scorecardresearch

நிலக்கரி வரி ஊழல்: சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்புடைய இடங்களில் இ.டி சோதனை ஏன்?

நிலக்கரி வரி ஊழல், சட்ட விரோதப் பணப் பரிமாற்றம் உள்ளிட்ட வழக்குகள் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்களுக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.

நிலக்கரி வரி ஊழல்: சத்தீஸ்கர் காங்கிரஸ் தலைவர்கள் தொடர்புடைய இடங்களில் இ.டி சோதனை ஏன்?

ராய்பூரில் இன்னும் 2 தினங்களில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற உள்ள நிலையில் நேற்று (திங்கள்கிழமை) சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் சில அரசு அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை சோதனை நடத்தியது.
மாநிலத்தில் நிலக்கரி வரி விதிப்பில் மிகப்பெரிய மோசடி நடந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டது. இது தொடர்பான சட்ட விரோதப் பணப் பரிமாற்ற வழக்கை மத்திய ஏஜென்சி விசாரித்து வரும் நிலையில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

சத்தீஸ்கரில் முதல்வர் பூபேஷ் பாகல் தலைமையிலான காங்கிரஸ் அரசு நடைபெற்று வருகிறது. நிலக்கரி வரி விதிப்பு முறைகேடுகள்
தொடர்பாக சத்தீஸ்கரில் மூத்த காங்கிரஸ் தலைவர்களின் வீடுகள், அலுவலங்களில் சோதனை நடைபெற்றது.

வழக்கு என்ன?

நிலக்கரி நுகர்வு நிறுவனங்களிடம் இருந்து, சில இடைத்தரகர்கள், முக்கிய அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன், ஒரு டன் நிலக்கரிக்கு, 25 ரூபாய் சட்ட விரோதமாக மாநிலத்தில் வசூலிக்கப்படுவதாக இ.டி குற்றஞ்சாட்டியுள்ளது. இதுபோல் கடந்த சில ஆண்டுகளில், 540 கோடி ரூபாய்க்கு மேல் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பகுதி காங்கிரஸ் அரசியல்வாதிகளுக்கு சென்றுள்ளதாகவும் ஏஜென்சி குற்றம்சாட்டியுள்ளது.

வருமான வரித் துறையின் எஃப்ஐஆர் அடிப்படையில் கடந்த ஆண்டு அக்டோபரில் அமலாக்கத் துறை விசாரணையைத் தொடங்கியது.
அதன்பிறகு பல இடங்களில் சோதனை மேற்கொண்டு, 9 பேர் கைது செய்யப்பட்டு 170 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

வழக்கு ஏன் முக்கியமானது?

இந்த வழக்கு தொடர்பாக அமலாக்கத் துறை மாநிலத்தில் உள்ள உயர் அதிகாரிகள் தொடர்புடைய இடங்களை சோதனை செய்தது மட்டுமல்லாமல், சிலரை கைது செய்து குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் முதல்வர் பூபேஸ் பாகலின் துணைச் செயலர் சௌமியா சௌராசியா கைது செய்யப்பட்டார். உயர் அதிகாரியான சௌராசியா பாகேலின் அலுவலகத்தில் கணிசமான செல்வாக்கு கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

சௌராசியாவைத் தவிர, பல்வேறு உயர் அதிகாரிகளின் 2004 பேட்ச் ஐஏஎஸ் அதிகாரி பி. அன்பழகன் தற்போது நீர்வளத் துறை, சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறையின் செயலாளராக உள்ளார். கைது செய்யப்பட்ட ஐஏஎஸ் அதிகாரி சமீர் விஷ்னோய் ஆகியோர் தொடர்புடைய இடங்களில் சோதனை செய்யப்பட்டது.

கடந்த ஆண்டு லக்ஷ்மிகாந்த் திவாரி, இந்திரமணி குழுமத்தைச் சேர்ந்த தொழிலதிபர் சுனில் குமார் அகர்வால் மற்றும் ஐஏஎஸ் அதிகாரி விஷ்ணோய் ஆகியோரை கைது செய்த ஏஜென்சி, சட்டவிரோதமாக ஒரு நாளைக்கு 2-3 கோடி ரூபாய் வருமானம் ஈட்டுவதாகக் கூறியது.

நேற்று மீண்டும் சோதனை

குற்றச் செயல்கள் மூலம் வருமானம் பெற்றதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தப்பட்டதாக இ.டி தெரிவித்துள்ளது.

சட்டவிரோத நிலக்கரி வரி விதிப்பின் மூலம் வருமானம் ஈட்டிய ரூ.540 கோடியில் ரூ.277 கோடி அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளின் கருவூலங்களுக்குச் சென்றதாகவும், பினாமி சொத்துகள் வாங்குவதற்காக செலவிடப்பட்டதாகவும் அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டி வழக்குப் பதிவு செய்துள்ளது. சொத்துகள் வாங்கியதில் ரூ.170 கோடி செலவிடப்பட்டதாகவும், ரூ.36 கோடி நேரடியாக சௌராசியாவுக்கும், ரூ.52 கோடியை மாநிலத்தில் ஆளும்கட்சியின் மூத்த அரசியல்வாதிக்கும், சத்தீஸ்கர் எம்.எல்.ஏ.க்களுக்கு ரூ.4 கோடியும், ரூ.6 கோடி கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் ஜார்கண்டிற்கு ரூ.5 கோடியும், பெங்களூருவுக்கு ரூ.4 கோடியும் அனுப்பப்பட்டுள்ளது எனவும் ஏஜென்சி தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Coal levy scam why ed is searching places linked to chhattisgarh congress leaders