பெருங்கடல்களில் ஏற்படும் திடீர் கடல் நீர்மட்ட அதிகரிப்பை, அணைகளின் மூலமாக கட்டுப்படுத்தலாம் என்று கடலியல் நிபுணர்கள் தாக்கல் செய்த ஆய்வின் அறிக்கை, தற்போது கடல் ஆர்வலர்களிடையே பெரும் விவாதப்பொருளாக மாறியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
வடக்கு அயர்லாந்து மற்றும் மேற்கு ஸ்காட்லாந்து நாடுகளின் எல்லையில், 637 கிலோமீட்டர் தொலைவிலான இரண்டு அணைகளை ஒருங்கிணைத்து கட்டுவதன் மூலம், வடக்கு கடலில் நீர்மட்ட அதிகரிப்பை தடுக்கமுடியும் என்று விஞ்ஞானிகள் அறிக்கையை சமர்ப்பித்துள்ளனர்.
வடக்கு கடல் பகுதியில் பருவநிலை மாற்றத்தின் விளைவாக, ஏற்படும் கடல்நீர் அதிகரிப்பின் காரணமாக அப்பகுதிகளில் உள்ள 25 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுகின்றனர். 15 வடக்கு ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார மண்டலம் கடும்பாதிப்பிற்குள்ளாகின்றன. இதற்கு தீர்வுகாணும் பொருட்டு, Northern European Enclosure Dam (NEED) என்பதனடிப்படையில், தீர்வை உருவாக்க இந்த விஞ்ஞானிகளின் ஆய்வு பயன்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராயல் நெதர்லாந்தின் கடல் ஆய்வு மையத்தின் ஜோயர்ட் குரோஸ்காம்ப் மற்றும் ஜெர்மனியின் ஹெல்ம்ஹோல்ட்ஜ் கடல் ஆராய்ச்சி மையத்தின் ஜோகிம் ஜெல்சன் இணைந்து இந்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அணைகளின் பரப்பை மட்டுப்படுத்துவதன் கடல்நீர் மட்ட உயர்வட கட்டுப்படுத்தலாம் என்பதே, இந்த Northern European Enclosure Dam (NEED) மகத்துவமாக தெரிவிக்கப்படுகிறது.
திட்டம் : வடக்கு அயர்லாந்து மற்றும் மேற்கு ஸ்காட்லாந்து நாடுகளின் எல்லையில், 637 கிலோமீட்டர் தொலைவிலான இரண்டு அணைகளை ஒருங்கிணைத்து கட்டுவதன் மூலம், வடக்கு கடலில் நீர்மட்ட அதிகரிப்பை தடுக்கமுடியும் அதாவது மொத்தமுள்ள 637 கிமீ தொலைவிலான திட்டத்தில், வடக்கு ஸ்காட்லாந்து மற்றும் மேற்கு நார்வே பகுதியில் 476 கி.மீக்கும், 121 மீ முதல் 321 மீ வரையிலான ஆழத்திற்கும், பிரான்ஸ் - தென்மேற்கு இங்கிலாந்து பகுதியில் 161 கிமீ தொலைவிலும், 85 முதல் 102 மீ ஆழத்திற்கும் 2 அணைகளை ஒருங்கிணைத்து கட்டப்பட வேண்டும். இதன்மூலம், அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்து வடக்கு மற்றும் பால்டிக் கடலை பிரிப்பதனால், கடல்நீர் மட்ட உயர்வு பெருமளவிற்கு கட்டுப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டம் வெற்றியடையும் பட்சத்தில், பெர்சியன் வளைகுடா, மத்திய தரைக்கடல், பால்டிக் கடல், ஐரிஷ் கடல் மற்றும் செங்கடல் பகுதிகளிலும் இத்திட்டத்தை செயல்படுத்த முடியும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
பகுத்தறிவு : இத்திட்டம் மேலோட்டமாக பார்க்கும்போது யதார்த்தத்திற்கு ஒப்பானது, பிரமாண்டமானது போல தோன்றினாலும், இத்திட்டத்தை செயல்படுத்த அதிகபட்ச பணம் செலவாகும். மற்ற வகைகளை ஒப்பிடும்போது இதன் செலவு பன்மடங்கு அதிகரிக்கும். மேலும் இத்திட்டத்தில், செயல்பாடு, பாதுகாப்பு மற்றும் நிர்வகிக்கப்பட்ட பின்வாங்கல் குறித்த எந்த தகவலும் இல்லை.
இதில் நிர்வகிக்கப்பட்ட பின்வாங்கலாக கருதப்படுவது யாதெனில், இத்திட்டத்திற்கு தேசிய அளவில் மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தவல்லது. அரசியல் ஸ்திரத்தன்மை, உளவியல் பிரச்னைகள், அப்பகுதி வாழ் மக்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரம் உள்ளிட்டவைகளில் பெரும்தாக்கத்தை ஏற்படுத்திவருகின்றன. மக்களின் அன்றாட வாழ்க்கை நிகழ்வில் பெரும்தாக்கத்தை இவை ஏற்படுத்திவிடுகின்றன என்பதை யாராலும் மறுக்க இயலாது.
சாத்தியம் : தென்கொரியாவின் ஷேமாஞ்ஜியம் கடல்பகுதியில் 33.9 கி.மீ தொலைவிற்கு கடற்சுவர் மற்றும் நெதர்லாந்தின் ரோட்டன்டாம் துறைமுகம் பகுதியில் கட்டப்பட்டுள்ள மாஸ்விலக்தே உள்ளிட்டவை அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்டதற்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.இவைகளின் கட்டுமானங்களுக்கு முறையே 250 பில்லியன் மற்றும் 550 பில்லியன் யூரோக்கள் செலவு பிடித்தன. 20 ஆண்டுகளாக இந்த திட்டம் கட்டப்பட்டு வந்தது. இந்த திட்டத்திற்கு 15 வடக்கு ஐரோப்பிய நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்ல 0.07 சதவீதம் முதல் 0.16 சதவீதம் வரையிலான தொகை பயன்பட்டு வந்தது. இங்கிலாந்து, டென்மார்க், நெதர்லாந்து, ஜெர்மனி மற்றும் பெல்ஜியம் உள்ளிட்ட நாடுகளின் 20 ஆண்டுகளுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.15 சதவீதம் முதல் 0.32 சதவீதம் வரையிலான தொகை, இந்த திட்டங்களுக்காகவோ, கடல் நீர் மட்ட அதிகரிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவோ அல்லது இவ்விரண்டிற்குமோ பயன்படுத்த செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தின் கட்டுமானம், கடல்வாழ் உயிரினங்களின் தகவமைப்புகளை மட்டுமல்லாது அது சார்ந்த சூழ்நிலைகளிலும் கடும்பாதிப்பை ஏற்படுத்தும். இதன்காரணமாக சுற்றுலாத்துறை, மீன்பிடி தொழில் கடுமையாக பாதிக்கப்படுவதுடன் சமூகம் மற்றும் கலாச்சார ரீதியாகவும் அதீத பாதிப்பை ஏற்படுத்தும் என்று மேற்கோள் காட்டப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.