Amitabh Sinha
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களை காட்டிலும், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஜூன் 10ம் தேதி 5,991 பேர் குணமடைந்திருந்த நிலையில், மொத்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,35,205 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 1,33,633 ஆக உள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இந்தியாவில் தற்போதைய நிலையில், கொரோனா பாதிப்பு விகிதம் கணிசமான அளவில் குறைதயத்துவங்கியுள்ளது. இந்த பாதிப்பை மரணத்துடன் ஒப்பிடும்போது, 7,745 பேருக்கு ஒருவர் மரணம் என்ற அளவில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதன்மூலம் பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 50 சதவீதத்திற்கு குறைவாகவே இருப்பது தெரியவந்துள்ளது.
கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை என்பது ஒப்பிடக்கூடிய அளவீடுகளில் இல்லை என்பதை நாம் முக்கியமாக கருத்தில் கொள்ள வேண்டும். இந்த விவகாரத்தில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை என்பது வைரஸ் தொற்று துவங்கிய நாள் முதல் கணக்கிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால், அவ்வாறில்லாமல் இது திரட்டப்பட்ட எண்ணே ஆகும்.
பாதிப்பு எண்ணிக்கை என்பது, கடைசி 14 நாட்களில், பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கையை குறிப்பிடுகிறது. இதில் தொற்றால் பாதிக்கப்பட்டு மரணமடையாமல், 14 நாட்களை கடந்தவரை குணமடைந்தவர் என்று நாம் கூறிவிடுகிறோம்.
நாட்டில் தற்போது உள்ள கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில், கடந்த 3 மாதங்களில் திரட்டப்பட்ட எண்ணிண்கும், கடந்த 2 வாரங்களில் பாதிப்பு எண்ணிக்கைக்கும் உள்ள ஒப்பீடே இதன் மதிப்பு ஆகும்.
இந்த நேரத்தில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக நாம் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கும் நேரத்தில், பாதிப்பு எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து கொண்டிருப்பதை நாம் மறந்துவிட இயலாது. தற்போதைய நிலையில் 48 சதவீதம் பேர் பாதிக்கப்பட்டிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2.85 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
இந்த தொற்று முற்றிலுமாக முடிவடையும் நேரத்தில் 99 சதவீதத்தினர் பாதிக்கப்பட்டு இருப்பர். அவர்களில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போதைய நிலையில், கொரோனா இறப்பு விகிதம் 237 சதவீதம் என்ற அளவில் உள்ளது. எத்தனை பேர் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர், அவர்களின் எத்தனை பேர் மரணமடைந்துள்ளனர் என்ற தகவல் நிகழ்த்தப்பட்ட கொரோனா சோதனைகளின் மூலம் நமக்கு கிடைத்துள்ளது.
நம்மில் பலருக்கு பாதிப்பு உள்ளபோதிலும், அவர்களுக்கு சோதனை நடத்தப்படாததால், அவர்கள் பாதிப்பு எண்ணிக்கை வரம்பிற்குள் இன்னும் வராமல் உள்ளனர். அதுபோல், பல்லாயிரக்கணக்கானோர் அந்நிலையில் உள்ளனர்.
கொரோனா தொற்று தீவிரமாக உள்ள இந்தநேரத்தில், பாதிப்பு உள்ளவர்களின் சரியான எண்ணிக்கையை நாம் அறுதியிட்டு கூற முடியாத நிலையிலேயே நாம் இருக்கின்றோம் என்பதை மறந்துவிட இயலாது.
சோதனை இன்னும் முழுமையாக நடைபெறாத நிலையில், பாதிப்பு உள்ளவர்களின் சரியான எண்ணிக்கை இன்னும் கிடைக்காதநிலையில், கொரோனா இறப்பு விகிதம் 1 சதவீத்திற்கும் கீழாகவே உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியிருக்கும் நிகழ்வு, வியப்பையே ஏற்படுத்துகிறது.
தொற்று முழுவதுமாக முடியும் காலத்தில், குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 99 சதவீத அளவிற்கு அதிகரிக்கும் ஆனால், அந்த நிலையை நாம் அடைய இன்னும் நீண்ட நாட்கள் ஆகும் என்பதே திண்ணம்.
ஜூன் 10ம் தேதி, கொரோனா சோதனையில் மற்றுமொரு மைல்கல் எட்டப்பட்டுள்ளது. அதாவது 50 மில்லியன் சோதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன, அதாவது நாள் ஒன்றுக்கு 1.5 லட்சம் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சோதனைகளின் எண்ணிக்கை சமீபகாலமாக சரிவடைந்து வருவதற்கு, நோயாளிகள் டிஸ்சார்ஜ் செய்யப்படும்போது மேற்கொள்ளப்படும் சோதனையிலும் அவர்களுக்கு பாசிட்டிவ் என்றே முடிவுகள் வருவதால், நோயாளிகளிடம் பலமுறை சோதனைகள் நடத்தப்படுகின்றன.
ஜூன் 10ம் தேதி, புதிதாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 7,500க்கும் மேற்பட்டோர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, குஜராத் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.. இந்த 5 மாநிலங்களிலும், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அன்றைய நாளில் முதன்முறையாக மிகவும் அதிகபட்சமான அளவில் பதிவாகி இருந்தது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.