Controversy in UK around breastfeeding mothers getting Covid-19 vaccine : இங்கிலாந்தில் பாலூட்டும் தாய்மார்களுக்கு கொரோனா தடுப்பூசி அல்லது பாலூட்டுதல் என்று இரண்டுக்கும் இடையே ஒன்றை தேர்வு செய்ய வேண்டும் என்று அந்நாட்டு அரசு வற்புறுத்தி வருவது தொடர்பாக இங்கிலாந்து நாட்டில் செயல்பட்டு வரும் பெண் உரிமை செயற்பாட்டாளர்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.
கொரோனாவுக்கு எதிராக அவசரகாலமாக ஃபைசர் - பையோஎன்டெக் நிறுவனத்தின் எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசியை போட்டுக்கொள்ள உலகிலேயே முதன்முறையாக இங்கிலாந்து அரசு அனுமதி அளித்தது. இந்த மாதத்தின் ஆரம்பத்தில் இருந்து பல்வேறு மக்கள் இந்த தடுப்பூசியை போட்டுக் கொள்கின்றனர்.
நீங்கள் பாலூட்டும் தாய்மார்களாய் இருப்பதால் கொரோனா வைரஸ் தடுப்பூசி பெற்றுக் கொள்ளுவதில் என்ன பிரச்சனை?
இங்கிலாந்து நாட்டின் தேசிய பொது சுகாதார திட்டமான தி நேசனல் ஹெல்த் சர்வீஸ் The National Health Service (NHS), கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானது, செயல்திறன் மிக்கது என்று கூறிவருகிறது. மேலும் இது கொரோனா வைரஸுக்கு எதிராக சிறந்த பாதுகாப்பினை உங்களுக்கு வழங்குகிறது என்றும் கூறி வருகிறது.
என்.எச்.எஸின் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில்,
நீங்கள் கர்ப்பமாக இருந்தால், உங்கள் குழந்தையை பெற்றுக் கொள்ளும் வரை கொரோனா தடுப்பூசியை பெற காத்திருக்க வேண்டும்.
நீங்கள் பாலூட்டும் தாய்மார்களாக இருந்தால் நீங்கள் உங்களின் குழந்தைக்கு பாலூட்டும் காலம் முடியும் வரை கொரோனா தடுப்பூசியை பெற காத்திருக்க வேண்டும்.
நீங்கள் கொரோனா தடுப்பூசியை செலுத்தியிருந்தால், இரண்டாம் கட்ட தடுப்பூசியை பெற்று இரண்டு மாதங்கள் ஆகும் வரை கர்ப்பம் தரிக்க கூடாது என்று கூறப்பட்டுள்ளது.
ஆகவே பாலூட்டும் தாய்மார்களுக்கும், கர்ப்பிணிகளுக்கும் பாதுகாப்பற்றதா இந்த தடுப்பூசி?
இது தொடர்பாக என்.எச்.எஸே கொஞ்சம் சந்தேகத்தில் இருப்பது புரிகிறது. தன்னுடைய இணையத்தில், கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு நீங்கள் கர்ப்பமாக இருப்பதை அறிந்து கொண்டால் பயப்பட வேண்டாம். இந்த தடுப்பூசி உங்களுக்கும் உங்களின் குழந்தைக்கும் கொரோனா நோயில் இருந்து பாதுகாப்ப்பு தரும் என்று குறிப்பிட்டுள்ளது.
கர்ப்பிணிகளுக்கும் பாலூட்டும் தாய்மார்களுக்கும் தடுப்பூசி பாதுகாப்பு இல்லை என்பதை நிரூபிக்க ஆதாரங்கள் இல்லை. ஆனால் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு முன்பு நிறைய ஆதாரங்கள் தேவைப்படுகிறது. அந்த இணையதளத்தில், இங்கிலாந்து அரசு, இந்த ஆலோசனைகள் முன்காப்பு நடவடிக்கைகள் மட்டுமே தவிர இது தடுப்பூசி பாதுகாப்பற்றது என்பதை கூறுவதற்காக அல்ல என்பதையும் மேற்கோள்காட்டியுள்ளது.
ஃபைசர்-பயோஎன்டெக் கோவிட் -19 தடுப்பூசி ஒரு புதிய வகை தடுப்பூசி, இது பயனுள்ளதாகவும் நல்ல பாதுகாப்பை கொண்டதாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது”, ஆனால் “கர்ப்ப காலத்தில் இதன் திறன் இன்னும் மதிப்பிடப்படவில்லை, எனவே இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது. போதுமான தகவல்கள் கிடைக்கும் வரை, கர்ப்பமாக இருப்பவர்கள் இந்த தடுப்பூசியை பயன்படுத்த வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.
எந்தவொரு மருந்திலும் இதுபோன்ற தரவுகளுக்காகக் காத்திருக்கும்போது, கர்ப்பமாக இருக்கக்கூடிய அல்லது தாய்ப்பால் கொடுப்பவர்களில் அதன் பயன்பாட்டைத் தவிர்ப்பது நிலையான நடைமுறையே என்று அரசு தரப்பு அறிவித்துள்ளது. “கர்ப்ப காலம் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் காலத்தில் இந்த தடுப்பூசியைப் பயன்படுத்துவதற்கு கூடுதல் சான்றுகள் கிடைக்கும் வரை இந்த ஆலோசனை முன்னெச்சரிக்கையாகும். பின்னர் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை பெறுவது சாத்தியமாகும். இந்த ஆலோசனை மாற்றப்படும் வரை நீங்கள் எதிர்பார்க்கும் மற்ற COVID-19 தடுப்பூசிகளில் ஒன்றை நீங்கள் பெறலாம்" என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது எத்தனை நபர்களை பாதிக்கும்?
கார்டியனின் கருத்துப்படி ஆயிரக்கணக்கான பெண்கள் இதனால் பாதிக்கப்படுவார்கள். அதிலும் 20 ஆயிரம் முன்கள பணியாளர்கள் இதில் அடங்குவர். நஃப்பில்ட் ட்ரஸ்ட் வெளியிட்டிருக்கும் தரவுகளை மேற்கோள்காட்டிய தி கார்டியன், 2018 மற்றும் 19 ஆண்டுகளில் இங்கிலாந்தில் இருக்கும் 46% தாய்மார்கள் தங்களின் குழந்தைகளுக்கு 6 முதல் 8 வாரம் வரை தாய்ப்பால் தருகிறார்கள்.
மற்ற நாடுகள் வழங்கியிருக்கும் அறிவுறுத்தல்கள் என்ன?
அமெரிக்காவில், டி.சி.சி. உறுப்பினர்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசியை பெறுவதற்கு பாலூட்டுதல் ஒரு தடையாக இருக்காது என்று ஒப்புக் கொண்டனர். இந்த அறிக்கையில், மூன்றாம் கட்ட சோதனையில், கர்ப்பகாலத்தில் கொரோனா தடுப்பூசி பயன்படுத்துவது குறித்து வரையறுக்கப்பட்ட தரவுகள் கிடைக்கின்றன என்று வொர்க் க்ரூப் கூறியுள்ளது. மேலும் இது ஒருமித்த கருத்தை எட்டவில்லை என்பதும் குறீப்பிடத்தக்கது. இருப்பினும், "ஆரம்பகால ஒதுக்கீடு கட்டத்தில் ஒரு பெண் தடுப்பூசி பெற பரிந்துரைக்கப்பட்டால், கர்ப்பம் ஒரு முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும், ஆனால் ஒரு கோவிட் -19 தடுப்பூசி பெறுவதற்கு ஒரு முரணாக இருக்கக்கூடாது என்று பெரும்பான்மையானவர்கள் உணர்ந்தனர்" என்று அந்த அறிக்கை கூறியுள்ளது.
இந்தியாவில் இந்த அம்சம் குறித்து இதுவரை எந்த கருத்தும் இல்லை.
போராட்டக்காரர்களின் கருத்து என்ன?
Hospital Infant Feeding Network (HIFN) மருத்துவமனையின் மருத்துவர் விக்கி தாமஸ் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கோ அல்லது அவர்களின் குழந்தைகளுக்கோ இந்த தடுப்பூசி தீங்கு விளைவிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று மேற்கோள்காட்டியுள்ளார். பெண்கள் பாதுகாக்கப்படுவதற்கான வாய்ப்பை மறுப்பது, அல்லது மாற்றாக தமக்கும் தங்கள் குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுப்பதால் ஏற்படும் உடல்நல அம்சங்களை இழக்கும்படி கட்டாயப்படுத்துவது கோவிட் -19 ஆல் பெண்கள் அளவுக்கு அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு மற்றொரு எடுத்துக்காட்டு" என்று டாக்டர் தாமஸ் குறிப்பிடுகிறார்.
வுமென்ஸ் ஈக்குவாலிட்டி கட்சி மற்றும் ஜி.பி. பயிற்சி பெறுபவருமான மருத்துவர் ஹன்னா பர்ஹாம் ப்ரவுன் இதே அறிக்கையை மேற்கோள்காட்டி, சில பெண்கள் அணுகக்கூடாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாமல் வலியுறுத்துவது முற்றிலும் பொறுப்பற்றது. மேலும் அவர்கள் அதிக ஆபத்துள்ள வேலைகளில் முக்கிய பணியாற்றி வருகின்றனர். ஒழுங்குமுறை அமைப்புகள் தங்கள் நிலையை மறுபரிசீலனை செய்யாவிட்டால், பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதை கைவிடுவது அல்லது தங்களையும் தங்களைச் சுற்றியுள்ளவர்களையும் ஆபத்தில் ஆழ்த்துவது இடையே ஏற்றுக்கொள்ள முடியாத தேர்வை எதிர்கொள்ள நேரிடும்” என்று குறிப்பிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.