/tamil-ie/media/media_files/uploads/2020/04/template-2020-04-24T145850.849.jpg)
Corona virus, Covid 19, coronavirus numbers explained, coronavirus april 24, india coronavirus updates, coronavirus latest news, covid-19, maharashtra, maharashtra covid-19 cases, indian express,coronavirus news, coronavirus tamil news, coronavirus tamil nadu news, coronavirus chennai news, coronavirus Tamil nadu, coronavirus outbreak
Coronavirus (Covid-19): கொரோனா வைரஸ் பாதிப்பு பட்டியலில், மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் நிலையில், அங்கு ஒரேநாளில் புதிதாக 778 பேருக்கு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று பரவத்துவங்கியது முதல், தற்போது வரை ஒரேநாளில் இந்தளவிற்கு பாதிப்பு அதிகரித்துள்ளது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிராவில் புதிதாக 778 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 6,427 ஆக அதிகரித்துள்ளது. ஒரே வாரத்தில் பாதிப்பு எண்ணிக்கை 2 மடங்காக அதிகரித்துள்ளது. ஏப்ரல் 16ம் தேதி நிலவரப்படி 3,202 ஆக இருந்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தற்போது 6,427 ஆக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 19ம் தேதி, நாட்டில் புதிதாக 1577 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்ததே அதிகபட்சமாக இருந்த நிலையில், நேற்று (ஏப்ரல் 23ம் தேதி) மட்டும் ஒரேநாளில் புதிதாக 1680 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து, நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை, ஏப்ரல் 23ம் தேதி மாலை 5 மணி நிலவரப்படி, 22,930 ஆக அதிகரித்துள்ளது. 4,324 பேர் குணமடைந்துள்ளனர்.
கொரேனா பாதிப்பு பட்டியலில், மகாராஷ்டிராவை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் குஜராத் உள்ளது. குஜராத்தில் ஏப்ரல் 23ம் தேதி புதிதாக 217 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அங்கு பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 2,624 ஆக அதிகரித்துள்ளது. குஜராத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கையும், பலி எண்ணிக்கையும் மும்மடங்கு அதிகரித்துள்ளது. ஒருவாரத்திற்கு முன்பு, நாட்டின் கொரோனா பாதிப்பு பட்டியலில் 6வது இடத்தில் இருந்த குஜராத், புதிதாக அதிகம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதையடுத்து, தற்போது இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
டெல்லி மற்றும் மத்தியபிரதேசத்தில் ஏப்ரல் 23ம் தேதி மட்டும் 100க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து டெல்லியில் பாதிப்பு எண்ணிக்கை 2,376 ஆகவும், மத்திய பிரதேசத்தில் 1,687 ஆக அதிகரித்துள்ளது.
ஏப்ரல் 23ம் தேதி தேசிய அளவில் நிகழ்ந்துள்ள 30 மரணங்களில், மகாராஷ்டிராவில் இருந்து மட்டும் 14 பேரும், குஜராத்தில் 9 பேரும் மரணமடைந்துள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.