மக்களிடையே அடிப்படை சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதா? நிபுணர் சொல்வது என்ன?

சமூக மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்து இப்பகுதி மக்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தது நிறைந்த மனநிறைவை தந்தது.

Dr K Leelamoni

டாக்டர் கே லீலாமோனி, கேரள மாநிலம் திருவனந்தபுரம் மற்றும் கோழிக்கோடு அரசு மருத்துவ கல்லூரிகளில் சமூக மருத்துவத்துறையின் தலைவராக பணியாற்றியவர். பின்னர் கொச்சியில் செயல்பட்டு வரும் அம்ரிதா மருத்துவ அறிவியல் மையத்திலும் பணியாற்றியுள்ளார். இவர் சமூக மருத்துவத்துறையில் 48 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர் ஆவார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், சமூக மருத்துவம் தொடர்பாக அவர் தெரிவித்துள்ள கருத்துகள், உங்களுக்கு இந்த கட்டுரை வடிவில் வழங்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் முதல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு 2 மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இதனிடையே, இந்த கொடூர பாதிப்பை தடுக்கும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கு உத்தரவு நிலை அமல்படுத்தப்பட்ட நிலையிலும், இந்த பாதிப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. பறவைக்காய்ச்சல் மற்றும் பன்றிக்காய்ச்சல் தொற்றுக்களால் மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ள போதிலும், மக்களிடையே, இதுகுறித்த விழிப்புணர்வும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த அறிவும் இல்லாததையே காட்டுகிறது.

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு கூட, இந்தியாவில் மருத்துவத்துறையின் ஒரு அங்கமான சமூக மருத்துவம் குறித்த ஒரு புரிதல் இல்லை என்பது வேதனையான விஷயமே.

நாட்டில் எப்போதெல்லாமோ சுகாதாரப்பாதிப்பு ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம், இந்த சமூக மருத்துவத்தின் பங்கு அளப்பரியது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. சமூக மருத்துவம் என்பது நீங்கள் நினைக்கும் அளவிற்கு பெரிய விஷயமில்லை. தனிநபர் சுகாதாரம், அடிப்படை சுகாதாரம் உள்ளிட்டவைகளின் கலவையே ஆகும்.

நாட்டில் எப்போதெல்லாம் தொற்றுநோய் பாதிப்பு உள்ளிட்டவைகள் ஏற்படுகிறதோ அப்போது மட்டுமல்லாது நாம் தினமும் இந்த தனிநபர் தூய்மை மற்றும் அடிப்படை சுகாதாரமான கை, கால் உள்ளிட்ட உடல் உறுப்புகளை தூய்மையாக வைத்திருத்தல் உள்ளிட்ட எளிய நடவடிக்கைகளை மேற்கொண்டாலே, இந்த தொற்று என்ற அரக்கனிடமிருந்து நாம் நம்மை எளிதாக காத்துக்கொள்ளலாம்.

தொற்று நோயின் பரவலை கட்டுப்படுத்த உதவும் தடுப்பு நடவடிக்கைகள் மூன்று வகையாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

முதல்நிலை : முதல்நிலை தடுப்பு நடவடிக்கைகளில் முக்கியமானதாக இருப்பது சுகாதார கல்வி அல்லது, மக்களிடையே அதுதொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தி, பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளிட்டவைகளை உள்ளடக்கியது ஆகும்.
நோய்த்தொற்றை கண்டறிந்த உடனே, நாம் அதற்குரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுவிட்டால், இரண்டாம் நிலையில், தேவையில்லாத இழப்புகளை தவிர்ப்பது மட்டுமல்லாது 3ம் நிலையான மறுவாழ்வு நிலையை எட்டாமல் நாம் பார்த்துக்கொள்ள இயலும்.

எந்த நோய்க்கு எந்த மாதிரியான தடுப்பு நடவடிக்கைகள் தேவைப்படும் என்பதை சமூக மருத்துவத்தில் சிறந்து விளங்கும் நிபுணர்கள், தொற்றுநோயின் தன்மைக்கு ஏற்ப வகைப்படுத்தியுள்ளனர்.

சுவாசம் சார்ந்த பிரச்சனைகளுக்கு முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை தடுப்பு நடவடிக்கைகளும், போலியோ, தொழுநோய் போன்ற பிரச்சனைகளுக்கு மூன்றாம் நிலை தடுப்பு நடவடிக்கைகள் முக்கிய பங்காற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நம் நாட்டு மக்களுக்கு ஏற்பட்ட சாபமோ என்னவோ தெரியவில்லை. பெரிய பெரிய மருத்துவமனைகள், மற்றும் சுகாதார மையங்களிலேயே இந்த மூன்றாம் நிலை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதனால், பாமர மக்களுக்கு இந்த வசதி கிடைப்பது என்பது அரிதாகவே உள்ளது.
நோயாளிகளுக்கு தேவையான சிகிச்சைகளை அளிப்பதில் டாக்டர்களின் பங்கு அளப்பரியதாக உள்ளது. அவர்கள் அளிக்கும் சிகிச்சைசகளின் மூலமே, நோயாளிகள் குணமடைந்துவிடுகின்றனர். இதன்காரணமாக அவர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் பயனடைந்து விடுகின்றன. ஆனால், இந்த டாக்டர்களுக்கு, முதல்நிலை தடுப்பு நடவடிக்கைகளின் பலனை மட்டுமே பெறுகின்றனர். இதனால், இவர்களது உடல்நிலையில் ஏற்படும் மாற்றங்கள் உடனடியாக வெளியே தெரிய இயலாத சூழல் ஏற்படுகிறது.

மருத்துவம் படிக்கும் மாணவர்களுக்கு, அவர்களது ஒவ்வொரு ஆண்டு படிப்பிலும், 3 மாத கால அளவிலான சமூக மருத்துவம் சார்ந்த பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் முன்னணி பெரிய மருத்துவ கல்வி நிறுவனங்கள், இந்த பாரம்பரிய மற்றும் அடிப்படையிலான சமூக மருத்துவ கல்வியை, தங்களது மாணவர்களுக்கு கற்றுத்தர தவறி விடுகின்றனர்.

மருத்துவ படிப்பு மாணவர்கள் தங்களது சான்றிதழை பெற, சமூக மருத்துவம் என்ற பாடப்பகுதியில் தேர்ச்சி பெறுவது அவசியம். ஒரு மாணவர், இந்த தாளில், குறைந்த மதிப்பெண்கள் பெற்றிருந்தார். அவரிடம் ஏன் இந்த பாடத்தில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தாய் என்று கேட்டதற்கு, நாம் மருத்துவப்படிப்பை தேர்ந்தெடுத்ததற்கான காரணம், சிறந்த டாக்டராகி அதிக பணம் சம்பாதிக்கவே என்றும், இதுபோல, சுகாதாரம் மற்றும் தூய்மை ,நடவடிக்கைகளில் நேர விரயம் செய்ய அல்ல என்று பதில் கூறினார். மருத்துவ படிப்பு மாணவர்களுக்கு இதன் முக்கியத்துவம் தெரியாதது குறித்து அதிர்ச்சியடைந்த நான் மனம் வெம்பிப்போனேன்.

சில ஆண்டுகள் கழித்து ஒரு சுகாதார மையத்திற்கு ஆய்விற்காக சென்றிருந்தேன். நான் மேலே குறிப்பிட்ட அந்த மாணவரே, அந்த மையத்தின் மருத்துவ அதிகாரியாக இருந்தார். அவரது டேபிளில், சமூக மருத்துவம் தொடர்பான புத்தகம் இருந்ததை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். அவர் என்னிடம் விரைந்து வந்து தாங்கள் அப்போது கூறியது எனக்கு புரியவில்லை. ஆனால், இப்போது தான் சமூக மருத்துவத்தின் மகத்துவத்தை அறிந்து இப்பகுதி மக்களுக்கும் இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தது நிறைந்த மனநிறைவை தந்தது.

கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதன் விளைவாக நாட்டில் உள்ள எல்லோருக்கும் தனிமனித இடைவெளி, தனிமைப்படுத்துதல், பாதுகாப்பான சுகாதார நடைமுறைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இதே நடைமுறைகள், தான் கடந்த பறவைக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் பரவலின்போதும் தாங்கள் கடைபிடித்து வந்ததை அவர்கள் எளிதில் மறந்துவிட்டார்கள்.

தும்மும் போதும், இருமும் போதும் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்து அரசின் நிபுணர்கள் தகுந்த வரையறையை நிர்ணயிக்க வேண்டும். தொற்று உள்ளவர்களை தனிமைப்படுத்துதல், மருத்துவமனைகளில் படுக்கைகளுக்கு இடையே உள்ள இடைவெளிகளை நிர்ணயித்தல், மருத்துவ பணியாளர்களுக்கு தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்குதல், நோயாளிகளுக்கு மட்டுமல்லாது டாக்டர்களுக்கும் தேவையான பாதுகாப்பு நடைமுறைகளை வகுக்க வேண்டியது ஒவ்வொரு அரசின் கடமையாகும்.

கொரோனா பாதிப்பில் சிக்கி மீண்டவர்கள் வீடு திரும்பியவுடன், அவர்களை அந்த நோய் பாதிப்பு உள்ளவர் என்று கூறி ஒதுக்கக்கூடாது. அவர்களும் இந்த நோயிலிருந்து விடுபட்ட புதுமனிதரர்களை போல தங்களை உணர வேண்டும். தங்களுக்கு எதனால் இந்த தொற்று ஏற்பட்டது. எந்த மாதிரியான சிகிச்சை அளிக்கப்பட்டது. தனிமைப்படுத்துதல் வார்டில் இருக்கும்போது எந்த மனநிலையில் இருந்தேன் போன்ற எச்சரிக்கை உணர்வுடன் கூடிய தகவல்களை மற்றவர்களுடன் பகிரும்பட்சத்தில், அவர்களும் தொற்று அதிகம் பரவும் வாய்ப்புள்ள இடங்களிலிருந்து விலகி இருத்தல், தனிமனித இடைவெளியை பேணிக்காத்தல் உள்ளிட்ட நடைமுறைகளை பின்பற்றுவர். அவர்கள் மேலும் பலருக்கும் அதுகுறித்து எடுத்துரைப்பர்.

நோய்த்தொற்று ஏற்படும் சமயங்களில் மட்டுமல்லாது, தினமும் குளிக்க வேண்டும், வெளியிடங்களுக்கு சென்று வந்தவுடன் கை, கால்களை நன்றாக கழுவ வேண்டும், இருமும் போதும், தும்மும்போதும் வாயை மூடிக்கொள்ள வேண்டும். பற்களை தினம் துலக்க வேண்டும். உள்ளிட்ட நடவடிக்கைகளை நாம் தினமும் தவறாது மேற்கொண்டால் தொற்று நோய் பாதிப்பிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள முடியும்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் என்ற போரில் படைவீரர்களாக நேருக்கு நேர் நின்று நமது டாக்டர்கள், செவிலியர்கள்,மருத்துவ பணியாளர்கள் தங்களது வாழ்க்கையையே அர்ப்பணித்து போரிட்டு வருகின்றனர். நாமும் அவர்களுக்கு தேனையான ஒத்துழைப்புகளை அளித்து மீண்டும் வளமிக்க இந்தியா உருவாக்க பாடுபடுவோமாக…

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close