scorecardresearch

மருத்துவமனைக்கு செல்வதைக் குறைக்கும் காம்போ ஆன்டிபாடி சிகிச்சை

Combo antibody treatment reduces hospitalisation Tamil News அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு கோவிட் -19-ன் தாக்கத்தைக் குறைக்க மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் சிகிச்சை உதவுகிறது.

Combo antibody treatment reduces hospitalisation Tamil News
Combo antibody treatment reduces hospitalisation Tamil News

Combo antibody treatment reduces hospitalisation Tamil News : ஒரு சமீபத்திய ஆய்வில், மயோ கிளினிக் ஆராய்ச்சியாளர்கள் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் அவசர பயன்பாட்டு அங்கீகாரம் கொண்ட casirivimab மற்றும் imdevimab ஆகிய இரண்டு மோனோக்ளோனல் ஆன்டிபாடி சிகிச்சைகள், லேசான முதல் மிதமான கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்களை ஆபத்திலிருந்து காப்பாற்றுகிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர். இந்த ஆய்வு தி லான்செட்டின் இ-க்ளினிகல் மெடிசினில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த ஆய்வில் பதிவுசெய்யப்பட்ட கிட்டத்தட்ட 1400 மாயோ கிளினிக் நோயாளிகளில், 696 பேர் டிசம்பர் 2020 மற்றும் ஏப்ரல் தொடக்கத்தில், இந்த மருந்து கலவையைப் பெற்றனர். சம எண்ணிக்கையிலான நோயாளிகள், இந்த மருந்து கலவையைப் பெறவில்லை. சிகிச்சையின் பின்னர் 14, 21 மற்றும் 28 நாட்களில் அவர்களின் நிலையை மதிப்பீடு செய்தபின், ஒவ்வொரு கட்டத்திலும், சிகிச்சை பெறும் குழுவிற்கு மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கான எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருப்பது கண்டறியப்பட்டது.

14 நாட்களில், சிகிச்சை பெற்ற குழுவில் 1.3 % பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதே நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாத குழுவில் 3.3 % பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 21-வது நாளில், சிகிச்சை மற்றும் சிகிச்சை அளிக்கப்படாத குழுக்களிலிருந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டவர்களின் சதவிகிதம் முறையே 1.3 மற்றும் 4.2 ஆக பதிவாகியது. 28-வது நாளில், சிகிச்சை அளிக்கப்படாத நோயாளிகளில் 4.6% உடன் ஒப்பிடும்போது 1.6% சிகிச்சை பெற்ற நோயாளிகள் மட்டுமே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

இந்தத் தரவுகளிலிருந்து, சிகிச்சை பெற்ற நோயாளிகளிடையே மருத்துவமனையில் 60% -70% ஒப்பீட்டளவில் குறைப்பு இருப்பதை ஊகிக்க முடியும் என்று மாயோ கிளினிக் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

“ஊசி மருந்துகளின் கலவையான மோனோக்ளோனல், பலவிதமான ஒன்றுக்கும் மேற்பட்ட உடல்நல பிரச்சனைகள் மற்றும் அதிக ஆபத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுகிறது. மேலும், லேசான அல்லது கோவிட் -19-ன் மிதமான பாதிப்பில் உள்ளவர்களை, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படாமல் மீட்க ஒரு வாய்ப்பைப் பெறுகிறார்கள். இந்த கட்டத்தில் ஒட்டுமொத்தமாக எங்கள் முடிவு என்னவென்றால், அதிக ஆபத்துள்ள நோயாளிகளுக்கு கோவிட் -19-ன் தாக்கத்தைக் குறைக்க மோனோக்ளோனல் ஆன்டிபாடிகள் சிகிச்சையில் ஒரு முக்கிய வழி” என்று மாயோ கிளினிக் தொற்று நோய் நிபுணரும் ஆய்வின் மூத்த எழுத்தாளருமான ரேமண்ட் ரசோனபிள் குறிப்பிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Explained news download Indian Express Tamil App.

Web Title: Combo antibody treatment reduces hospitalisation tamil news