Advertisment

பெண்கள் இன்னும் எத்தனை கஷ்டங்களை தான் அனுபவிக்கணுமோ...

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளினால், சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
climate change, rapes, forced marriages, africa poverty, agrarian crisis, food, food crisis, farms, corporate farming, indian express

climate change, rapes, forced marriages, africa poverty, agrarian crisis, food, food crisis, farms, corporate farming, indian express

பருவநிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கை பேரழிவுகளினால், சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளதாக சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

Advertisment

வீட்டில் உணவு இல்லை என்பதற்காக, 13 வயது சிறுமியை, அவளது விருப்பத்திற்கு மாறாக திருமணம் செய்துவைத்த கொடூரம், ஆப்ரிக்கா உள்ளிட்ட குறைவான வளர்ச்சி கொண்ட நாடுகளில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

மலாவி நாட்டின் சாஞ்ஜே மாகாணத்தை சேர்ந்தவர் டோயா சாண்டே. இவரது விவசாயநிலங்கள், மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி வயல்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக, 4 பேர் கொண்டு அவளது வீட்டில், அவர்கள் சாப்பிடுவதற்கே உணவு பற்றாக்குறை ஏற்பட்டது. உணவு பற்றாக்குறை காரணமாக, 13 வயதே டோயா சாண்டேவை, அவரது விருப்பத்திற்கு எதிராக, பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்தனர். நீ திரும்ணமாகி வேறு வீட்டுக்கு செல்வதனால், இங்கு ஒரு நபருக்கான உணவு தேவை குறையுமல்லவா என்பது பெற்றோரின் வாதமாக இருந்தது.

பருவநிலை மாற்றம், சுற்றுச்சூழல் சீரழிவு காரணமாக பெண்கள் மீதான வன்முறைகளின் தாக்கம் தொடர்பான ஆய்வு, இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச அமைப்பு (International Union for Conservation of Nature(IUCN)) சார்பில் நடத்தப்பட்டது.

இயற்கையில் ஏற்படும் மாற்றங்களால், மனிதநேயம் பெரிதும் அழிந்து வருகிறது. இதன்காரணமாக, சர்வதேச அளவில் பெண்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்து அதிகரித்து வருவதாக IUCN டைரக்டர் ஜெனரல் (பொறுப்பு) கிரெத்தல் ஆகுலர் கூறியுள்ளார்.

மலாவி மட்டுமல்லாது, எத்தியோப்பியா, தெற்கு சூடான் உள்ளிட்ட நாடுகளில் வறட்சி போன்ற இயற்கை பேரிடர்களினால் ஏற்படும் இழப்பை சமாளிக்கவும், கால்நடைகளை வாங்குவதற்கும், இளம்பெண்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருவதாக அவர் மேலும் கூறினார்.

 

publive-image

ஆசியாவிற்கான சர்வதேச அமைப்பின் மண்டல இயக்குனர் ஜூலியானே சூமாக்கர் கூறியதாவது, வறட்சி போன்ற இயற்கை பேரழிவுகளால், சிறுமிகள் உள்ளிட்ட இளம்பெண்களுக்கு குறைந்த வயதிலான திருமணங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. தங்கள் வீட்டிலிருந்து ஒரு பெண்ணை திருமணம் செய்து கொடுப்பதனால், தங்கள் வீட்டில் ஒருவரது உணவு தேவை மிச்சமாகிறது என்பதனடிப்படையிலேயே அங்கு இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறுவதாக அவர் கூறினார்.

இயற்கை ஆதாரங்களின் பரப்பளவு தொடர்ந்து குறைந்து வருவதும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிக்க காரணமாக உள்ளன. வறட்சியின் காரணமாக நீர் ஆதாரங்கள் தொடர்ந்து வற்றி வருகின்றன. நீர் கொண்டு வருவது பெண்களின் வேலை என்று வரையறுக்கப்பட்ட இந்த காலத்தில் அவர்கள் நீர் கொண்டு வருவதற்காக அதிக தொலைவு பயணிக்கின்றனர். அவர்கள் வீட்டை விட்டு அதிக தொலைவு செல்ல செல்ல, துப்பாக்கி ஏந்திய கொள்ளைக்காரர்களின் பாலியல் இச்சைகளுக்கு அவர்கள் அதிகமாக உள்ளாகின்றனர்.

அதேபால், விறகு, சுள்ளி பொறுக்க செல்லும் பெண்களுக்கும் இதேநிலை தான் ஏற்படுகிறது.

 

publive-image

மீன்களுக்காக உடலுறவு

ஆப்பிரிக்கா கண்டத்தின் கடலோர பகுதிகள் மற்றும் ஏரிப்பகுதிகளில் மீன்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவடைந்து வருகிறது. மீன்களின் தேவை, அங்குள்ள பெண்களுக்கு ஏற்படும்போது, மீனவர்கள் அதிகளவில் பணம் வாங்குவதோடு மட்டுமல்லாமல், அவர்களை உடல் ரீதியாகவும் பயன்படுத்திக்கொள்கின்றனர்.

இந்த நடைமுறை, மேற்கு கென்யா நாட்டில், ஜபோயா முறை என்ற பெயரில் அழைக்கப்படுகிறது.

லேக் விக்டோரியா உள்ளிட்ட கிழக்கு ஆப்பிரிக்கா பகுதிகளில் வசிக்கும் பெண்கள், சொந்தமாகவே குளங்களை வெட்டி அதில் மீன்களை வளர்க்க துவங்கியுள்ளனர். இதனால், அவர்கள் வருவாய் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் அவர்கள் சொந்தக்காலில் நிற்க முடிகிறது. அவர்கள் வருவாய்க்கு மற்றவர்களை சார்ந்திராமல் இருப்பதால், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் அவர்கள் பாதிக்கப்படுவதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

பெண்கள் விவசாய பணிகளை மேற்கொள்ளும் பட்சத்தில், வறட்சி போன்ற இயற்கை சீரழிவுகள் ஏற்படும் பட்சத்தில், அந்த குடும்பமே நிலைகுலைந்து விடுகிறது. பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அங்கே அரங்கேற இது முக்கிய காரணமாக அமைந்துவிடுகிறது.

ஒரு குடும்பத்தில் குடும்பத்தலைவர் வருவாய் ஈட்டும் பணியில் இருக்கும் நிலையில், அவரது வேலை போனாலோ அல்லது விவசாயி என்றால், வறட்சியால் விவசாயம் பாதிக்கப்படும் பட்சத்தில் அந்த ஆண் தற்கொலை செய்து கொள்கிறான். ஒரு பெண்ணிடம் உதவியை எதிர்பார்த்து நிற்பதா என்ற ஆணாதிக்கம் நிறைந்த சமுதாயத்தில் நாம் உழன்று கொண்டிருக்கிறோம்.

வேட்டையாடுதல், சட்டவிரோத செயல்கள் போன்ற சுற்றுச்சூழல் குற்றங்களும் பாலின பாகுபாடு தொடர்பான குற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. ஒரு குறிப்பிட்ட சமுதாய மக்கள் முன்னேறிவிடாமல் இருப்பதை காக்கும் பொருட்டு, அந்த சமுதாய பெண்களை உயர்ந்த சமுதாயத்தினர் தொடர்ந்து தங்களது பாலியல் இச்சைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர்.

வழிகாட்டுகிறது ஜெர்மனி : ஜெர்மனி நாட்டில் பருவநிலை பாதுகாப்பு திட்டத்தில் ஆண், பெண் என இருபிரிவினருக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டு வருகிறது. அங்கு எளிய பயணிகள் வரி நிவாரண திட்டத்தின் கீழ், இருவருக்கும் சமமான அளவில் நிவாரணம் வழங்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற நடைமுறையை சர்வதேச அளவில் நடைமுறைப்படுத்தி வந்தால் மட்டுமே, பெண்களுக்கு எதிரானவன்முறைகள் குறைய துவங்கும் என்பது திண்ணம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Africa
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment