ஆகஸ்டில் 45% அதிகம்: இந்தியாவின் ஏற்றுமதி அதிகரிக்க துணைநின்ற துறைகள் எவை?

இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதி ஆகஸ்ட் மாதத்தில் 33.14 பில்லியன் அமெரிக்க டாலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

export india

நாட்டின் ஏற்றுமதி, கடந்த ஆகஸ்ட் மாதத்தில் 45.2 சதவீதம் அதிகரித்துள்ளதாக, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 45 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 33.14 பில்லியன் அமெரிக்க டாலர் (2.42 லட்சம் கோடி ரூபாயாக) என மதிப்பிடப்பட்டுள்ளது.

2021 ஏப்ரல் முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் ஏற்றுமதியானது 163.7 பில்லியன் அமெரிக்க டாலரை( 12.27 லட்சம் கோடி) எட்டியுள்ளது. கடந்த 2020 ஏப்ரல்-ஆகஸ்ட் நிதியாண்டை விட சுமார் 23 சதவீதம் அதிகமாக உள்ளது. 2022ஆம் நிதியாண்டில் 400 பில்லியன் டாலர் பொருட்களை ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு இலக்காக கொண்டுள்ளது.

ஏற்றுமதியை போலவே இறக்குமதியும் கடந்த ஆகஸ்டில் அதிகரித்துள்ளது. இம்மாதத்தில் இறக்குமதி 51.1 சதவீதம் அதிகரித்து, 47 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இந்த நிதியாண்டின் வர்த்தக பற்றாக்குறையை 55.9 பில்லியன் டாலராக உயர்த்தியது. இது முந்தைய ஆண்டில் 22 பில்லியன் டாலராக இருந்தது.

ஏற்றுமதி உயர்வுக்கு முக்கிய காரணங்கள் என்ன?

ஏற்றுமதி வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது இரும்பு, ஸ்டீல், இயங்திரங்கள் போன்ற பொருட்கள், பெட்ரோலிய பொருட்கள், ரத்தினங்கள் மற்றும் நகைகள், ஜவுளி மற்றும் ஆடைகளின் அதிக ஏற்றுமதி ஆகும். ஏற்றுமதி ஊக்குவிப்பு கவுன்சிலின் கூற்றுப்படி, இந்த நிதியாண்டில் அமெரிக்கா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் சீனாவில் இருந்து தேவை அதிகரித்துள்ளது. பொருட்கள் ஏற்றுமதி 2020 ஆகஸ்டில் 58.8 சதவீதம் அதிகரித்துள்ளது.

நடப்பு தேவை, கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஆகிய காரணங்களால் முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் பெட்ரோலியப் பொருட்களின் ஏற்றுமதி 139.8 சதவிகிதம் உயர்ந்துள்ளது. ரத்தினங்கள் மற்றும் நகைகளின் ஏற்றுமதி கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் புதுப்பிக்கப்பட்ட தேவையின் பின்னணியில் 88 சதவீதம் அதிகரித்துள்ளது.

தொற்றுநோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது இந்தியாவின் ஏற்றுமதி செயல்திறன் எப்படி இருக்கிறது?

முதல் ஐந்து மாதங்களில் மொத்த ஏற்றுமதி ஏப்ரல்-ஆகஸ்ட் மாதத்துடன் ஒப்பிடும்போது 23 சதவிகிதம் உயர்ந்துள்ளது. எண்ணெய் மற்றும் நகைகள் அல்லாத ஏற்றுமதி 3.3 சதவிகிதம் மட்டுமே அதிகரித்துள்ளது. இது அதிக கச்சா எண்ணெய் விலை மற்றும் தேவை மீட்கப்படுவதைக் குறிக்கிறது. ஏற்றுமதியின் ஒட்டுமொத்த மதிப்பை உயர்த்துவதில் ரத்தினங்கள் மற்றும் நகைகள் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டுள்ளன.

அதிக இறக்குமதி மற்றும் வர்த்தக பற்றாக்குறையை தூண்டுவது என்ன?

தங்கம் இறக்குமதியில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு அதிக வர்த்தக பற்றாக்குறைக்கு முக்கிய காரணமாகும்.

“ஆகஸ்ட் 2021 இல் தங்கம் இறக்குமதி ஐந்து மாதங்களில் அதிகபட்சமாக 6.7 டாலராக ஆக உயர்ந்தது. மேலும் ஜூலை 2021 உடன் ஒப்பிடுகையில் பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறையின் 88 சதவிகிதம் அதிகரிப்புக்கு காரணமாக இருந்தது” என்று இக்ரா மதிப்பீடுகளின் தலைமை பொருளாதார நிபுணர் அதிதி நாயர் கூறினார்.

தங்கம் இறக்குமதி ஆகஸ்ட் மாதத்தில் 82.2 சதவீதம் அதிகரித்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் பெட்ரோலியப் பொருட்களின் இறக்குமதி ஜூலை 2021 உடன் ஒப்பிடுகையில் நிலையானதாக இருந்தது, ஆனால் கச்சா எண்ணெய் விலை கணிசமாக அதிகரித்ததாலும், பெட்ரோலியப் பொருட்களுக்கான தேவை அதிகரித்ததாலும் கடந்த ஆண்டை விட 80.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Commerce ministry indias exports increase by 45 in august

Next Story
80களில் நடைபெற்ற வன்னியர்கள் இயக்கமும், அதன் முக்கியத்துவமும்Vanniyar movement in Tamil Nadu
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express