Advertisment

'நாக்' சீரற்ற செயல்பாடு; கல்லூரி அங்கீகார அமைப்புக்கு எதிரான கோரிக்கை என்ன?

NAAC இன் செயற்குழுவின் தலைவர் பூஷன் பட்வர்தன், NAAC கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்து சுதந்திரமான விசாரணையை பலமுறை கோரிய பின்னர் ராஜினாமா செய்தார்

author-image
WebDesk
New Update
'நாக்' சீரற்ற செயல்பாடு; கல்லூரி அங்கீகார அமைப்புக்கு எதிரான கோரிக்கை என்ன?

1994 இல் நிறுவப்பட்ட NAAC, இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பிடும் பொறுப்பைக் கொண்டுள்ளது

Sourav Roy Barman

Advertisment

பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) கீழ் இயங்கும் தன்னாட்சி அமைப்பான தேசிய மதிப்பீடு மற்றும் அங்கீகார கவுன்சில் (NAAC) அதன் செயல்பாட்டில் முறைகேடுகள் இருப்பதாக குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறது.

மார்ச் 5 அன்று, NAAC இன் செயற்குழுவின் தலைவர் பூஷன் பட்வர்தன், NAAC கவுன்சிலின் செயல்பாடுகள் குறித்து சுதந்திரமான விசாரணையை பலமுறை கோரிய பின்னர் ராஜினாமா செய்தார்.

இதையும் படியுங்கள்: ராணுவ நீதிமன்றம்; ஆயுதப்படை வீரர்களின் குற்றங்களுக்கு தண்டணை வழங்கும் நடைமுறை என்ன?

செவ்வாயன்று, NAAC குற்றச்சாட்டுகளை நிவர்த்தி செய்து ஒரு அறிக்கையை வெளியிட்டது, “NAAC இன் ஆணையின்படி, அங்கீகாரம் மற்றும் மதிப்பீட்டின் முழு செயல்முறையும் வலுவானது, வெளிப்படையானது, ICT-மூலம் இயக்கப்படுகிறது மற்றும் தானியங்கு செயல்முறை. முழு செயல்முறையும் பரவலாக்கப்பட்ட, வெளிப்படையான மற்றும் பயனர் நட்பு போர்ட்டல் மூலம் பங்குதாரர்களுக்கு அணுகக்கூடியதாக இருப்பதால், அமைப்பில் தவறுகள் செய்ய முடியாது,” என்று அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

NAAC இன் செயல்பாடுகள் என்ன?

1994 இல் நிறுவப்பட்ட NAAC, இந்தியாவின் உயர்கல்வி நிறுவனங்களின் தரத்தை மதிப்பிடும் பொறுப்பைக் கொண்டுள்ளது. பல அடுக்கு மதிப்பீட்டு செயல்முறையைத் தொடர்ந்து, இது கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு கிரேடுகளை வழங்குகிறது. அதன் அளவுருக்களில் பாடத்திட்டம், ஆசிரியர்கள், உள்கட்டமைப்பு, ஆராய்ச்சி மற்றும் நிதி நல்வாழ்வு ஆகியவை அடங்கும். NAAC வழங்கும் கிரேடுகள் A++ முதல் C வரை இருக்கும். ஒரு நிறுவனம் D தரம் பெற்றிருந்தால், அது அங்கீகாரம் பெறவில்லை என்று அர்த்தம்.

அங்கீகார செயல்முறை எவ்வாறு மேற்கொள்ளப்படுகிறது?

முதல் படியாக மதிப்பீட்டிற்காக NAAC ஐ சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனம் அணுகும். NAAC செயல்முறையை தொடங்கியவுடன், விண்ணப்பதாரர் நிறுவனம் அளவு மற்றும் தரமான அளவீடுகள் தொடர்பான தகவல்களைக் கொண்ட சுய ஆய்வு அறிக்கையை (SSR) சமர்ப்பிக்க வேண்டும். தரவு பின்னர் NAAC இன் நிபுணர் குழுக்களால் சரிபார்க்கப்படுகிறது, அதைத் தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து பெறப்பட்ட மதிப்பீட்டாளர்களை உள்ளடக்கிய சக குழுக்கள் நேரில் பார்வையிடுகின்றன.

NAAC அங்கீகாரம் கட்டாயமா?

பல்கலைக்கழக மானியக்குழு பல ஆண்டுகளாக NAAC இன் மதிப்பீட்டை கட்டாயமாக மேற்கொள்ள வேண்டும் என்று கல்வி நிறுவனங்களுக்கு பல சுற்றறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இருப்பினும் இந்த செயல்முறை இன்னும் பெரும்பாலும் நிறுவனங்களின் தன்னார்வமாக விருப்பமாகவே உள்ளது.

தேசிய கல்விக் கொள்கை (2020) அடுத்த 15 ஆண்டுகளில் அனைத்து உயர்கல்வி நிறுவனங்களும் மிக உயர்ந்த அங்கீகாரத்தைப் பெறுவதற்கான லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளது. இருப்பினும், பிப்ரவரியில் மக்களவையில் மத்திய அரசு பகிர்ந்த தகவல்களின்படி, 2020-21 ஆம் ஆண்டுக்கான அகில இந்திய உயர்கல்வி ஆய்வறிக்கையில் உள்ள 1,113 பல்கலைக்கழகங்கள் மற்றும் 43,796 கல்லூரிகளில், 418 பல்கலைக்கழகங்கள் மற்றும் 9,062 கல்லூரிகள் மட்டுமே 2023 ஜனவரி 31ஆம் தேதி நிலவரப்படி NAAC அங்கீகாரம் பெற்றவை.

பூஷன் பட்வர்தன் குற்றம் சாட்டியது என்ன?

பிப்ரவரி 2022 இல் தலைவராகப் பொறுப்பேற்ற பூஷன் பட்வர்தன், சில நிறுவனங்களுக்கு கேள்விக்குரிய மதிப்பெண்களை வழங்கும் வகையில், ஆதாயத்துடன் சிலர் முறைகேடுகளில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டினார். கடந்த செப்டம்பரில் யு.ஜி.சி தலைவர் எம்.ஜெகதீஷ் குமாரிடம் அவர் முதலில் இந்தப் பிரச்னையை எழுப்பினார். பூஷன் பட்வர்தன் தனது சொந்த அனுபவங்கள் மற்றும் அவர் பொறுப்பேற்ற பிறகு அவர் நியமித்த விசாரணையின் கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் தனது குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

பிப்ரவரி 26 அன்று யு.ஜி.சி தலைவர் எம்.ஜெகதீஷ் குமாருக்கு எழுதிய மற்றொரு கடிதத்தில் அவர் தனது குற்றச்சாட்டுகளை மீண்டும் வலியுறுத்தினார் மற்றும் ராஜினாமா செய்ய விருப்பம் தெரிவித்தார். பூஷன் பட்வர்தனுக்குப் பதிலாக முன்னாள் AICTE தலைவர் அனில் டி சஹஸ்ரபுதேவை NAAC செயற்குழுவின் தலைவராக யு.ஜி.சி தலைவர் எம்.ஜெகதீஷ் குமார் உடனடியாக நியமித்தார். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த பூஷன் பட்வர்தன், தனது ராஜினாமா முடிவை தனது இறுதி ராஜினாமா கடிதமாக தவறாகக் கருதியதாகக் கூறினார். இருப்பினும், மார்ச் 5 அன்று, பூஷன் பட்வர்தன் சுயமரியாதை மற்றும் NAAC இன் "புனிதத்தைப் பாதுகாக்க" வேண்டியதன் அவசியத்தை மேற்கோள் காட்டி தனது ராஜினாமாவை அறிவித்தார்.

விசாரணையின் முடிவுகள் என்ன?

பூஷன் பட்வர்தனால் நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு, யு.ஜி.சி மையமான தகவல் மற்றும் நூலக நெட்வொர்க்கின் இயக்குநரான ஜே.பி சிங் ஜோரீல் தலைமையில் அமைக்கப்பட்டது. NAAC இன் அங்கீகார செயல்முறை முறைகேடுகளில் சிக்கியிருப்பது குழுவால் கண்டறியப்பட்டது. முதலாவதாக, NAAC இன் தகவல் தொழில்நுட்ப அமைப்பு "சமரசம்" செய்யப்பட்டதாகக் கண்டறியப்பட்டது. மேலும், மதிப்பீட்டாளர்கள் "தன்னிச்சையாக" ஒதுக்கப்படுகின்றனர், என்றும், அத்தகைய நடைமுறைகள் ஆதாயம் அடையும் சாத்தியமான நிகழ்வுகளைத் தூண்டுவதாகவும் குழு கண்டறிந்தது.

சுமார் 4,000 மதிப்பீட்டாளர்களைக் கொண்ட குழுவில் இருந்து கிட்டத்தட்ட 70% நிபுணர்கள் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனத்தை நேரடியாக பார்வையிட எந்த வாய்ப்பையும் பெறவில்லை, அதே நேரத்தில் சிலர் பல முறை பார்வையிட்டுள்ளனர் என்று அறிக்கை கூறுகிறது. NAAC இன் உள் அமைப்பில் முழு அணுகலைக் கொண்ட அதிகாரம் இல்லாத தனிநபர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டது மற்ற குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும்.

ஏன் சில நிறுவனங்கள் மட்டும் அங்கீகாரம் பெற்றுள்ளன?

NAAC இன் தற்போதைய மற்றும் முன்னாள் அதிகாரிகளின் கூற்றுப்படி, மோசமான மதிப்பெண்களைப் பெறுவதற்கான பயம் நிறுவனங்களை விண்ணப்பிப்பதில் இருந்து பின்வாங்கச் செய்கிறது.

2019 ஆம் ஆண்டில், யு.ஜி.சி இந்த சிக்கலை தீர்க்க ‘பரமார்ஷ்’ என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தின் கீழ், அங்கீகாரம் பெற விரும்பும் குறைந்தபட்சம் ஐந்து நிறுவனங்களுக்கு வழிகாட்டியாக பணியாற்ற, சிறப்பாக செயல்படும் சில நிறுவனங்கள் அடையாளம் காணப்பட்டன. கடந்த ஆண்டு, கல்லூரிகளுக்கான தற்காலிக அங்கீகாரத்தை (பி.ஏ.சி) வழங்குவதற்கான சாத்தியக்கூறுகளையும் NAAC ஆராய்ந்தது, இதன் கீழ் ஓராண்டு பழமையான கல்வி நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் அங்கீகாரத்திற்கு விண்ணப்பிக்கலாம். தற்போது, ​​குறைந்தபட்சம் ஆறு வயது நிரம்பிய அல்லது குறைந்தபட்சம் இரண்டு தொகுதி மாணவர்கள் பட்டம் பெற்ற கல்வி நிறுவனங்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். அங்கீகாரம் ஐந்து ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.

ஆனால், பூஷன் பட்வர்தன் உள்ளிட்ட கல்வியாளர்கள் குழு தயாரித்த வெள்ளை அறிக்கை, அத்தகைய அமைப்பு தரத்துடன் சமரசத்திற்கு வழிவகுக்கும் என்று கூறியது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Education Ugc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment