கொரோனா பரவல் - இந்தியாவில் ஜூன் மாசம் படுமோசம் : 12 நாட்களில் 2 லட்சம் புதிய பாதிப்புகள்
India Coronavirus Cases Numbers: மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.74 லட்சமாக உள்ளது. இது, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 29.8 சதவீதம் ஆகும்
India Coronavirus Cases Numbers: மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.74 லட்சமாக உள்ளது. இது, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 29.8 சதவீதம் ஆகும்
இந்தியாவில் ஜூன் மாதத்தில் மட்டும் 3.86 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இதனையடுத்து, சர்வதேச அளவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள நாடுகள் பட்டியலில் இந்தியா நான்காவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த பட்டியலின் முதலிடத்தில் அமெரிக்காவும், அதற்கடுத்த இடங்களில் பிரேசில் மற்றும் ரஷ்யா உள்ளது. இந்தியாவில் தற்போதைய நிலையே தொடர்ந்தால், இன்னும் ஒருவாரத்திற்குள் ரஷ்யாவை முந்தி 3ம் இடத்திற்கு இந்தியா முன்னேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில், மே 31ம் தேதி நிலவரப்படி 1.98 கொரோனா வைரஸ் பாதிப்புகள் இருந்தன. ஜூன் 30ம் தேதியில் இது 5.85 லட்சமாக அதிகரித்துள்ளது. வெறும் 12 நாட்களில், 2 லட்சம் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
Advertisment
Advertisements
இந்தியாவில் மருத்துவ கட்டமைப்பு வசதிகள் போதிய அளவில் இல்லாததால், பாதிப்பு ஏற்பட்டவர்களுக்கு உரிய மருத்துவ சேவை வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. மே இறுதியில் 97 ஆயிரமாக இருந்த குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 2.2 லட்சமாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் ஜூன் மாதத்தில் மட்டும் கொரோனா பாதிப்பால் 11,800க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இது கடந்த 3 மாதங்களின் அளவைக்காட்டிலும் இரண்டு மடங்குக்கும் அதிகம் ஆகும். ஜூன் மாதத்தில் மட்டும் 48.6 லட்சம் பேருக்கு கொரோனா சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இது, தற்போதுவரை மேற்கொள்ளப்பட்டுள்ள சோதனைகளில் 50 சதவீதத்திற்கும் மேல் ஆகும்.
மே மாதத்தில், கொரோனா தொற்று பரவல் விகிதம் 4.78 சதவீதமாக இருந்த நிலையில், அது தற்போது 3.61 சதவீதமாக குறைந்துள்ளது மட்டுமே சற்று ஆறுதலான விசயம் ஆகும்.. ஜூன் மாத முற்பகுதியில் குறைந்திருந்த பரவல் விகிதம், ஜூன் 20ம் தேதிக்கு பிறகு திடீரென அதிகரித்து பின் தற்போது குறைய துவங்கியுள்ளது.
இந்தியாவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்களின் பட்டியலில், மகாராஷ்டிரா, தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. டெல்லி, தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகளவிலேயே உள்ளது. உத்தரபிரதேசம், அசாம், பீகார், ஹரியானா, கேரளா, மேற்குவங்க மாநிலங்களில் சமீபகாலமாக அதிக பாதிப்பு கண்டறியப்பட்டு வரும்நிலையில், திரிபுரா, சட்டீஸ்கர், உத்தர்காண்ட், லடாக் மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தற்போது அதிகரிக்கத்துவங்கியுள்ளன.
மகாராஷ்டிரா மாநிலத்தில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1.74 லட்சமாக உள்ளது. இது, நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 29.8 சதவீதம் ஆகும். மே மாத அளவில், 35 சதவீதமாக இருந்தநிலையில் தற்போது குறைந்துள்ளது. தமிழ்நாடு, டெல்லி மாநிலங்களில், நாட்டின் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 18 சதவீதத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், அதிலிருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குணமடைபவர்களின் எண்ணிக்கை, பாதிப்பு, தினந்தோறும் புதிய தொற்று கண்டறியப்படுபவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகவே உள்ளது. தற்போதைய அளவில், தினந்தோறும் 5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரையிலான புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil