corona virus, covid pandemic, India Coronavirus, Covid-19 Cases Tracker, Delhi, Maharashtra, Gujarat, Tamil Nadu,delhi corona news, delhi coronovirus news, gujarat coronavirus, maharashtra coronavirus, mumbai coronavirus, tamil nadu coronavirus cases, gujarat coronavirus cases, coronavirus cases today update, coronavirus tracker, coronavirus india tracker, karnataka coronavirus
Amitabh Sinha
Advertisment
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில், தொடர்ந்து 3வது நாளாக 3 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலை,யில், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், தமிழ்நாட்டை முந்தி, இரண்டாம் இடத்திற்கு முன்னேறியுள்ளது.
டெல்லியில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 59,746 ஆக அதிகரித்துள்ள நிலையில், இவர்களில்கடந்த ஒரு வாரத்தில் மட்டும் மொத்த எண்ணிக்கையில் ,மூன்றில் ஒரு பகுதியான 18,564 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
தமிழ்நாட்டில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 59,377 ஆக உள்ளது.
மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1.32 லட்சத்தை தாண்டியுள்ளது. டெல்லியில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் வீதத்தை பார்த்தால், மிக விரைவில், மகாராஷ்டிராவை முந்தி பட்டியலில் டெல்லி முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை நகரத்தில், 66,500 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ள நிலையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் அங்கு புதிதாக 8ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆனால், டெல்லியிலோ, கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
சென்னையில், தற்போதைய நிலையில், 41,172 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாட்டில் உள்ள மொத்த கொரோனா பாதிப்பில், இந்த 3 நகரங்களின் பங்கு மட்டும் கிட்டத்தட்ட 40 சதவீதம் ஆகும்.
ஜூன் 21ம் தேதி புதிதாக 14 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில், இதில் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாதிப்புகள் மகாராஷ்டிரா மற்றும் டெல்லி மாநிலங்களிலிருந்தே கண்டறியப்பட்டுள்ளது.
தேசிய அளவில், கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 4.25 லட்சமாக உள்ளது. இதில் 2.27 லட்சம் பேர் பாதிப்பிலிருந்து குணமடைந்துவிட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய அளவில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் புதிதாக 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கை வாராவாரம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
ஜூன் 7 முதல் 14ம் தேதி வரையிலான காலகட்டத்தில், புதிதாக 75 ஆயிரம் பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. அதற்கு முந்தைய வாரத்தில் 66 ஆயிரம் பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது.
கொரோனா சோதனைகள் அதிகரித்து வருவதாலேயே, பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச அளவில், கொரோனா பாசிட்டிவ் எண்ணிக்கை இந்தியாவில் முதன்முறையாக 6 சதவீதமாக அதிகரித்துள்ளது. வரும்காலங்களில் இது மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி, தமிழ்நாடு, ஹரியானா, ஆந்திரபிரதேசம், தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும்நிலையில், மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் தொற்றுபாதிப்பு குறிப்பிடத்தக்க அளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil