ஒரு பொதுவான ’அழற்சி எதிர்ப்பு மருந்து’ லேசான மற்றும் மிதமான கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் பயனுள்ள வைரஸ் தடுப்பு முகவராக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இண்டோமெதசின் (indomethacin) என்ற மருந்து, பல்வேறு வகையான அழற்சி தொடர்பான நிலைமைகளுக்கு சிகிச்சையளிக்க பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. ஐஐடி மெட்ராஸின் கொரோனா நோயாளிகள் குறித்த ஆய்வு, நேச்சர் சயின்டிஃபிக் ரிப்போர்ட்ஸில் வெளியிடப்பட்டுள்ளது.
மருந்து: இண்டோமெதசின் என்பது ஸ்டீராய்ட் அல்லாத ஒரு அழற்சி எதிர்ப்பு மருந்து, இது காப்ஸ்யூல்கள் மற்றும் லிக்வைடு சஸ்பென்ஷன் வடிவில் கிடைக்கிறது, இதை வாய்வழியாக எடுத்துக்கொள்ள வேண்டும். யுஎஸ் நேஷனல் லைப்ரரி ஆஃப் மெடிசின் படி, வலி, காய்ச்சல் மற்றும் வீக்கத்தை ஏற்படுத்தும் உடலின் ஒரு பொருளின் உற்பத்தியை நிறுத்துவதன் மூலம் இண்டோமெதசின் செயல்படுகிறது.
பல்வேறு வகையான மூட்டுவலிகளால் (arthritis) ஏற்படும் மிதமான முதல் கடுமையான வலி, வீக்கம் மற்றும் விறைப்பு மற்றும் வீக்கத்தால் ஏற்படும் தோள்பட்டை வலி ஆகியவற்றைப் போக்க இது பயன்படுகிறது.
கண்டுபிடிப்புகள்:
சென்னை பனிமலர் மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சியாளர்களால் ரேண்டம் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அனுமதிக்கப்பட்ட 210 நோயாளிகளில், 107 பேர்’ கட்டுப்பாட்டுக் குழுவிற்கு தோராயமாக ஒதுக்கப்பட்டு, பாராசிட்டமால் மற்றும் நிலையான கவனிப்புடன் சிகிச்சை பெற்றனர். அதேநேரத்தில், 103 நோயாளிகளுக்கு இண்டோமெதசின் மற்றும் நிலையான சிகிச்சை சிகிச்சை அளிக்கப்பட்டது என்று ஐஐடி மெட்ராஸின் ஊடக வெளியீடு தெரிவித்துள்ளது.
இண்டோமெதசினைப் பெற்ற 103 நோயாளிகளில் யாருக்கும் ஆக்ஸிஜன் குறைபாடில்லை. அதேநேரம், கட்டுப்பாட்டுக் குழுவில் இருந்த 20 நோயாளிகள் நிறைவுற்ற நிலையில் இருந்தனர் (செறிவு அளவு 93% க்கும் குறைவாக).
இண்டோமெதசின் குழு நோயாளிகள் அனைத்து அறிகுறிகளிலிருந்தும் 3-4 நாட்களில் குணமடைந்தனர், அதே நேரத்தில் கட்டுப்பாட்டு குழுவிற்கு இரண்டு மடங்கு நேரம் எடுத்தது என்று வெளியீடு கூறியது.
கல்லீரல் மற்றும் சிறுநீரக செயல்பாடு சோதனைகள் எந்த பாதகமான எதிர்வினையையும் காட்டவில்லை.
14 வது நாள் பின்தொடர்தல்’ கட்டுப்பாட்டு குழு நோயாளிகளில் பாதி பேருக்கு பல அசௌகரியங்கள் இருப்பதாகக் காட்டியது, அதே நேரத்தில் ஒரு சில இண்டோமெதசின் நோயாளிகள் சோர்வு மட்டுமே புகார் செய்தனர் என்று வெளியீடு கூறியது.
முந்தைய கண்டுபிடிப்புகள்: இந்திய மருத்துவ சங்கத்தின் ஜர்னலில்’ இதே குழு மேற்கொண்ட முந்தைய ஆய்வில், 72 நோயாளிகளுக்கு இண்டோமெதசின் மற்றும் 72 நோயாளிகளுக்கு பாராசிட்டமால் வழங்கப்பட்டது. பாராசிட்டமால் குழுவில் 28 நோயாளிகளுடன் ஒப்பிடும்போது, இண்டோமெதசின் சிகிச்சையின் கீழ் ஒரு நோயாளி மட்டுமே ஹைபோக்ஸியாவை உருவாக்கினார்.
கொரோனா அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகளுக்கு இண்டோமெதசின் வழங்குவது வெண்டிலேஷன் தேவையைத் தடுக்கிறது என்று அந்த வெளியீடு கூறியது.
“இந்தோமெதசின் அனைத்து வகைகளிலும் வேலை செய்கிறது. நாங்கள் இரண்டு சோதனைகளைச் செய்தோம், ஒன்று முதல் அலையிலும் மற்றொன்று இரண்டாவது அலையிலும். முடிவுகள் ஒரே மாதிரியாக இருந்தன, ”என்று ஆராய்ச்சியாளர் பேராசிரியர் ராஜன் ரவிச்சந்திரன் கூறினார்.
(Study: ‘An open label randomized clinical trial of Indomethacin for mild and moderate hospitalised Covid-19 patients’, Rajan Ravichandran et al, Nature Scientific Reports.)
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“