Advertisment

விலங்குகளுக்கு கொரோனா ஆபத்து அதிகமா? குறைவா?

Covid-19 risk pet animals : கால்நடைகள், ஆடுகள் உள்ளிட்டவைகளுக்கு நடுத்தர அளவில் பாதிப்பும், குதிரைகள், பன்றிகள் உள்ளிட்டவைகளுக்கு குறைந்த அளவிலான பாதிப்பும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Corona virus, covid pandemic, coronavirus in animals, Covid-19 risk pet animals, pet animals covid-19 coronavirus, coronavirus symptoms animals, covid-19 animals explained, indian express explained

Kabir Firaque

Advertisment

கொரோனா தொற்று பாதிப்பு சர்வதேச அளவில் மனிதர்களிடையே அதிக பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், பூனைகள், நாய்கள், புலிகள் உள்ளிட்ட விலங்குகளிலும் இந்த தொற்று கணிசமான அளவில் கண்டறியப்பட்டுள்ளது. இந்த விலங்குகளுக்கு மனிதர்களின் மூலமாகவே, இந்த தொற்று பரவியுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் தேசிய அறிவியல் அகாடமியில் வெளியிடப்பட்டுள்ள ஆய்வறிக்கையில், 410 வகை விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்த விலங்குகளுக்கு கொரோனா பாதிப்பு அதிகம்?

410 வகை விலங்குகளில் முதுகெலும்புள்ளவைகளான - பறவைகள், மீன்கள், தவளை போன்ற இருவாழ்விகள், ஊர்வன மற்றும் பாலூட்டிகள் அடங்கும்.

SARS-CoV-2 வைரசால் ஏற்படும் கொரோனா பாதிப்பு, அரிய வகை விலங்குகளான மேற்கு தாழ்நில கொரில்லா, சுமத்ரா ஒராங்குட்டான் குரங்கு, சிம்பன்சி மற்றும் ரீசஸ் மக்காவ் குரங்குகள் அதிகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளன.

இதுமட்டுமல்லாது, நீலக்கண் கொண்ட கருப்பு நரி போன்ற விலங்கு, டால்பின்களுக்கு அதிக பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகளின் நிலை என்ன?

வீட்டில் வளர்க்கப்படும் நாய், பூனை போன்ற விலங்குகளுக்கு மனிதர்களின் மூலமாக கொரோனா தொற்று பரவுவது கண்டறியப்பட்டுள்ளது. நாய்களை விட பூனைகளுக்கே அதிக பாதிப்பு வாய்ப்பு உள்ளது. இவைகள் மட்டுமல்லாது, கால்நடைகள், ஆடுகள் உள்ளிட்டவைகளுக்கு நடுத்தர அளவில் பாதிப்பும், குதிரைகள், பன்றிகள் உள்ளிட்டவைகளுக்கு குறைந்த அளவிலான பாதிப்பும் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.

 

publive-image

ஆய்வு, எதனடிப்படையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது?

மனித உடலில் உள்ள செல்லில், SARS-CoV-2 வைரஸ், இணைந்தநிலையில், பாதிப்பு ஏற்பட்டபோது, ACE2 என்சைமின் உதவியுடன் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. ACE2 என்சைமின் 25 அமினோ அமிலங்கள், மனித செல்லில், இந்த வைரஸ் ஒட்டிக்கொள்ள உதவுகிறது. மனிதர்களை தவிர மற்ற உயிரினங்களில், ACE2 என்சைமின் எத்தனை அமினோ அமிலங்கள் இருந்தன என்பதை பொறுத்து அது மதிப்பிடப்பட்டது. 25 அமினோ அமிலங்களும் இருப்பின், அது அதிக பாதிப்பு என்றும், இவற்றில் சிலவைகள் மட்டும் இருந்தால், அது குறைந்த பாதிப்பிலானது என்று மதிப்பிடப்பட்டது.

ஆய்வின் முக்கியத்துவம் என்ன?

ACE2 என்சைமின் இணைவை கொண்டு இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளதே தவிர, பாதிப்பை கருத்தில் கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலைகழகத்தை சேர்ந்த விஞ்ஞானி டேவிஸ், இது கணிப்பொறி அடிப்படையிலான தரவுகள் மூலம் கிடைத்த முடிவு என்பதால், இதில் ரிஸ்க்குகள் அதிகம். மேலும் அதிகளவில் சோதனைகளை செய்தால்தான், உண்மையான பாதிப்பின் அளவு தெரியவரும்.

பூனைகள், நாய்கள், புலிகள் உள்ளிட்ட விலங்குகளில் கண்டறியப்பட்ட பாதிப்புகளில் ACE2 receptors மட்டுமல்லாது ACE2 தவிர மற்ற ரிசப்டர்களும் இருந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - Explained: The coronavirus risk for animals, high or low

Coronavirus Research
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment