Amitabh Sinha
கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் புதிதாக 300க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், மாநிலத்தில் கொரோனா பாதிப்பு, தேசிய சராசரியை விட அதிகரித்துள்ளது.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கேரள மாநிலம் மற்ற மாநிலங்களில் முன்மாதிரியாக திகழ்ந்து வந்த நிலையில், வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் தவித்து வந்தவர்கள் மீண்டும் கேரளாவிற்கு திரும்பியநிலையிலேயே, அங்கு கொரோனா பாதிப்பு கணிசமான அளவில் அதிகரிக்க துவங்கியது.
கேரள மாநிலத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க துவங்கியது, பாதிப்பு எண்ணிக்கை 666 ஆக இருந்தநிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 300க்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 1,003 ஆக அதிகரித்தது. இதன்மூலம், அம்மாநிலத்தில் பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 12 நாட்களுக்கு கீழாக குறைந்துள்ளது. தேசிய அளவில் பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 14 நாட்களாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
மே மாதத்தின் நடுவாக்கில், பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 100 நாட்களுக்கு மேல் இருந்தது. இந்த காலத்தில் மாநிலத்தின் எந்தவொரு பகுதியிலும் ஒரு தொற்று கூட கண்டறியப்படவில்லை. 90 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியிருந்தனர். அந்த காலகட்டத்தில் 3 மரணங்களே பதிவாகியிருந்தன. இது, தேசிய அளவில் மிகக்குறைவான அளவு என்பது குறிப்பிடத்தக்கது.
வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் கொரோனா ஊரடங்கால் சிக்கி தவித்த மலையாளிகள், மே 4ம் தேதி மத்திய அரசு ஊரடங்கு நிலையில் சில தளர்வுகளை அமல்படுத்தியிருந்த நிலையில் அவர்கள் விமானங்கள், ரயில்களின் மூலம் திரும்பத்துவங்கினர். இதனையடுத்து, கேரளாவில், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்க துவங்கியது.
அசாம் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 17 ஆக இருந்த நிலையில், கடந்த ஒருவாரத்தில் மட்டும் கண்டறியப்பட்ட புதிய தொற்றுகளால் தற்போது அதன் எண்ணிக்கை 774 ஆக அதிகரித்துள்ளது. அசாம் மாநிலத்தில், கேரளாவைவிட அதிகவேகத்தில் தொற்று அதிகரித்து வருகிறது.
பல்வேறு மாநிலங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் இடம்பெயர்ந்து வருவதால், அவர்கள் தற்போதைய நிலையில் எவ்வித மாநிலத்தையும் சார்ந்திராதவர்களாக உள்ளனர். அவர்களின் மாநிலத்தை அடைந்தவுடன்., அவர்கள் அந்த மாநிலத்தின் கொரோனா பாதிப்பில் சேர்த்துகொள்ளப்படுவதாலேயே, கேரளா,அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நிலவும் திடீர் கொரோனா அதிகரிப்பிற்கான காரணம் ஆகும்.
மே 27ம் தேதி, நாட்டில் புதிதாக 7 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்த நிலையில், தேசிய அளவிலான கொரோனா பாதிப்பு 1.58 லட்சமாக அதிகரித்துள்ளது. இதில் 65 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
தலைநகர் டெல்லியில், மே 27ம் தேதி மட்டும் 792 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன்மூலம், அதிகம் பாதிப்பு உள்ள மாநிலங்களின் பட்டியலில் குஜராத்தை பின்னுக்குத்தள்ளி 3ம் இடத்திற்கு டெல்லி முன்னேறியுள்ளது. டெல்லியில், கொரோனா பாதிப்பு 15,257 என்ற அளவிலும், குஜராத்தில் 15,195 என்ற அளவிலும் உள்ளது. கொரோனா மரணங்கள் அடிப்படையில், குஜராத்தில் 938 , டெல்லியில், 303, தமிழகத்தில் 133 மரணங்கள் நிகழ்ந்துள்ளன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.