கொரோனா தொற்று : உமிழ்நீர் மாதிரி சோதனை எந்தளவிற்கு பயன்படுகிறது?

Saliva test for Covid 19 : உமிழ்நீர் மாதிரியை சேகரிக்கும் உபகரணங்கள் பாதுகாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மற்ற சிறப்பு ரீயெஜன்ட்களும் வேண்டும் என்ற தேவை இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

corona virus
corona virus

Kaunain Sheriff M

கொரோனா தொற்று பாதிப்பு, சர்வதேச அளவில் பெரும்பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (USFDA), ஆகஸ்ட் 15ம் தேதி, கொரோனா தொற்றை கண்டறிய உமிழ்நீர் மாதிரி சோதனைக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த சோதனை நல்ல பலனை அளிப்பதாகவும் அது தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று இருக்கிறதா அல்லது இல்லையா என்பதை சில வினாடிகளில், உமிழ்நீர் மாதிரி சோதனையில் கண்டறியலாம் என்று இஸ்ரேல் நாட்டின்புவியியல் மருத்துவம் மற்றும் வெப்பமண்டல நோய்க்கான மையம் தெரிவித்துள்ளதாக ராய்ட்டர் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், அதற்கான அதிகாரப்பூர்வ ஒப்புதலை அது வழங்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனாவை கண்டறியும் சோதனை என்னென்ன?

கொரோனா தொற்று பெரும்பாலும் இரண்டுவிதமான சோதனைகளின் மூலம் கண்டறியப்படுகிறது. RT-PCR மற்றும் ஆன்டிஜென் சோதனை. மற்றொன்று, சீராலஜிக்கல் சோதனை ஆகும். ஒருவரின் உடலில் ஆன்ட்டிஜென் உற்பத்தி ஆகியிருந்தால், அவரது உடலில் வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது என்று அர்த்தம். இதன்மூலம், நோய்எதிர்ப்பு சக்தியின் தீவிரத்தை கணக்கிடலாம்.

RT-PCR மற்றும் ஆன்டிஜென் சோதனையில், தொண்டை மற்றும் மூக்கில் இருந்து எடுக்கப்படும் மாதிரி சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த மாதிரி, வைரல் டிரான்ஸ்போர்ட் மீடியாவில் கலக்கப்பட்டு, மேற்கண்ட சோதனைகளுக்காக பாதுகாக்கப்படுகிறது. உமிழ்நீர் மாதிரி சோதனை, மிகவும் விலைகுறைவானது ஆகும். நோய்த்தொற்று இருப்பவர் என்று சந்தேகிக்கப்படும் ஒருவரின் உமிழ்நீரை ஸ்டிரைல் குழாயில் எடுத்து, அதை அப்படியே ஆய்வுக்கூடத்திற்கு அனுப்பிவிடலாம்.

அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (USFDA), உமிழ்நீர் மாதிரியை மையமாக கொண்ட 5 சோதனைகளுக்கு சமீபகாலமாக அனுமதி வழங்கியுள்ளது. மே 8ம் தேதி, ரட்ஜர்ஸ் கிளினிக்கல் ஜீனோமிக்ஸ் ஆய்வகத்தில் மூலக்கூறு சோதனை, ஸ்பெக்ட்ரம் சொல்யுசனால் வணிகரீதியாக இது தயாரிக்கப்பட்டிருந்தது. இது தயாரித்த உபகரணத்தில், உமிழ்நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு, ஒரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்லுதல், சேகரித்து வைத்தல் உள்ளிவ் நிகழ்வுகளுக்கு பயன்படுத்தப்படுகின்றன.

கொரோனா அவசர கால சோதனைக்காக பயன்படுத்த அமெரிக்காவின் யேல் பொது சுகாதார பள்ளி கண்டுபிடித்துள்ள இந்த சோதனை கிட்டுக்கு சலைவா டைரக்ட் என்று பெயரிடப்பட்டுள்ளது. அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (USFDA), ஒப்புதல் அளிக்கும் உமிழ்நீர் மாதிரியை அடிப்படையாக கொண்ட 5வது சோதனை இது ஆகும்.

உமிழ்நீர் சோதனையின் நன்மைகள் என்ன?

தொண்டை மற்றும் மூக்கில் இருந்து மாதிரியை எடுக்க திறன்மிக்கவர்கள் தேவைப்படும் நிலையில், உமிழ்நீர் மாதிரியை எடுக்க அத்தகைய ஆட்கள் தேவையில்லை.

தொண்டை மாதிரி சோதனையில் நெகட்டிவ் முடிவுகள் வரவும் வாய்ப்புள்ளது.ஆனால் உமிழ்நீர் மாதிரி சோதனையில் ஒரே முடிவு தான்.
தொண்டை மற்றும் மூக்கில் இருந்து மாதிரியை எடுக்க திறன்மிகு ஆட்கள் தேவைப்படுவர். அவர்களுக்கு என்று PPE உடைகள் தயாராக இருக்க வேண்டும். மாதிரி எடுக்கும்போது அவர் இருமுவதற்கோ, தும்முவதற்கோ வாய்ப்பு உண்டு. இதன்காரணமாக, மற்றவருக்கும் தொற்று பரவ வாய்ப்பு அதிகம். எடுக்கப்பட்ட மாதிரியை சுத்திகரிக்கப்பட்ட உபகரணத்தில் வைத்து ஆய்வகத்திற்கு கொண்டு சென்று சோதனை மேற்கொள்ள வேண்டும். இது அதிகம் செலவு பிடிக்கும் செயலாகும்.

உமிழ்நீர் மாதிரி சோதனைக்காக நாம் பலமணிநேரம் பயணித்தோ, மருத்துவமனைக்கோ செல்ல வேண்டியதில்லை.

RT-PCR சோதனையில் இருந்து உமிழ்நீர் மாதிரி சோதனை எவ்வாறு வேறுபடுகிறது?

RT-PCR சோதனையை போன்றே, உமிழ்நீர் மாதிரி சோதனையிலும், வைரஸ் ஆர்என்ஏ – டிஎன்ஏவாக மாற்றியமைக்கப்படுகிறது. பின் அதை பல்கிப்பெருக செய்து, வைரஸ் உள்ளதா என்பது கண்டறியப்படுகிறது. சலைவா டைரக்ட் கிட், வைரசின் ஆர்என்ஏவை தனியாக பிரித்தெடுக்க உதவுகிறது.

உமிழ்நீர் மாதிரியை சேகரிக்கும் உபகரணங்கள் பாதுகாக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. மற்ற சிறப்பு ரீயெஜன்ட்களும் வேண்டும் என்ற தேவை இதில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உமிழ்நீர் மாதிரி சோதனையின் வரம்புகள் என்ன?

ரட்ஜெர்ஸ் உருவாக்கியுள்ள சோதனை கிட்டில், மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, 48 மணிநேரத்திற்குள் சோதனை நடத்தினாலும், அதில் பெரும்பாலும் நெகட்டிவ் முடிவுகளே வருகின்றன. இதனை கருத்தில் கொண்ட USFDA, SARS-CoV – 2 நியூக்ளிக் அமிலம் இருப்பதை, உமிழ்நீர் மாதிரியிலேயே இருப்பதை கண்டறிந்தது. நெகட்டிவ் முடிவுகளினால் அவருக்கு தொற்று இல்லை என்பதை முடிவு செய்துவிட முடியாது. ஏனெனில், சோதனை நடத்தப்படும்போது. நோயாளியின் தன்மை, ஆய்வகத்தின் அமைப்பு உள்ளிட்டவைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். உமிழ்நீர் மாதிரி சோதனையிலும் நெகட்டிவ் முடிவுகள் வந்தால், அதற்கு மாற்றாக உள்ள ஸ்பெசிமனை அடிப்படையாக கொண்டு மீண்டும் சோதனை நடத்திவிடலாம் என்று குறிப்பிட்டுள்ளது.

நோயாளியின் உமிழ்நீரில் ரத்தம் உள்ளிட்டவைகள் இருந்தால் அது சோதனை முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று யேல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

உமிழ்நீர் சோதனை எங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது.?

யேல் பல்கலைகழகத்தின் உமிழ்நீர் மாதிரி சோதனை, அவசரகால சிகிச்சை முறை என்பதால், அமெரிக்க தேசிய பேஸ்கட்பால் கழகத்தை சேர்ந்த வீரர்கள் மற்றும் அதன் அதிகாரிகளுக்கு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேஸ்கட் பால் வீரர்கள் மட்டுமல்லாது மேலும் பல்வேறு விளையாட்டு வீரர்களுக்கும் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளதாக ரட்ஜெர்ஸ் தெரிவித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Explained: How useful are saliva tests for Covid-19?

Get the latest Tamil news and Explained news here. You can also read all the Explained news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Corona virus corona tests saliva test saliva test accuracy covid 19 test coronavirus test

Next Story
குறையத் தொடங்கும் கொரோனா தொற்று விகிதம்; புதிய தொற்று கண்டறிதல்களில் தேக்கம்coronavirus, coronavirus news, india positivity rate, india covid 19 cases, corona news, கொரோனா வைரஸ், இந்தியாவில் குறையும் கொரோன தொற்று விகிதம், coronavirus cases in india, புதிய தொற்றுகள் கண்டறிதல்களில் தேக்கம், coronavirus india update, coronavirus cases today update, coronavirus cases
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express