கோவிட் மரணங்களுக்கு இழப்பீடு: உச்ச நீதிமன்றத்தில் வழக்கு… சட்டம் சொல்வது என்ன?

மத்திய அரசு சனிக்கிழமை சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், மாநில அரசுகள் இழப்பீடு அளிக்க முடியாது என்று தெரிவித்தது. மேலும், மத்திய அரசு சுகாதார தலையீடுகள் உட்பட ஒரு பரந்த அணுகுமுறைக்கு ஆதரவாக வாதிட்டது.

Compensation for Covid deaths, covid 19 deaths, Supreme Court, Disaster Management Act, india, covid 19 india, கோவிட் மரணங்களுக்கு இழப்பீடு, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு, சட்டம் சொல்வது என்ன, கொரோனா மரணங்கள், கோவிட் மரணங்கள், what the laws says, coronavirus, corona virus deaths, Compensation for coronavirus deaths, indian govt affidavit, covid 19 explains, coronavirus explains, tamil indian express, ie tamil

கோவிட் -19 அல்லது அது தொடர்பான பிரச்னைகளால் இறந்தவர்களின் உறவினர்களுக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு கோரி இரண்டு வழக்கறிஞர்கள் அளித்த மனு மீதான தீர்ப்பை உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை ஒதுக்கிவைத்தது. மத்திய அரசு சனிக்கிழமை சமர்ப்பித்த பிரமாணப் பத்திரத்தில், மாநில அரசுகள் இழப்பீடு அளிக்க முடியாது என்று தெரிவித்தது. மேலும், மத்திய அரசு சுகாதார தலையீடுகள் உட்பட ஒரு பரந்த அணுகுமுறைக்கு ஆதரவாக வாதிட்டது.

கோவிட் மரணங்களுக்கு இழப்பீடு அளிப்பதற்கான ஏற்பாடுகள் யாவை?

கடந்த ஆண்டு, மத்திய அரசு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் கோவிட் 19ஐ ஒரு பேரிடராக அறிவித்தது.

இந்த பேரிடரால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு வழங்கப்பட வேண்டிய குறைந்தபட்ச நிவாரணங்களுக்கான வழிகாட்டுதல்களை தேசிய ஆணையம் பரிந்துரைக்கும் என்று இந்த சட்டத்தின் பிரிவு 12 (iii) கூறுகிறது. இதில் “உயிர் இழப்பு காரணமாக அவர்களுகு நிதி உதவி மற்றும் வீடுகள் சேதமடைந்தால், வாழ்வாதாரத்தை மீட்டெடுப்பதற்கான நிதி உதவி” ஆகியவை அடங்கும்.

இந்த தொகையை மத்திய அரசு அவ்வப்போது மாற்றி அமைக்கிறது. ஏப்ரல் 8, 2015 அன்று, உள்துறை அமைச்சகத்தின் பேரழிவு மேலாண்மை பிரிவு அனைத்து மாநில அரசுகலூக்கு எழுதிய கடிதத்தில் உதவி விதிமுறைகளின் திருத்தப்பட்ட பட்டியலை இணைத்துள்ளது.

“இறந்த நபர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை என்பதன் கீழ், இது குறிப்பிட்டிருப்பதாவது: “நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் அல்லது ஆயத்த நடவடிக்கைகளில் தொடர்புடையவர்கள் உட்பட இறந்த நபருக்கு ரூ.4 லட்சம் நிதி உதவி என்பது உரிய அதிகாரப் பூர்வமான இறப்பு சான்றிதழுக்கு உட்பட்டது.” என்று குறிப்பிட்டுள்ளது.

கோவிட்டுக்கான இழப்பீடு என்ன?

உள்துறை அமைச்சகம் மார்ச் 14, 2020 அன்று மாநில அரசுகளுக்கு “எஸ்.டி.ஆர்.எஃப் இன் கீழ் உதவித்தொகை வழங்கும் நோக்கத்திற்காக அறிவிக்கப்பட்ட பேரழிவாக (கோவிட் -19) கருத முடிவு செய்துள்ளது” என்று எழுதியுள்ளது. மேலும் உதவி விதிமுறைகள் மற்றும் வகைகளை ஓரளவு திருத்தியமைக்கப்பட்ட பட்டியலை இணைத்துள்ளது.” அது இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எவ்வளவு உதவித் தொகை என்தைக் குறிப்பிடவில்லை.

இறந்தவருக்கு ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்பட வேண்டுமானால், செவ்வாய்க்கிழமை வரை 3.89 லட்சத்திற்கும் அதிகமான கோவிட் தொடர்பான இறப்புகளுக்கு மொத்த செலவு ரூ.15,572 கோடிக்கு மேல் வரும்.

சில மாநிலங்கள் பணம் செலுத்த முடிவு செய்துள்ளன. ஆனால், அது எல்லா கோவிட் மரணங்களுக்கும் அல்ல. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் இறந்த நபர்களின் உறவினர்களுக்கு டெல்லி அரசு சமீபத்தில் ரூ.5 லட்சமும், கோவிட் தொற்றால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ரூ.50,000 இழப்பீடு தொகையை அறிவித்தது.

கோவிட் இறப்புகளுக்கு இழப்பீடு கோரிய மனுவுக்கு மத்திய அரசு எப்படி பதிலளித்துள்ளது?

இந்த மனுவை மே மாதம் வழக்கறிஞர்கள் கௌரவ் குமார் பன்சால் மற்றும் ரீபக் கன்சால் ஆகியோர் தாக்கல் செய்தனர். மத்திய அரசு தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தில், ரூ.4 லட்சம் இழப்பீட்டுத் தொகை என்பது மாநில அரசுகளின் சக்திக்கு அப்பாற்பட்டது என்று தெரிவித்துள்ளது. கோவிட்டால் இறந்தவ அனைவரின் உறவினருக்கும் ரூ.4 லட்சம் செலுத்தப்பட்டால், அதற்கு மாநில பேரிடர் நிவாரண நிதியத்தின் (எஸ்.டி.ஆர்.எஃப்) முழுத் தொகையையும் பயன்படுத்த வேண்டியிருக்கும். மேலும், அது தொற்றுநோய்க்கு அமைப்பாக்கப்பட்ட ஒரு நடவடிக்கையிஐ மேற்கொள்ள அல்லது பிற பேரழிவுகளை கவனித்துக்கொள்வதற்கு போதுமான நிதி பற்றாக்குறையுடன் மாநிலங்களை விடுகிறது.

“ஏற்கனவே, வரி வருவாய் குறைப்பு மற்றும் தொற்றுநோயால் சுகாதார செலவுகள் அதிகரித்ததன் காரணமாக மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசின் நிதிநிலை கடும் நெருக்கடியில் உள்ளது” என்று மத்திய அரசு கூறியுள்ளது. இது இழப்பீட்டுத் தொகை என்ற சொல்லுக்கு சட்டப்பூர்வ உரிமையின் அடிப்படையில் இல்லை என்று பொருள் ஆகும்.

மேலும், மத்திய அரசு, “பரந்த அணுகுமுறை சுகாதார தலையீடுகள், சமூக பாதுகாப்பு மற்றும் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான பொருளாதார மீட்சி ஆகியவற்றை உள்ளடக்கியது என்பது மிகவும் விவேகமான, பொறுப்பான மற்றும் நிலையான அணுகுமுறையாக இருக்கும்” என்று கூறியுள்ளது.

அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன?

தி இந்தியன் எக்ஸ்பிரஸின் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு உள்துறை அமைச்சகம் ஜூன் 2 ம் தேதி பதிலளித்துள்ளது. அதில், “உள்துறை அமைச்சகத்தைப் பொருத்தவரை, கொரோனா வைரஸ் (COVID-19) காரணமாக இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க எந்த திட்டமும் இல்லை.” சில வகைகளில் அனைத்து மாநிலங்களுக்கும் மாநில பேரிடர் மீட்பு நடவடிக்கை நிதியத்தின் கீழ் உதவி வழங்கும் நோக்கத்திற்காக இதை அறிவிக்கப்பட்ட பேரழிவாகக் கருத மத்திய அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவித்துள்ளது. அதில், மாதிரி சேகரிப்பு, உடல் வெப்பநிலை திரையிடல் மற்றும் தனிமைப்படுத்தலுக்கான நடவடிக்கைகள்; அத்தியாவசிய உபகரணங்கள் / ஆய்வகங்கள் கொள்முதல்; தற்காலிக தங்குமிடம், உணவு, உடை மற்றும் மருத்துவ பராமரிப்பு போன்ற நிவாரண நடவடிக்கைகள் அடங்கும்.

கோவிட் -19 காரணமாக தொழிலாளர்கள் இடம்பெயர்வதால் ஏற்படும் பிரச்னைகளைச் சமாளிக்க தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (என்.டி.எம்.ஏ) பல்வேறு மாநில அரசுகளுக்கு ரூ.999.94 கோடியை வழங்கியுள்ளது. இது பி.எம் கேர்ஸ் நிதியிலிருந்து பெறப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை உதவி (என்.டி.எம்.ஏ) தொகையிலிருந்து வருகிறது. ஜூன் 18ம் தேதி என்.டி.எம்.ஏ-வின் தகவல் அறியும் உரிமை விண்ணப்பத்திற்கு அளித்த பதிலின்படி, இமாச்சலப் பிரதேசம் மற்றும் மிசோரம் மட்டுமே தங்களுக்கு விடுவிக்கப்பட்ட தொகைகள் குறித்த பயன்பாட்டு சான்றிதழ்களை வழங்கியுள்ளன.

லோக்சபாவில் செப்டம்பர் 22ம் தேதி எம்.பி மனீஷ் திவாரி, “தேசிய போக்குவரத்து நெடுஞ்சாலைகளில் (தேசிய நெடுஞ்சாலைகளில்) பலியான மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசாங்கம் தேவையான போக்குவரத்து வசதிகளை வழங்க முடியாமல் போனதால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கியுள்ளதா” என்று கேள்வி எழுப்பினார். இதற்கு சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வி.கே.சிங் பதிலளித்தார்: “நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேசிய நெடுஞ்சாலைகளில் கால்நடையாக நடந்து செல்லும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் நகர்வுக்கு உதவுவதற்காக, உணவு, குடிநீர், அடிப்படை மருந்துகள், காலணிகள் போன்ற அத்தியாவசிய உதவிகள் வழங்கப்பட்டுள்ளன” என்று கூறினார்.

கடந்த ஆண்டு, கோவிட் -19 முதல் அலையின் போது 16 புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் ரயில்வே தண்டவாளத்தில் சரக்கு ரயில் மோதி இறந்த பின்னர், பிரதமர் நரேந்திர மோடி அவர்களது உறவினர்களுக்கு ரூ.2 லட்சம் இழப்பீடு அளிக்க ஒப்புதல் அளித்திருந்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Compensation for covid deaths petition in supreme court what says laws

Next Story
தமிழில் நிவின் பாலியின் ‘ரிச்சி’… பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com