ஆகஸ்ட் 1-ம் தேதி முதல், பிரிகேடியர் மற்றும் அதற்கு மேற்பட்ட பதவிகளில் உள்ள அனைத்து அதிகாரிகளும் - மேஜர் ஜெனரல்கள், லெப்டினன்ட் ஜெனரல்கள் மற்றும் ஜெனரல் - அவர்கள் ரெஜிமென்ட் அல்லது கார்ப்ஸ் இணைப்புகளைப் பொருட்படுத்தாமல் பொதுவான சீருடைப் பொருட்களை அணிவார்கள் என்று சமீபத்திய இராணுவத் தளபதிகள் மாநாட்டில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
மூத்த ராணுவ அதிகாரிகள் அணியும் சீருடை எப்படி மாறும்?
பிரிகேடியர், மேஜர் ஜெனரல், லெப்டினன்ட் ஜெனரல் மற்றும் ஜெனரல் ஆகிய பதவிகளில் உள்ள அனைத்து அதிகாரிகளும் இப்போது ஒரே நிறத்தில் உள்ள பெரட்டுகளை (தொப்பிகள்) அணிவார்கள், அவர்கள் பதவி அந்தஸ்த்தின் பொதுவான பேட்ஜ்கள், பொதுவான பெல்ட் கொக்கி மற்றும் ஒரு பொதுவான காலணியை அணிவார்கள்.
அவர்கள் இனி தங்கள் தோள்களில் ரெஜிமென்ட் லேன்யார்டுகளை (கயிறுகள்) அணிய மாட்டார்கள். அவர்கள் ‘சிறப்புப் படைகள்’, ‘அருணாச்சல சாரணர்கள்’, ‘டோக்ரா சாரணர்கள்’ போன்ற தோள்பட்டை ஃபிளாஷ்களை அணிய மாட்டார்கள்.
எனவே, அவர்கள் ஒரு குறிப்பிட்ட படைப்பிரிவு அல்லது சிறப்பு படைப்பிரிவைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணும் சீருடை எதுவும் இருக்காது. இந்த உயர் பதவியில் உள்ள அனைத்து அதிகாரிகளும் ஒரே மாதிரியான சீருடையை அணிவார்கள்.
ராணுவத்தில் இதுபோன்ற பொருட்களை அணிவதில் தற்போதைய நிலை என்ன?
தற்போதைய நிலவரப்படி, லெப்டினன்ட் முதல் ஜெனரல் வரையிலான அனைத்து அதிகாரிகளும் தங்கள் படைப்பிரிவு அல்லது சிறப்பு படைப் பிரிவின் இணைப்பின்படி ஒரே மாதிரியான ஆடைகளை (உடை அல்லது கூடுதல் உபகரணங்களின் பொருட்கள்) அணிகிறார்கள்.
எனவே, காலாட்படை அதிகாரிகள் மற்றும் ராணுவ புலனாய்வு அதிகாரிகள் அடர் பச்சை நிற பெரட்டுகளை (தொப்பிகள்) அணிவார்கள்; கவசப் படை அதிகாரிகள் கருப்பு நிற பெரட்டுகளை (தொப்பிகள்) அணிவார்கள்; பீரங்கி, பொறியாளர்கள், சிக்னல்கள், வான் பாதுகாப்பு அதிகாரிகள், EME, ASC, AOC, AMC மற்றும் சில சிறிய படை அதிகாரிகள் அடர் நீல நிற பெரட்டுகளை அணிகின்றனர்; பாராசூட் ரெஜிமென்ட் அதிகாரிகள் மெரூன் நிற பெரட்டுகளை அணிவார்கள்; இராணுவ வான் சிறப்புப் படைப்பிரிவு அதிகாரிகள் சாம்பல் நிற பெரட்டுகளை அணிவார்கள்.
சம்பிரதாயமான தலைக்கவசமும் மாறுபடும் - பெரும்பாலான காலாட்படை படைப்பிரிவுகள், கவசப் படைப் படைப்பிரிவுகள், மற்றும் பிற ஆயுதங்கள் மற்றும் சேவைகள் ரெஜிமென்ட் பேட்ஜுடன் உச்ச தொப்பியைக் கொண்டுள்ளன. கோர்க்கா ரைபிள்ஸ் படைப்பிரிவுகள், குமாவோன் ரெஜிமென்ட், கர்வால் ரெஜிமென்ட் மற்றும் நாகா ரெஜிமென்ட் அதிகாரிகள் ஒரு வகையான மெல்லிய தொப்பியை அணிவார்கள். இது டெராய் தொப்பி அல்லது கூர்க்கா தொப்பி என்று அழைக்கப்படுகிறது.
ஒவ்வொரு காலாட்படை படைப்பிரிவு மற்றும் சிறப்பு படைப்பிரிவினரின் தோள்பட்டையைச் சுற்றி கயிறு அணிந்து அதை வலது அல்லது இடது சட்டை பாக்கெட்டுகளில் வைப்பது மற்றும் பாரம்பரியமாக இருக்கலாம். பதவி அந்தஸ்துக்கான பேட்ஜ்களும் வேறுபடுகின்றன - ரைபிள் ரெஜிமென்ட்கள் கருப்பு நிற பேட்ஜ்களை அணிகின்றன, சில படைப்பிரிவுகள் கில்ட் மற்றும் சில்வர் நிற பேட்ஜ்களை அணிகின்றன. ரெஜிமென்ட் அல்லது சிறப்பு படைப் பிரிவு தனிப்பட்ட மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களின்படி இந்த பதவி அந்தஸ்து பேட்ஜ்களுடன் வெவ்வேறு வண்ண பின்னணிகள் உள்ளன.
சீருடையில் உள்ள பொத்தான்களும் ரெஜிமென்ட் பாரம்பரியத்திற்கு ஏற்ப மாறுபடும். ரைபிள் ரெஜிமென்ட்கள் கருப்பு பொத்தான்களை அணிகின்றன. அதே நேரத்தில் காவலர்களின் படையணி அதிகாரிகள் தங்க பொத்தான்களை அணிவார்கள்.
படைப்பிரிவு மரபுகளின்படி பெல்ட் பல்வேறு கொக்கிகளையும் கொண்டுள்ளது. ஒவ்வொன்றும் அதற்கென சொந்த முறையான வண்ணத்தில் கொடிகளையும் கொண்டுள்ளது.
சீருடை மாற்றத்திற்கான காரணம் என்ன?
ராணுவத்தில் ரெஜிமென்ட் சேவையில் மேலும் உயர் பதவிகளுக்கு செல்லும் பெரும்பாலான அதிகாரிகளின் பதவி கர்னல் பதவியில் முடிவடைகிறது. எனவே, குறிப்பிட்ட ரெஜிமென்ட் அல்லது சிறப்பு படைப் பிரிவின் அனைத்து சீருடை இணைப்புகளும் அந்த பதவி அந்தஸ்தில் முடிவடைய வேண்டும். அதனால், இருக்கும் எந்தவொரு படைப்பிரிவு குறுகிய மனப்பான்மையும் உயர் பதவிகளுக்கு உயர்த்தப்படாது.
உயர் பதவிகளில் நியமனம் என்பது பெரும்பாலும் கலப்புப் படைப்பிரிவின் கட்டளைத் துருப்புக்களைக் குறிக்கும் என்பதால், இந்த துருப்புக்களுக்கு கட்டளையிடும் மூத்த அதிகாரிகள் படைப்பிரிவைக் காட்டிலும் நடுநிலை சீருடையில் தங்களை முன்னிலைப்படுத்துவது மட்டுமே பொருத்தமானதாக இருக்கும்.
பொதுவான சீருடை மாற்றம் செய்வது இது முதல் முறையா?
ரெஜிமென்ட் இணைப்புகளை அணிவதற்கான மாற்றங்கள் செய்திருப்பது என்பது உண்மையில், 40 ஆண்டுகளுக்கு முன்பு பின்பற்றப்பட்ட நடைமுறைக்கு இப்போது ராணுவம் திரும்பியுள்ளது.
1980-களின் நடுப்பகுதி வரை, படைப்பிரிவு சேவை லெப்டினன்ட் கர்னல் பதவி வரை இருந்தது. கர்னல் மற்றும் அதற்கு மேல் பதவியில் உள்ள அதிகாரிகள் பொதுவான சீருடை வடிவங்கள் மற்றும் சின்னங்களைக் கொண்டிருந்தனர். கர்னல்கள் மற்றும் பிரிகேடியர்கள் தங்கள் படைப்பிரிவு சின்னங்களை உதறிவிட்டு, காக்கி நிற தொப்பியுடன் அசோகர் சின்னத்தை தங்கள் தொப்பி பேட்ஜ்களில் அணிந்திருந்தனர்.
இருப்பினும், 1980-களின் நடுப்பகுதியில் ஒரு பட்டாலியன் அல்லது படைப்பிரிவின் கட்டளையை கர்னல் பதவிக்கு மேம்படுத்த முடிவு எடுக்கப்பட்டது. இதனால், கர்னல்கள் மீண்டும் படைப்பிரிவு சின்னங்களை அணியத் தொடங்கினர். கூடுதலாக, பிரிகேடியர்கள் பொது அதிகாரிகளின் தொப்பி பேட்ஜை அணிய அனுமதிக்கப்பட்டனர். இதில் ஓக் மர இலைகளின் மாலையுடன் குறுக்கு வாள் மற்றும் தடி ஆகியவை அடங்கி இருக்கும்.
மற்ற படைகளில் உள்ள மரபு என்ன?
பிரிட்டிஷ் ராணுவத்தில், இந்திய ராணுவம் அதன் சீருடை வடிவத்தையும் அதனுடன் தொடர்புடைய அறிவியல் கலை பயன்பாடுகளையும் பெறுகிறது. கர்னல் மற்றும் அதற்கு மேல் உயர் பதவியில் உள்ள அதிகாரிகள் அணியும் சீருடை, ரெஜிமென்ட் சீருடையில் இருந்து வேறுபடுத்துவதற்காக பணியாளர் சீருடை என குறிப்பிடப்படுகிறது. ரெஜிமென்ட் சீருடையின் எந்தப் பொருளையும், குறிப்பாக தலைக்கவசம், பணியாளர் சீருடையுடன் அணிவது அங்கீகரிக்கப்படவில்லை.
அண்டை நாடுகளில், பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ராணுவங்கள் பிரிட்டிஷ் ராணுவத்தைப் போலவே பின்பற்றுகின்றன. அனைத்து ரெஜிமென்ட் சீருடைப் பொருட்களும் லெப்டினன்ட் கர்னல் பதவிக்கு அப்பால் நிராகரிக்கப்படுகின்றன. பிரிகேடியர் மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து அதிகாரிகளும் ஒரே மாதிரியான சீருடைகளை அணிவார்கள்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.