Advertisment

சென்சோடைன் விளம்பரங்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை... என்ன காரணம்?

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 இன் பிரிவு 21 இன் கீழ், GSK நிறுவனம் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் ஈடுபட்டுள்ளதாக CCPA கண்டறிந்தால், 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஒரு வருடம் வரை எந்தவொரு தயாரிப்பையும் விளம்பரப்படுத்த தடை விதிக்கப்படும்.

author-image
WebDesk
New Update
சென்சோடைன் விளம்பரங்களுக்கு நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் தடை... என்ன காரணம்?

மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (CCPA), GlaxoSmithKline நிறுவனத்தின் சென்சோடைன் தயாரிப்புக்கான விளம்பரத்தில் வெளிநாட்டு பல் மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளதால், அதனை ஒளிப்பரப்பு செய்திட தடை விதித்துள்ளது.

Advertisment

இதுதவிர, விளம்பரங்களில் நிறுவனம் செய்த தயாரிப்பு தொடர்பான பிற உரிமைகோரல்கள் குறித்து மேலும் விசாரணை நடத்தவும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

சென்சோடைன் விளம்பரங்களை நிறுத்த என்ன காரணம்?

டிவி, யூடியூப், பேஸ்புக், ட்விட்டரில் ஒளிபரப்பப்படும் சென்சோடைன் தயாரிப்புகளுக்கான சில விளம்பரங்களில் சென்சோடைன் தயாரிப்புகளை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட பல் மருத்துவர்கள் பரிந்துரைப்பதை CCPA கவனித்தது.

திருத்தப்பட்ட பல் மருத்துவர்கள் (நெறிமுறைகள்) விதிமுறைகள் 2014ன் கீழ், இந்தியாவில் பயிற்சி பெறும் பல் மருத்துவர்கள் எந்தவொரு மருந்து அல்லது தொழிலின் தயாரிப்புகளையும் பகிரங்கமாக அங்கீகரிக்க அனுமதிக்கப்படுவதில்லை.

ஆனால், GlaxoSmithKline நிறுவனத்தின் விளம்பரத்தில் இங்கிலாந்து மருத்துவர்கள் இடம்பெறுவது, இந்திய பல் மருத்துவர்களுக்குப் பொருந்தக்கூடிய சட்டத்தைத் தவிர்ப்பதாகவும், இங்கிலாந்தில் பயிற்சி பெறும் பல் மருத்துவர்கள் அதன் தயாரிப்பைப் பரிந்துரைக்கிறார்கள் என்ற எண்ணத்தையும் ஏற்படுத்தக்கூடும்.

இதுதொடர்பாக ஜனவரி 27, 2022 அன்று சிசிபிஏ வெளியிட்ட உத்தரவில், " GlaxoSmithKline நிறுவனம் இந்தியாவுக்கு வெளியே பயிற்சி பெறும் பல் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சென்சோடைன் என்ற காட்சிகள் இடம்பெற்றிருக்கும் விளம்பரங்களை 7 நாள்களுக்குள் நீக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

மேலும் , பல் சுகாதார பிரச்சினைகளுக்கு சிகிச்சையளிப்பதற்கு தகுதியான மருத்துவ நிபுணர்களான பல்மருத்துவர்கள், தயாரிப்பைப் பரிந்துரைத்து பேசும் காட்சிகளை விளம்பரத்தில் காணமுடிகிறது. இது, விளம்பரம் பார்க்கும் நுகர்வோர் பொருளை வாங்கவில்லை என்றால், மருத்துவரின் பரிந்துரையை நுகர்வோர் புறக்கணிப்பது போன்ற எண்ணம் உருவாக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளனர்.

GSK நிறுவனம் வேறு என்ன நடவடிக்கையை சந்திக்க நேரிடும்?

சென்சோடைன் விளங்பரங்களில் "உலகளவில் பல் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டது", "உலகின் நம்பர். 1 உணர்திறன் பேஸ்ட்","மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்ட நிவாரணம், 60 வினாடிகளில் வேலை செய்யும்" போன்ற வாசங்களின் உண்மை நிலையை கண்டறியம் விசாரணை நடத்தப்படும்.

நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 2019 இன் பிரிவு 21 இன் கீழ், GSK நிறுவனம் தவறாக வழிநடத்தும் விளம்பரங்களில் ஈடுபட்டுள்ளதாக CCPA கண்டறிந்தால், 10 லட்சம் ரூபாய் வரை அபராதமும், ஒரு வருடம் வரை எந்தவொரு தயாரிப்பையும் விளம்பரப்படுத்த தடை விதிக்கப்படும்.

வெளிநாட்டு மருத்துவர்களை கொண்ட சென்சோடைன் விளம்பரம் குறித்து சிசிபிஏ தானாக முன்வந்து விசாரணை தொடங்கியுள்ளது.இதுதொடர்பாக மார்ச் 2021 இல் GSK க்கு ஒரு show cause நோட்டீஸையும் வெளியிட்டது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment