Advertisment

பகத் சிங் டர்பன் என்ன நிறம்? பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தால் வெடித்த சர்ச்சை

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் அலுவலகத்தில் வைக்கப்பட்ட பகத் சிங்கின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எதிர்ப்பு எழுந்தது ஏன்? பகத் சிங் குடும்பத்தினரின் பதில் என்ன?

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பகத் சிங் டர்பன் என்ன நிறம்? பஞ்சாப் முதல்வர் அலுவலகத்தால் வெடித்த சர்ச்சை

பஞ்சாபின் முதல்வராக ஆம் ஆத்மி கட்சியின் பகவந்த் மான் பதவியேற்ற இரண்டு நாட்களுக்குப் பிறகு, அவரது அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள புரட்சியாளர் பகத்சிங்கின் புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

பகத்சிங்கின் கிராமமான கட்கர் காலனில் முதல்வராக பகவந்த் மான் பதவியேற்றுக்கொண்டார். பகத்சிங் கனவு கண்ட பஞ்சாப்பை உருவாக்க வேண்டும் என பகவந்த் மான் எப்போதும் சொல்லிக்கொண்டிருப்பார். இதற்கிடையில், மஞ்சள் நிற ட்ரப்ன் அணிந்தப்படி வைக்கப்பட்டிருக்கும் பகத்சிங்கின் புகைப்படம், நம்பகத்தன்மையற்றது என்கிற குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால், பகத்சிங்கின் குடும்பத்தினரோ, அவரது தலைப்பாகை நிறம் முக்கியமல்ல, அவரது பார்வையை உண்மையாக்குவது தான் முக்கியம் என்றனர்.

முதல்வர் அலுவலகத்தில் பகத் சிங் போட்டோ வைக்கப்பட்டது ஏன்?

பஞ்சாப் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன்பே, ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலும், அக்கட்சியின் முதல்வர் வேட்பாளரான பகவந்த் மானும், எங்கள் கட்சி ஆட்சிக்கு வந்தால், பகத்சிங் மற்றும் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் புகைப்படங்கள் அரசு அலுவலகச் சுவர்களில் அலங்கரிக்கப்படும் என்று அறிவித்தனர். முதலமைச்சரின் புகைப்படங்களை வைக்கும் மரபு நிறுத்தப்படும் என உறுதியளித்திருந்தனர்.

மான் பகத் சிங்கின் தீவிர பாலோயர் ஆவர். 23 மார்ச் 1931 அன்று லாகூரில் 23 வயதான பகத்சிங் மட்டுமின்றி அவரது தோழர்களான சுக்தேவ் மற்றும் ராஜ்குருவுடன் ஆகியோரும் தூக்கிலிடப்பட்டனர். உயிர் தியாகம் செய்த பகத் சிங்கின் கனவான சமத்துவ பஞ்சாபை உருவாக்குவேன் என எப்போதும் மான் கூறுவார்.

2011 இல் மன்ப்ரீத் பாதலின் பிப்பிள் பார்ட்டி ஆஃப் பஞ்சாப் கட்சியில் மான் இணைந்தார். நகைச்சுவை நடிகர் மூலம் அரசியல்வாதியாக மாறிய அவரது வாழ்க்கை பயணத்தின் ஒவ்வொரு தருணத்திலும் பகத் சிங்கின் பார்வையை புகுத்தினார். அவரது உரையை ஒவ்வொரு முறையும், Inquilab Zindabad என்கிற கோஷத்துடன் தான் முடிப்பார். இந்த கோஷம் சுதந்திரப் போராட்ட வீரர் மௌலானா ஹஸ்ரத் மொஹானியால் சொல்லப்பட்டது என்றாலும், பகத் சிங்கால் தான் பிரபலமானது.

publive-image
Four original photos of Bhagat Singh

மான் ராஜ்பவனுக்குப் பதிலாக கட்கர் கலனில் முதலமைச்சராகப் பதவியேற்றார். இதுகுறித்து ட்வீட் செய்த அவர், சூரியனின் கதிர்கள் இன்று புதிய விடியலை தந்துள்ளது. ஷஹீத் பகத் சிங் , பாபா சாஹிப் ஆகியோரின் கனவுகளை நனவாக்க இன்று மொத்த பஞ்சாப்பும் கட்கர் கலனில் பதவியேற்க உள்ளது. பகத் சிங்கின் சித்தாந்தத்தின் பாதுகாவலராக நிற்பதற்காக நான் அவரது சொந்த கிராமமான கட்கர் காலனுக்குப் புறப்படுகிறேன் என பதிவிட்டிருந்தார்.

அவர் பதவியேற்பு விழாவுக்கு வரும் ஆண்கள் மஞ்சள் நிற டர்பனும், பெண்கள் மஞ்சள் நிற துப்பட்டாவும் அணிய அறிவுறுத்தினார். அதனால், கட்கர் கலனே பசந்தி அலையில் நிரம்பியிருந்தது.

பகத் சிங் புகைப்படத்திற்கு எதிர்ப்பு வந்தது ஏன்?

ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள பகத்சிங்கின் புகைப்படம் உண்மையானது அல்ல. அவை வெறும் "கற்பனை" மட்டுமே என தெரிவிக்கின்றனர்.

டெல்லியின் பகத்சிங் வள மையத்தின் கெளரவ ஆலோசகரும், சுதந்திரப் போராட்ட வீரர் பற்றிய பல புத்தகங்களை எழுதியவருமான சமன் லால் கூறுகையில், "பகத் சிங் மஞ்சள் நிற டர்பனை அணியவில்லை என பலர் முறை தெளிவுப்படுத்தியுள்ளோம். அவை வெறும் கற்பனை மட்டுமே. இது, பகத்சிங்கின் உண்மையான 4 புகைப்படங்கள் மட்டுமே உள்ளது. அதில், ஒன்று அவர் தலைப்பாகை இன்றி இருப்பார். மற்றொரு புகைப்படத்தில் இரண்டு நபர்களுடன் வெள்ளை நிற டர்பன் அணிந்திருப்பார்.

அவர் ஆர்ஞ்சு, மஞ்சள் நிற டர்பனோ அல்லது கையில் துப்பாக்கியுடன் இருக்கும் புகைக்படங்கள் அனைத்தும் கற்பனை மட்டுமே ஆகும். சில ஓவியங்களும் கூட இருக்கின்றன. அரசியல் கட்சிகள் அவருடைய சித்தாந்தத்தை குறித்து இளைஞர்களிடம் பேசுகின்றனர். அவரது பெயரை சொந்த நலனுக்காக பயன்படுத்துகின்றனர். கற்பனையில் உருவாக்கப்படும் ஓவியங்களை உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது. பஞ்சாப் அரசு, இந்த நான்கு அசல் படங்களில் ஏதாவது ஒன்றை அரசு அலுவலகங்களில் வைக்க வேண்டும். குறிப்பிட்ட நிறத்தை ஒரு புரட்சியாளருடன் தொடர்புபடுத்த முடியாது, ஏனெனில் அது திரைப்படங்கள், ஓவியங்களில் சித்தரிக்கப்பட்டது. சமூக ஊடகங்களில் உலாவும் சித்தரிக்கப்பட்ட பகத் சிங் மஞ்சள், ஆரஞ்சு அல்லது சிவப்பு நிற டர்பன் புகைப்படங்கள், உண்மையானது என்பதை நிரூபிக்க எவ்வித ஆதாரங்களும் இல்லை என்றார்.

பகத்சிங்குடன் மஞ்சள் நிற தொடர்பு வந்தது எப்படி?

மஞ்சள் நிறம் பெரும்பாலும் பஞ்சாபில் எதிர்ப்புகள் மற்றும் புரட்சியுடன் தொடர்புடையது. மூன்று வேளாண் சட்டங்களுக்கும் எதிராக ஆண்டு முழுவதும் நடந்த போராட்டத்தின் போது, ​​விவசாயிகள் பெரும்பாலும் மஞ்சள் நிற கொடி, மஞ்சள் தலைப்பாகை, துப்பட்டாக்களை பயன்படுத்தினர்.

publive-image

பேராசிரியர் லால் கூறுகையில், "பகத்சிங் மட்டுமல்ல, எந்த ஒரு புரட்சியாளரும் மஞ்சள் தலைப்பாகை அணிந்ததற்கான ஆதாரம் எங்களிடம் இல்லை. “மேரா ரங் தே பசந்தி சோலா" என்கிற பாடல் 1927 இல் கோரக்பூர் சிறையில் தூக்கிலிடப்பட்ட புரட்சியாளர் ராம் பிரசாத் பிஸ்மில் எழுதியதாகக் கூறப்படுகிறது. அதே சமயம் பகத் சிங் லாகூர் சிறையில் 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.இருவரும் ஹிந்துஸ்தான் குடியரசுக் கட்சியின் ஒரு பகுதியாக இருந்தனர், ஆனால் இருவரும் ஒன்றாக சிறையில் அடைக்கப்பட்டதில்லை. பகத் சிங் சிறையில் "மேரா ரங் தே பசந்தி சோலா…" பாடலைப் பாடியதாக திரைப்படங்களில் மட்டுமே சித்தரிக்கப்பட்டுள்ளது, ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை" என்றார்.

பகத்சிங்கின் குடும்பத்தின் கருத்து என்ன?

பகத் சிங்கின் சகதோதரி பீபி அமர் கவுரின் மகனான 77 வயதான ஜக்மோகன் சிங் கூறுகையில், பகத் சிங்கின் நான்கு அசல் புகைப்படங்கள் உள்ளன, அதில் அவர் பசந்தி தலைப்பாகை அணியவில்லை. ஆனால் அந்த நிறம் 1927 இல் ஆங்கிலேயர்களால் தூக்கிலிடப்பட்ட ராம் பிரசாத் பிஸ்மிலுடன் தொடர்புடையது

கலைஞரின் கற்பனை என்கிற பார்வையில், எந்த நிறத்தை வேண்டுமானாலும் உபயோகிக்கலாம். அவரது பார்வையை மக்களுக்கு கொண்டு சென்று இளைஞர்களை சாதிவெறியில் இருந்து விடுவிப்பது மட்டுமே முதன்மையானது.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தனது தொலைநோக்குப் பார்வையை முன்னோக்கி எடுத்துச் சென்று நமது அரசியலமைப்பில் சமூக நீதியின் முக்கியத்தவத்தை புகுத்தினார். எனவே, தலைப்பாகையின் வண்ணங்களை விட இந்த இருபெரும் ஆளுமைகளின் பார்வையை நாம் விவாதிக்க வேண்டும்.

பகத் சிங் எழுதிய விஷயங்களை பஞ்சாப் அரசு அச்சிட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அவற்றை அதிகாரிகள் மற்றும் மக்கள் படிக்கும் வகையில், அனைத்து அரசு அலுவலகங்களிலும் கிடைத்திட செய்ய வேண்டும்.பகத் சிங் மற்றும் அம்பேத்கரின் தரிசனங்கள் உண்மையாக பின்பற்றப்படாவிட்டால் புகைப்படங்கள் இருந்து என்ன பலன்" என கேள்வி எழுப்பினர்.

பகத் சிங் ஹீரோவின் பின்னணி?

லால் கூறுகையில், " ஒவ்வொரு நாட்டிலும், ஒவ்வொரு பிராந்தியத்திலும், எப்போதும் போற்றப்படும் மற்றும் நினைவில் வைக்கப்படும் சில ஐகானிக் நபர்கள் இருப்பார்கள். இந்தியாவிற்கும், பஞ்சாபிற்கும், அப்படியொரு பகத் சிங் . ஏனெனில் அவர் நாட்டின் சுதந்திரத்திற்காகவும், தனது உயிரைத் தியாகம் செய்ததற்காகவும் நினைவுகூரப்படுகிறார். மேலும், அச்சமின்மையின் அடையாளமாகவும் திகழ்பவர்.

இந்தியாவைப் பற்றிய அவரது கருத்து. உழைக்கும் வர்க்கம் எங்கு சுரண்டப்படாமல், எல்லா அம்சங்களிலும் சம உரிமைகள் வழங்க வேண்டும் என்பது தான்.

அவர் இறந்து 90 ஆண்டுகள் ஆன பிறகும் விவசாயிகள், மாணவர்கள், தொழிலாளர்கள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் தங்கள் போராட்டங்களின் போது அவரை பெயரை உச்சரிக்கின்றனர்.வட இந்தியாவில் மட்டுமல்ல, தென்னிந்திய மாநிலங்கள் மற்றும் பாகிஸ்தானிலும் பிரபலமானவர். ஆனால் பஞ்சாபியர்களுக்கு, அவர் மிகவும் முக்கியமானவர், ஏனென்றால் சொந்தம் என்ற உணர்வு இருப்பதால், பகத் சிங் தங்களுக்குச் சொந்தமானவராக உணர்கிறார்கள் என்றார்.

1931 ஆம் ஆண்டு பஞ்சாப் ஆளுநரிடம் அவர் அளித்த கடிதத்தில், பகத் சிங் தனது புரட்சிக் கருத்தை விரிவுபடுத்தும் போது, ​​ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறினாலும், தங்கள் சொந்த நாட்டைச் சேர்ந்தவர்களை ஒடுக்கி சுரண்டும் அத்தகைய ஆட்சியாளர்கள் இந்தியர்களிடையே இருப்பார்கள். சக மனிதனால் ஒரு மனிதன் மீதான சண்டை நிற்கும் வரை, சண்டை தொடரும் என்றார்.

போராட்டத்தின் போது, ​​விவசாயிகள் பகத் சிங்கின் பஞ்சாபி மொழி பெயர்ப்புகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியிருந்தனர். அதாவது, கண்ணை மூடிக்கொண்டு, புத்தகத்தில் எழுதியிருப்பதை மட்டும் உண்மை என்று நினைக்காதீர்கள்…படிக்கவும், சிந்திக்கவும், விமர்சிக்கவும்..) என்பது தான் வாகசத்தின் அர்த்தம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Punjab
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment