Advertisment

நாளை முதல் விமான பயணம் : உங்களின் அடிப்படை சந்தேகங்களுக்கு இங்கே பதில்

MoCA flights resume guidelines : விமானக் குழுவினர் பயணிகளின் இருக்கை எண்களை அழைக்கும் போது, பயணிகள் ஒவ்வொருத்தராக இறங்க வேண்டும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
நாளை முதல் விமான பயணம் : உங்களின் அடிப்படை சந்தேகங்களுக்கு இங்கே பதில்

civil flight operations From 25th may MoCA flights resume guidelines

MoCA flights resume guidelines:  உள்நாட்டு வணிக விமானங்கள் நாளை (மே 25) முதல் மீண்டும் தொடங்கப்படுகின்றன. இருப்பினும், கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தில், நமது விமான பயணம் பல நிபந்தனைக்குட்பட்டதாக இருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். உடமைகள்,வருகை நேரம், பாதுகாப்பு சோதனை, செக்-இன் போன்றவைகளில் பல்வேறு கட்டுப்பாடு வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

Advertisment

இந்த வழிமுறைகளை கவனித்துக் கொண்டு உங்கள் பயணத்திற்கு தயாராகுங்கள்

முதலாவதாக, உங்களுடன் பயணிப்பவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை  என்பது உங்களுக்கு எப்படித் தெரியும்?

இதற்கு மிகவும் எளிதான பதில் - தெரிய வாய்ப்பில்லை

இருப்பினும், அனைத்து பயணிகளுக்கும் வெப்பத் திரையிடல் சோதனையை  அரசாங்கம் கட்டாயமாக்கியுள்ளது. மேலும், பயணிகள் ஒவ்வொருவரும்  ஆரோக்கிய சேது செயலியை பதிவிறக்கம் செய்யவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம், ஒருவர் நோய் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்து வந்துள்ளாரா? என்பதை அதிகாரிகள் கண்டறிவர். உங்களிடம் ஆரோக்யா சேது செயலி இல்லையென்றால்,  விமான நிலையத்தில் அதை பதிவிறக்கம் செய்ய விமான நிலைய ஊழியர்கள் உதவி புரிவர் என்று கூறப்பட்டுள்ளது.

கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து வரும் எந்த பயணிகளும் விமானங்களில் பயணிக்க அனுமதிக்கப்படவில்லை. பயணிகள் தாங்கள் ஒரு கட்டுப்பாட்டு மண்டலத்திலிருந்து வரவில்லை என்றும், கொரோனா தொற்று அறிகுறிகள் இல்லை என்றும் அறிவிக்கும் சுய உறுதியளித்தல்  ஆவணத்தில் கையெழுத்திட வேண்டும்.

பயண உடமைகள் பற்றி? விமானைத்துனுள் ஒரு பையும், சரக்கு பெட்டகத்திற்குள் ஒரு பையும்  வைத்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. காரணம் எதுவாக இருந்தாலும், ஒன்றுக்கு மேற்பட்ட செக்-இன் பையை எடுத்துச் செல்ல வேண்டாம்.

லேப்டாப் பேக் பற்றி? இந்த பயண உடமைகலைத் தாண்டி லேப்டாப் பேக்  (அ) பெண்கள் கைப்பையை எடுத்துச் செல்ல அனுமதியுண்டு .

விமானத்தில் உணவும் கிடைக்காது  என்று கூறப்பட்டுள்ள நிலையில், பசி ஏற்பட்டால்?

பயணிகள் உலர் உணவுப் பொருட்களைத் தங்கள் கைவசம் வைத்துக் கொள்ளலாம் . இருப்பினும், விமானத்தின் உள்ளே சாப்பிட வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ காரணங்களால் அல்லது வேறுவழியில்லாமல் நீங்கள் சாப்பிட வேண்டுமெனில் நீங்கள் உங்கள் முககவசத்தை கலட்ட வேண்டிய சூழல் உருவாகும். இது உங்களுக்கும், சக பயணாளிகளுக்கும் ஆபத்தை விளைவிக்கும்.

இணைய வழி செக்-இன் மட்டுமே அனுமதிக்கப்படுகிறதாமே?  

தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி, அனைத்து பயணிகளும் விமான நிலையத்தில் குறைந்தபட்ச மனித தொடர்பை உறுதிப்படுத்த இணைய வழி செக்-இன் செய்து போர்டிங் பாசை எடுத்து வர வேண்டும்.

பயண உடமைக்கான அடையாள எண்ணை  பதிவிறக்கம் செய்து அச்சிட்டு பெட்டியின் மீது  ஒட்ட வேண்டும். அவர்களுக்கு ஒரு அச்சுப்பொறிக்கான அணுகல் இல்லையென்றால், டிக்கெட் PNR எண்ணையும் தங்கள் பெயரையும்  ஒரு காகிதத்தில் எழுதி பெட்டியில் தொங்கவிடலாம். போர்டிங் பாஸ்களை முத்திரையிடும் முறை ஏற்கனவே நீக்கப்பட்டுவிட்டன.

நடக்க சிரமப்படும் வயதான பயணிகள் பற்றி? அவர்களுக்கு ஏற்படும் மாற்றங்கள்?

மத்திய அரசு வெளியிட்ட வழிமுறைகளில், பாதிப்புக்கு உள்ளாக கூடிய முதியோர், கர்ப்பிணி, பெண்கள் , உடல் உபாதை உள்ள பயணிகள் விமானப் பயணத்தை தவிர்க்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இருப்பினும், தவிர்க்க முடியாத சூழலில் அவர பயணம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டால், சக்கர நாற்காலிகள் மற்றும் கோல்ஃப் வண்டி சேவைகள் வழங்கப்படும். எல்லா நேரங்களிலும் சக்கர நாற்காலிகள் மற்றும் கோல்ஃப் வண்டிகளை கிருமி நீக்கம் செய்ய  விமான நிலைய ஆபரேட்டர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலும், மக்கள் நோய்வாய்ப்பட்டால் அல்லது கோவிட் -19 அறிகுறிகளைக் காட்டத் தொடங்கினால் அவர்களுக்கு உதவ அனைத்து விமான நிலையங்களிலும் தனிமைப்படுத்துதல் மையம் செயல்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Explained: விமான பயணம் செய்வோர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகள் என்ன?

ஒரு பயணிக்கு இணைப்பு விமானம் அடுத்த நாள் இருந்தால் என்ன செய்வது? அப்போது அவர் எங்கே தங்கலாம்?

ஆனைத்து பெருநகரங்களில் உள்ள உள்ள விடுதிகள் மூடப்பட்டுள்ளன. ஆனால் பயணிகள் Transit Area- வில் காத்திருக்க அனுமதிக்கப்படுகிறார்கள். உண்மையில், அரசு வெளியிட்ட வழிகாட்டுதல்களின்படி, யாரும்  Transit Area பகுதியிலிருந்து வெளியேற அனுமதிக்கப்படுவதில்லை.

 

செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை வேறு ஏதேனும் உள்ளதா?

விமானத்தில் இருந்து இறங்கி வெளியே போகும் வரையிலான செயல்பாடுகள் படிப்படியாக நடைபெறும். எனவே, போர்டிங் கேட்தில் கூட்டம் கூட வேண்டாம்.

விமானக் குழுவினர் பயணிகளின் இருக்கை எண்களை அழைக்கும் போது, பயணிகள் ஒவ்வொருத்தராக இறங்க வேண்டும்.

ஒவ்வொரு, விமான நிலையத்தில் பயனாளிகளுக்கு புதிய முக கவசம் மற்றும்  கை சானிடைசர்கள் உங்களுக்கு தரப்படும்.  உங்கள்  பழைய மக்கக்கூடிய முக கவசத்தை நிராகரிக்க விரும்பினால், நீங்கள் அதற்காக நியமிக்கப்பட்ட மஞ்சள் தொட்டிகளில் மட்டுமே  போட வேண்டும்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Coronavirus Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment