Amitabh Sinha
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நோய் பாசிட்டிவிட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருவதும், இறப்பு விகிதம் தொடர்ந்து குறைந்து வருவதுமான நிகழ்வு 2 மாதங்களாக நீடித்து வருகிறது.
பாசிட்டிவிட்டி விகிதம் என்பது, கொரோனா சோதனை முடிவுகளில் தொற்று பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டவர்கள்களின் எண்ணிக்கை ஆகும். இந்த விகிதத்தின் மூலம், குறிப்பிட்ட பகுதியில், எந்தளவிற்கு பாதிப்பு உள்ளது என்பதை கண்டறிய முடியும். மே மாத துவக்கத்தில், இந்த பாசிட்டிவிட்டி விகிதம் 4.14 சதவீதமாக இருந்தது. அதாவது ஆயிரம் பேருக்கு சோதனை மேற்கொள்ளப்பட்டால், அதில் 414 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது இந்த பாசிட்டிவிட்டி விகிதம் 7.44 சதவீதமாக உள்ளது.
கொரானா சோதனையில் தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்கள் இறக்கும் நிகழ்வே, இறப்பு விகிதம் ஆகும். மே மாத துவக்கத்தில், கொரோனா காரணமாக இறந்தவர்களின் சதவீதம் 3.28 சதவீதமாக இருந்த நிலையில், அது தற்போது 2.64 சதவீதமாக சரிவடைந்துள்ளது. இறப்பு விகிதம் சரிவடைவதன் மூலம், நோய்த்தொற்று பெருமளவில் குறைந்துவருவதாக பொருள்.
கொரோனா தொற்று பரவல் விகிதம் என்பது, சமூகத்தில் நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வருவதையே காட்டுகிறது. அதாவது அதிதீவிரமாக நோய்த்தொற்று பரவியுள்ளது. சோதனை ஒருவருக்கு நிகழ்த்தப்படாமல், அவருக்கு தொற்று உள்ளதா என்பதை அறுதியிட்டு கூற முடியாது. அனைவருக்கும் கொரோனா சோதனை நிகழ்த்துவது என்பது இயலாத காரியம் ஆகும்.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் பல்வேறு மாநிலங்கள், தங்களுடைய மக்கள்தொகைக்கு ஏற்ப, அறிகுறிகள் உள்ளவர்கள், தொற்று பாதிப்பு உள்ளவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என பல்வேறு வகைகளாக வகைப்படுத்தி கொரோனா சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சோதனைகளின் மூலம், கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வருகிறது. மே மாத துவக்கத்தில், இந்த பாசிட்டிவிட்டி விகிதம் குறைவாக இருந்த நிலையில், தற்போது மகாராஷ்டிரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் பாசிட்டிவிட்டி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா காரணமாக நிகழும் இறப்பு விகிதம் குறைவாக உள்ள நிலையில், இதேநிலை தொடர்ந்து நீடித்தால், நோய்த்தொற்று குறைவாக உள்ளதென்று அர்த்தம். ஆனால் நிலைமையோ தலைகீழாக உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த 2 மாதத்தில் மட்டும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதுமட்டுமல்லாது, அங்கு கடந்த சிலநாட்களாக கணக்கில் சேர்க்கப்படாத அதிகளவிலான மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன.
மருத்துவ நிபுணர்கள், கொரோனா தொற்று முடிவுக்கு வரும் காலம் வெகுதொலைவில் இல்லை என்று நம்பி வருகின்றனர். கொரோனா சோதனைகளை அதிகளவில் நிகழ்த்துவதன் மூலம், நோய்த்தொற்று பாதிப்பு நபர்களை தனிமைப்படுத்துவதால், நோய்த்தொற்று பரவலை வெகுவாக கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகின்றனர். தற்போதைய அளவில், கொரோனா காரணமாக இறப்பு விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு விகிதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. ஜூலை 12ம் தேதி புதிதாக 28 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. இரண்டாவது நாளாக அதிகபட்ச அளவாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போதைய அளவில், நாட்டில் 8.78 லடசம் பேருக்கு பாதிப்பு உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.இவர்களில் 5.53 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது. தற்போதைய அளவில், நோய்த்தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சம் என்ற அளவை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கொரோனா பாதிப்பு அதிகம் கொண்ட 10 மாநிலங்களில் 8ல் தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்டு வருகின்றன. மகாராஷ்டிரா மாநிலத்தில் நாள்தோறும் 7 ஆயிரம் புதிய தொற்றுக்கள் கண்டறியப்படுகின்றன. தமிழ்நாட்டில் 4 ஆயிரம் புதிய தொற்றுக்களும், பீகார் மாநிலத்தில் தினமும் 1,200க்கும் மேற்பட்ட புதிய தொற்றுக்களும் கண்டறியப்பட்டு வருகின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil