிதா எப்போதும் தமிழ் அகதிகளின் வாழ்வு குறித்து அக்கறை செலுத்தும் நபர்களாகவே இருந்தனர். ஆனால் அவர்களின் கொள்கைகளுக்கு மாறாக தற்போதைய அதிமுகவின் நிலைப்பாடு உள்ளது.

காஞ்சிபுரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுக தலைவர் முக ஸ்டாலின் அதிமுக உறுப்பினர்கள் ராஜ்யசபையில் வாக்களிக்காமல் இருந்திருந்தால் இந்த மசோதா சட்டமாக்கப்பட்டிருக்காது என்று கூறினார். இந்தியாவில் தற்போது ஏற்பட்டிருக்கும் பதட்டமான சூழலுக்கு முக்கிய காரணியாக அதிமுக உள்ளது. இந்தியா தற்போது எரிந்து கொண்டுள்ளது. அதற்கு காரணம் அதிமுக தான் என்று அவர் கூறினார். பாஜக இலங்கை தமிழ் அகதிகள் குறித்து அக்கறை காட்டவில்லை என்றும் குற்றம் சாட்டியுள்ளார். “எடப்பாடி கூட்டம் போல நாடு அழிந்து கொண்டிருக்கும் போது அமைதி காத்துக் கொண்டிருக்க மாட்டோம். பெரியாரும், அண்ணாதுரையும் உருவாக்கிய அமைப்பு இது. இந்தியாவில் பல்வேறு பிரச்சனைகள் நிலவி வருகிறது. மக்களுக்கு உதவுவதை விட்டுவிட்டு இது போன்ற சட்டங்களை செயல்படுத்துவதில் அதிக அக்கறை செலுத்தி வருகிறது பாஜக என்றும் அவர் கூறினார்.

Srilanka Ltte
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment