குடியுரிமை திருத்த சட்டமும் இலங்கை தமிழர்களும்! தமிழகம் சி.ஏ.ஏவை எதிர்க்க காரணம் என்ன?

Arun Janardhanan Citizenship Amendment Act debate over Sri Lankan Tamils : திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இடம் பெறாமல் இருந்தது மிக முக்கியமான விவாதத்தை உருவாக்கியது. மேலும் அதிமுக நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு அளித்த ஆதரவால் தமிழகத்தில் எதிர்கட்சியினரின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாக நேர்ந்தது. உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ?? தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட […]

Citizenship Amendment Act debate over Sri Lankan Tamils
Citizenship Amendment Act debate over Sri Lankan Tamils

Arun Janardhanan

Citizenship Amendment Act debate over Sri Lankan Tamils : திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தில் இலங்கை தமிழர்கள் குறித்து எந்த ஒரு அறிவிப்பும் இடம் பெறாமல் இருந்தது மிக முக்கியமான விவாதத்தை உருவாக்கியது. மேலும் அதிமுக நாடாளுமன்றத்தில் இந்த மசோதாவுக்கு அளித்த ஆதரவால் தமிழகத்தில் எதிர்கட்சியினரின் கடுமையான விமர்சனங்களுக்கு ஆளாக நேர்ந்தது.

உச்ச நட்சத்திரங்களின் படங்கள் தோல்வியை சந்தித்தால் நஷ்ட ஈடு தர வேண்டுமா ??

தமிழகத்தில் மட்டும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் நபர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்ற்னார். அவர்களின் பெரும்பாலோனோர் இந்துக்கள். மேலும் இலங்கை – இந்தியாவை பூர்வீகமாக கொண்டவர்கள். அதிமுக தரப்பிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது, அமித் ஷா, இலங்கை தமிழர்கள் குறித்து விரைவில் முடிவெடுப்போம் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமியிடம் உறுதி கூறியதாக கூறுகின்றார்கள்.

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

இலங்கையில் இருந்து  எப்போது அவர்கள் இந்தியா வந்தனர்?

1983க்கு முன்னாள் வந்த தமிழர்கள், பின்னால் வந்த தமிழர்கள் என அவர்களை இருவகைப்படுத்திட இயலும். இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு எதிராக பல்வேறு வன்முறைகள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பிரிவினைவாத இயக்கங்களின் நடவடிக்கைகளால் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.

1983ம் ஆண்டுக்கு முன்பு இந்தியா வந்த தமிழர்களின் பெரும்பாலானவர்கள் தமிழக பூர்வ குடிகள். அவர்களின் மூத்த குடும்ப உறுப்பினர்கள் இலங்கையில் தேயிலை தோட்ட தொழிலில் ஈடுபடுவதற்காக சென்றவர்கள். 1964ம் ஆண்டு இலங்கை பிரதமர் பண்டாரநாயக்கே, இந்திய பிரதமர் லால் பகதூர் சாஸ்திரி ஆகியோர் இணைந்து 9 லட்சத்தி 75 ஆயிரம் இந்திய தமிழர்களுக்கு இந்தியா அல்லது இலங்கையில் குடியுரிமை பெற ஒப்புதல் அளிக்கும் வகையில் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டனர். 1982ம் ஆண்டுக்கு முன்பு வரை இந்தியாவிற்கு இந்த ஒப்பந்தத்தின் கீழ் வந்தவர்களுக்கு சட்ட ரீதியிலான அனுமதிகள் வழங்கப்பட்டது. ஆனால் இந்த திட்டம் முழுமையாக நடைபெறவில்லை.

கிட்டத்தட்ட 4.6 லட்சம் பேர் தமிழகத்திற்கு திரும்பினார்கள். சிலர் ஐரோப்பாவில் தஞ்சம் அடைந்தனர். சிலர் இந்தியர்களை திருமணம் செய்து இங்கேயே வாழ துவங்கினார்கள். 1963 முதல் 1989 ஆண்டு வரை பர்மாவில் இருந்து சுமார் 1.4 தமிழர்கள் இந்தியா வந்தனர். வியட்நாமில் இருந்து 2055 பேர் தாயகம் திரும்பினார்கள். 1983ம் ஆண்டுக்கு பின்பு இலங்கையில் இருந்து தமிழகம் வரும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாக துவங்கியது.

இன்றைய இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களின் நிலை என்ன?

19 ஆயிரம் குடும்பங்களை சேர்ந்த 60 ஆயிரம் நபர்கள் 107 முகாம்களில் தமிழகத்தில் வசித்து வருகின்றனர். ஆகஸ்ட் 2019ம் ஆண்டின் அதிகாரப்பூர்வ தகவல்களின் படி பார்த்தால் இவர்களின் 10 ஆயிரம் நபர்கள் 8 வயதுக்கும் குறைவானவர்கள். படகுகள் மூலமாகவும், இதர வழிகளிலும் சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவுக்கு வந்தவர்கள் யாரும் அகதிகள் என்று அழைக்கப்பட்டமாட்டார்கள் என்று ஈழ அகதிகள் மறுவாழ்வு முகாம்களின் தலைவர் எஸ்.சி. சந்திரஹாசன் கூறியுள்ளார். Organisation for Eelam Refugees Rehabilitation (OFERR) – இந்த என்.ஜி.ஓ-வுக்கு மட்டும் தான் முகாம்களுக்கு செல்ல உரிமைகள் வழங்கப்பட்டுள்ளது. சட்டத்திற்கு புறம்பாக இந்தியாவுக்குள் இலங்கை தமிழர்கள் 1980 ஆண்டு முதல் 1990 வரையில் தஞ்சம் புகுந்தனர். 2009ம் ஆண்டில் ஈழப்போர் உச்ச நிலையை அடையும் வரையில் ஒரு சிலரே இந்தியாவுக்கு வந்தனர்.

இலங்கையில் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ்களில் இவர்களை ”இந்தியாவை சேர்ந்த தமிழர்கள்” என்று குறிப்பிட்டுள்ளனர். இதனை அடிப்படையாக கொண்டு சுமார் 20% மக்கள் இந்திய வம்சாவளியை கோருகின்றனர். 1983ம் ஆண்டு இந்தியா வந்த போது இவர்களுக்கு வழங்கப்பட்ட ஒரே அறை கொண்ட வீடுகளில் தான் இன்னும் வாழ்கின்றனர். அவர்களிடம் இருந்து வாடகை ஏதும் வாங்கப்படுவதில்லை. ஒரு கிலோ அரிசி 57 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 8 வயது பூர்த்தி அடைந்த ஒருவருக்கு மாதத்திற்கு 12 கிலோ அரிசி என்ற ரீதியில் அவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. குடும்ப தலைவருக்கு ரூ,1000 மாதமாதம் வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிக்கு ரூ.750-ம், 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு ரூ.400ம் வழங்கப்படுகிறது.

முகாம்களில் உள்ள 60,000 பேரைத் தவிர, வெளியில் சுமார் 30,000 இலங்கைத் தமிழர்கள் சொந்தமாக வாழ்கின்றனர். அருகிலுள்ள காவல் நிலையத்தில் அவர்கள் அடிக்கடி அறிக்கை அளிக்க வேண்டும். முகாம்களில் வசிப்பவர்களை விட அவர்களுக்கு அதிக சுதந்திரம் உள்ளது. முகாம்களில் இருப்பவர்கள் தமிழகத்திற்கு வெளியே செல்ல முடியாது.  வேறொரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் அவர்கள் அனுமதி பெற வேண்டும். முகாம்களுக்கு யாரும் செல்ல இயலாது. அதையும் தாண்டி சென்றால் காவல்துறை மற்றும் மத்திய புலனாய்வு அமைப்புகளின் க்யூ கிளையிலிருந்து விசாரணைகள் நடத்தப்படும். 1991 ல் ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்ட பின்னர் அகதிகள் முகாம்களின் நிலை முற்றிலுமாக மாறியது.

இந்திய அரசிடம் இருந்து என்ன எதிர்பார்க்கிறார்கள் இவர்கள்?

அவர்கள் இந்திய குடியுரிமையை எதிர்பார்க்கின்றார்கள். அவர்கள் இலங்கைக்கு திரும்பி சென்றால் ஏற்பட இருக்கும் பின்விளைவுகளை எண்ணி பயம் தான் கொள்கின்றனர். அவர்களால் ஐரோப்பா போன்ற இடங்களுக்கு செல்ல இயலாது. அவர்களில் பெரும்பாலானோருக்கு தமிழகத்தில் உறவினர்கள் உள்ளனர். அவர்களுக்கு சொத்துகள் உள்ளது. இனக்கலவரங்கள் ஏற்பட்டிருக்கவில்லை என்றால் அவர்கள் இந்திய குடியுரிமை பெற்றிருப்பார்கள். இது குறித்து சந்திரஹசனிடம் கேட்ட போது, இவர்கள் இங்கே கோடியில் ஒருவராக இருப்பதற்கு பதிலாக இலங்கையில் லட்சத்தில் ஒருவராக இருந்து கொள்ளலாம் என்று கூறினார். இவருடைய அப்பா எஸ்.ஜே.வி. செல்வநாயகம் மிக முக்கியமான இலங்கை தமிழ் மக்களின் தலைவராக செயல்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு குடியுரிமை வழங்க இந்தியா இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை. இந்த முகாம்கள் அனைத்தும் இடைக்காலத்திற்கு அடைக்கலம் தரும் வகையில் மட்டுமே உருவாக்கப்பட்டது. இலங்கையில் இயல்பான நிலை திரும்பும் வரையில் அவர்கள் வசிக்க ஒரு பாதுகாப்பான சூழலை உருவாக்கவே இது உருவாக்கப்பட்டது. வேறு சில அகதிகளோ சந்திரஹசனின் கருத்தில் இருந்து முரண்படுகின்றார்கள். அவர்களுக்கு இலங்கையில் சொத்தோ, உறவுகளோ, குடும்பங்களோ ஒன்றும் இல்லை என்றும் அவர்கள் கூறுகின்றார்கள்.

இலங்கை தமிழர்கள் என்பது தமிழகத்தில் அதிக உணர்ச்சி அலைகளை தூண்டும் ஒன்றாகவே இன்றும் இருக்கிறது. திமுக தலைவர் முக ஸ்டாலின் தொடர்ந்து அதிமுக இந்த மசோதாவுக்கு வாக்களித்தது குறித்து கடும் விமர்சனங்களை முன் வைக்கிறது. மேலும் திமுக ஆட்சியில் எவ்வாறு மேம்பாட்டு திட்டங்கள் முகாம்களில் வசிப்பவர்களுக்கும் வழங்கப்பட்டது என்றும் கூறி வருகிறார். தங்களை தற்காத்துக் கொள்ள அதிமுகவோ மத்திய அமைச்சரவையில் திமுக முக்கிய பங்கு வகித்த போதும் ஏன் இவர்களுக்கு குடியுரிமை வழங்கவில்லை என்றும் கேள்வி எழுப்பி வருகிறது.

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Citizenship amendment act debate sri lankan tamils

Next Story
Explained : ToTok செயலி எமிரேட்ஸ் அரசின் உளவு கருவியாகவும் இருக்கலாம்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X