Amitabh Sinha
அசாம், சட்டீஸ்கர், உத்தர்காண்ட், திரிபுரா, ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக இந்த மாநிலங்களில் பாதிப்பு மகாராஷ்டிரா, தமிழ்நாடு மாநிலங்களை போன்று கணிசமாக அதிகரித்து வருகிறது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், அசாம் மாநிலத்தில் புதிதாக 140 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 600 ஆக அதிகரித்துள்ளது.
சட்டீஸ்கர் மாநிலத்தில் புதிதாக 100 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு பாதிப்பு எண்ணிக்கை 360 ஆக அதிகரித்துள்ளது.
திரிபுரா, இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், கோவா உள்ளிட்ட மாநிலங்களிலும் இதேநிலையே நீடிக்கிறது.
இந்த மாநிலங்களில் புதிதாக தொற்று காணப்பட்டதற்கும் பாதிப்பு அதிகரித்ததற்கு, புலம்பெயர் தொழிலாளர்கள் அந்தந்த மாநிலங்களுக்கு திரும்பியதே காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாநிலங்களில், தேசிய சராசரியை விட, கொரோனா பாதிப்பு அதிகமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த மாநிலங்களின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையே 3 ஆயிரம் என்ற அளவை கடக்காது என்று அனைவரும் நினைத்திருந்த நிலையில், வடமாநிலங்கள் உள்ளிட்டவைகளிலிருந்து தங்களது சொந்த மாநிலங்களுக்கு பலர் திரும்பியதாலேயே, இந்தளவிற்கு பாதிப்பு அதிகரித்துள்ளது.
சமீபத்தில், பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் 40 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்தது.
அவர்கள் அனைவரும் வெவ்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள். இதனிடையே, அவர்கள் சென்று வேறு நபர்கள் அந்த பணிக்கு நியமிக்கப்பட்டிருந்தனர். அவர்களும் வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களே ஆவர். இந்நிலையில், தற்போது பஞ்சாப் மாநிலத்தில் குறிப்பிடத்தக்க அளவிற்கு கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. வெவ்வேறு மாநிலங்களில் இருந்த பஞ்சாப் மாநிலத்தவர்கள் தற்போது திரும்பியுள்ளதாலேயே இந்த பாதிப்பு அதிகரித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.5 லட்சத்தை கடந்துள்ளது. இதில் 83 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த இரண்டு நாட்களாக புதிய தொற்றுகளின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன்னர் நாள் ஒன்றுக்கு குறைந்தது 3 ஆயிரம் புதிய தொற்றுகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில், தற்போது 2 ஆயிரத்தை ஒட்டியே புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. மே 26ம் தேதி மட்டும், அங்கு கொரோனாவுக்கு 100 பேர் பலியாகியிருப்பதாக மகாராஷ்டிரா அரசு தெரிவித்துள்ளது.
மும்பையில் மட்டும் 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை அடுத்த மாதத்தில் இரட்டிப்பாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் இடப்பற்றாக்குறை நிலவுவதால், பாந்த்ரா குர்லா காம்பிளக்ஸ் பகுதியில், திறந்தவெளி இடங்களில் மேற்கூரைகள் அமைக்கப்பட்டு மருத்துவமனைகளாகவும், தனிமை வார்டுகளாகவும் மாற்றம் செய்யப்பட்டு வருகின்றன.
ஜீன் மாத பிற்பகுதியில் புதிதாக 1 லட்சம் படுக்கைகள் ஏற்படுத்தப்படும் என்றும், மாத இறுதியில் 1.5 படுக்கைகள் வசதி அளவிற்கு விரிவுபடுத்தப்படும் என்று அம்மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாடு இரண்டாம் இடத்திலும், குஜராத் 3ம் இடத்திலும், தலைநகர் டெல்லி நான்காம் இடத்திலும் உள்ளது.
பீகார் மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே 26ம் தேதி புதிதாக 231 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அங்கு பாதிப்பு 3 ஆயிரத்தை கடந்துள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil