கொரோனா பாதிப்பு : கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் திடீர் அதிகரிப்பு ஏன்?
Corona cases in India : தேசிய அளவில், மே 24ம் தேதி மட்டும் புதிதாக 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 1.36 லட்சமாக அதிகரித்துள்ளது.
corona virus ,covid pandemic, kerala, bihar, odisha, migrant workers, lockdown, coronavirus, coronavirus cases, covid 19 tracker, kerala coronavirus, maharashtra coronavirus news, covid 19 tracker india, bihar coronavirus, bihar covid-19, india covid 19 tracker, corona cases in india, india corona cases, coronavirus cases in delhi, delhi coronavirus, delhi coronavirus cases, maharashtra coronavirus, mp coronavirus, tamil nadu coronavirus cases, punjab coronavirus, rajasthan coronavirus cases, delhi corona cases, west bengal coronavirus
Amitabh Sinha
Advertisment
கேரள மாநிலத்தில் தொடர்ந்து இரண்டாவது நாளாக ஒரேநாளில் புதிதாக 50க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
Advertisment
Advertisement
கொரோனா ஊரடங்கால் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் தவித்து வந்த கேரள மக்கள், தற்போது சொந்த மாநிலத்திற்கு திரும்பியுள்ள நிலையில், தற்போது அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
கேரளாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 847 ஆக அதிகரித்துள்ளது. மே 10ம் தேதிக்கு முன், கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 20 ஆக இருந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை 322 ஆக அதிகரித்துள்ளது. வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து தவித்து வந்த கேரள மாநிலத்தவர்களின் வருகையினால், இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல நாட்களாக புதிய தொற்று இல்லாத நிலையிலும், ஒற்றை இலக்கத்திலேயே பாதிப்புகள் இருந்தவந்த நிலையில், தற்போது அதன் எண்ணிக்கை கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
கடந்த ஒரு வாரத்தில் மட்டும், கேரளாவில் புதிதாக 250 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கேரளாவின் வடக்கு மற்றும் மத்தியில் உள்ள மாவட்டங்களான கண்ணூர், பாலக்காடு, மலப்புரம் பகுதிகளில் அதிக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
மே 24ம் தேதி புதிதாக 53 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், இதில் 30 பேர் மகாராஷ்டிரா, குஜராத், தமிழ்நாடு மாநிலங்களிலிருந்து வந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே 21ம் தேதிவரை, கேரளாவில் 3 மரணங்கள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில், தற்போது கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்துள்ளது.
மே 4ம் தேதி, மத்திய அரசு அமல்படுத்தியிருந்த தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை மேற்கொண்டிருந்தது. இந்த தளர்வுகள் காரணமாக, வெளிமாநிலங்களில் தவித்து வந்த புலம்பெயர் தொழிலாளர்கள், தங்களது மாநிலத்திற்கு திரும்பினர். இதன்காரணமாகவே, கொரோனா பாதிப்பு குறைவாக இருந்த பீகார், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2 வாரங்களில் மட்டும், பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்துள்ளது. மே 10ம் தேதி நிலவரப்படி 700க்கும் குறைனாகவே கொரோனா பாதிப்பு இருந்தநிலையில், தற்போது 2,500 என்ற அளவை கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பிற்கு புலம்பெயர் தொழிலாளர்களே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒடிசா மாநிலத்தில் மே 24ம் தேதி மட்டும் புதிதாக 100க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,450 ஆக அதிகரித்துள்ளது. வெளிமாநிலங்களிலிருந்து ஒடிசா திரும்பிய மக்களோடு ஏற்பட்ட நேரடி தொடர்பே கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு காரணமாக சொல்லப்படுகிறது.
தேசிய அளவில், மே 24ம் தேதி மட்டும் புதிதாக 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனையடுத்து நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 1.36 லட்சமாக அதிகரித்துள்ளது.
கடந்த 2 வாரங்களில் மட்டும், மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆயிரத்திற்கு மேல் அதிகரித்துள்ளது. தேசிய அளவிலான கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிராவின் பங்கு 40 சதவீதத்திற்கும் மேல் உள்ளது. மகாராஷ்டிராவில், கடந்த 2 மாதங்களாகவே, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.
மார்ச் 24ம் தேதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்த சமயத்தில், தேசிய அளவிலான பாதிப்பில் 5ல் 1 பங்கு இருந்த கொரோனா பாதிப்பு, தற்போது அந்த மாநிலத்தின் பங்கு மூன்றில் ஒரு பங்காக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil