இந்தியாவில் இறங்குமுகத்தில் கொரோனா பாதிப்பு - மீண்டும் அதிகரிக்குமா??
India Coronavirus Cases Numbers: தேசிய அளவில், ஆகஸ்ட் 3ம் தேதி புதிதாக 52 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 6 நாட்களில் மிககுறைவான பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.
India Coronavirus Cases Numbers: தேசிய அளவில், ஆகஸ்ட் 3ம் தேதி புதிதாக 52 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 6 நாட்களில் மிககுறைவான பாதிப்பு எண்ணிக்கை ஆகும்.
India Coronavirus Cases: இந்தியாவில் கொரோனா தொற்றின் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. கடந்த சில வாரங்களாக புதிய பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அது தற்போது குறைந்து வருவது மகிழ்ச்சியளிப்பதாக உள்ளது, கடந்த 10 நாட்களில், கொரோனா தினசரி வளர்ச்சி விகிதம் 3.67 சதவீதம் என்ற அளவிலிருந்து 3.25 சதவீதமாக குறைந்துள்ளது. இதேநேரத்தில், புதிய பாதிப்பு எண்ணிக்கை 57 ஆயிரம் என்ற அளவிலிருந்து 52 ஆயிரம் என்ற அளவிற்கு சரிவடைந்துள்ளது.
கொரோனா பாதிப்பு மிக அதிகவேகமாக இருந்து வந்த ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில்,தற்போது புதிய பாதிப்பு குறைய துவங்கியுள்ளது. கடந்த வாரத்தில் மட்டும் கொரோனா வளர்ச்ச விகிதம் 10 சதவீதமாக இருந்தநிலையில், அது தற்போது 7.21 சதவீதமாக குறைந்துள்ளது.தொடர்ந்து 3 நாட்களாக புதிய பாதிப்பு 10 ஆயிரம் என்ற அளவை கடந்த நிலையில், அது தற்போது 8 ஆயிரமாக குறைந்துள்ளது.
Advertisment
Advertisements
கொரோனா தொற்று வளர்ச்சி விகிதம் குறைவது இது ஒன்றும் முதல்முறையல்ல. ஜூலை மாதம் இரண்டாவது வாரத்தில் இதுபோன்ற குறைவு ஏற்பட்டிருந்தது. தேசிய அளவிலான கொரோனா தொற்று வளர்ச்சி விகிதம் மே 1ம் தேதியில் 3.25 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விகிதம் அப்போது இரட்டிப்பாக 22 நாட்கள் ஆன நிலையில், ஜூன் மாத பிற்பகுதியில் ஏற்பட்ட சரிவுநிலையிலிருந்து பாதிப்பு இரட்டிப்பாக வெறும் 20 நாட்கள் மட்டுமே தேவைப்பட்டன.
தலைநகர் டெல்லியில், கொரோனா தொற்று வளர்ச்சி விகிதம் 1 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. இங்கு பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 120 நாட்களுக்கு மேல் உள்ளது.
தேசிய அளவிலான கொரோனா உறுதிப்படுத்தப்பட்டவர்களின் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இந்த விகிதம் தற்போதைய அளவில் 2.39 சதவீதமாக உள்ளது (இது சராசரியாக 7 நாட்கள் காலஅளவினதாக உள்ளது)
கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்கள் பட்டியலில், டெல்லியை முந்தி கர்நாடகா 4வது இடம்பிடித்துள்ளது. டெல்லியில், ஆகஸ்ட் 3ம் தேதி புதிதாக 800 பேருக்கு மட்டுமே தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது மே 27ம் தேதிக்கு பிறகு பதிவான குறைவான புதிய தொற்று அளவு ஆகும். கடந்த இரண்டு நாட்களாக அங்கு ஆயிரத்திற்கும் குறைவான அளவிலேயே புதிய பாதிப்புகள் பதிவாகி வருகின்றன.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த சிலநாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 3ம் தேதி புதிதாக 4400 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு எண்ணிக்கை 97 ஆயிரத்தை கடந்துள்ளது. இன்று 1லட்சம் பாதிப்புகள் என்ற மைல்கல்லை அம்மாநிலம் எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேசிய அளவில், ஆகஸ்ட் 3ம் தேதி புதிதாக 52 ஆயிரம் பேருக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இது கடந்த 6 நாட்களில் மிககுறைவான பாதிப்பு எண்ணிக்கை ஆகும். மொத்தம் 18.55 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 12.30 லட்சம் பேர் அதாவது 66.3 சதவீதம் பேர், இந்த பாதிப்பிலிருந்து விடுபட்டுள்ளனர். ஆகஸ்ட் 3ம் தேதி மட்டும் தேசிய அளவில் 800க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ள நிலையில், மொத்த உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil