மக்களின் அணுகுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்தி உள்ளதா கொரோனா பாதிப்பு?

Covid 19 online sales : ஐந்து பேரில் ஒருவர் பலசரக்கு பொருட்களை ஆன்லைனில் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By: Updated: July 17, 2020, 05:50:23 PM

Surbhi Gupta

கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு மார்ச் மாதத்தில் தேசிய அளவிலான ஊரடங்கு அமல்படுத்திய நிலையில், மக்கள், கொரோனா குறித்த கவலை மற்றும் பயத்துடன் சானிடைசர், மாஸ்க் உள்ளிட்ட சுகாதாரப்பொருட்களை அதிகளவில் வாங்கினர். ஆனால், ஊரடங்கு தொடர்ந்து அமல்படுத்தப்பட்டதால், அவர்களின் பொருளாதாரம் சரிவடைந்த நிலையில், கொரோனாவுடன் சேர்ந்து வாழ மக்கள் பழகிக்கொண்டனர் என்பதே நிதர்சனம்.

கொரோனா பாதிப்பால் சர்வதேச நாடுகளில் நுகர்வோர்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து மெக்கின்ஸி நிறுவனம், 12 நாட்களில் கருத்துக்கணிப்பு நடத்தியது. அதன் முடிவுகள் ஜூலை 8ம் தேதி வெளியிடப்பட்டன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கொரோனா பாதிப்பால், 91 சதவீத இந்தியர்களின் ஷாப்பிங் நடைமுறையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. நகரப்பகுதிகளில் உள்ள மக்கள், வீட்டிலிருந்து வேலை செய்யும் நேரத்தை அதிகப்படுத்தி, பொது இடங்களில் அதிகம் செல்வதை தவிர்த்து விட்டனர். தங்களது தேவைகளை ஆன்லைன் ஷாப்பிங் மூலம் அவர்கள் நிறைவேற்ற தயாராகிவிட்டனர். பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது மக்கள் எவ்வாறு பணமில்லா பரிவர்த்தனை முறைக்கு மாறினரோ, அதேபோல, இந்த கொரோனா பாதிப்பு காலத்தில், ஆன்லைன் ஷாப்பிங் முறைக்கு மக்கள் தங்களை பழக்கப்படுத்திக் கொண்டுவிட்டனர்.

கொரோனா பாதிப்பு காரணமாக, சர்வதேச அளவில் ஆன்லைன் வர்த்தகம் 10 சதவீத அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும், இதன்காரணமாக, ஆன்லைன் ஷாப்பிங்கில் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் இன்னும் பல்வேறு பொருட்களை ஆன்லைன் வர்த்தகத்தில் புதிதாக சேர்த்து வருவதாக மெக்கின்ஸி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐந்து பேரில் ஒருவர் பலசரக்கு பொருட்களை ஆன்லைனில் வாங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 56 வயதுக்கு மேற்பட்டவர்களில் 3ல் ஒருவர் ஆன்லைனில் பொருட்களை வாங்குவதாக அசென்சர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இதுதொடர்பான ஆய்வு கடந்த ஏப்ரல் மாதமே வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

கொரோனா ஊரடங்கு காரணமாக பல்வேறு தரப்பட்ட மக்கள் வேலையிழந்துள்ளதால் அவர்களின் பொருளாதார நிலை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுநாள்வரை, ஆடம்பர பொருட்களை மட்டுமே ஆன்லைன் வர்த்தகத்தில் வாங்கிவந்த மக்கள் தற்போதைய நிலையில் பலசரக்கு, வீட்டு உபயோக பொருட்களை வாங்க துவங்கியுள்ளனர். நவநாகரீக உடைகள், காலணிகள், பயணம் முதலியவற்றிற்கு போதுமான அளவு மக்கள் ஓய்வு கொடுக்க துவங்கிவிட்டனர் என்பதே மறுக்கமுடியாத உண்மை. மெக்கின்ஸி வெளியிட்ட ஆய்வில், 61 சதவீத இந்தியர்கள் மிக முக்கியமான தேவைகளுக்கு மட்டுமே பணத்தை செலவழிக்க நினைப்பதாகவும், 45 சதவீத இந்தியர்கள் விலை குறைவான பொருட்களையே அதிகம் வாங்குவதாக குறிப்பிட்டுள்ளது.

பலசரக்கு மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களை தவிர்த்து, இந்தியர்கள் அதிகளவில் டிவி மற்றும் ஸ்டிரீமிங் வெப்சைட்டுகள் அதிகம் செலவழிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் கல்வி, உடலை கட்டுக்கோப்பாக வைத்தல் போன்ற நிகழ்வுகளுக்கு என இணைய சேவையை மக்கள் அதிகளவில் பயன்படுத்த துவங்கியுள்ளனர். பிட்னெஸ், மெடிடேசன் செயலிகளுக்கும், சுய பாதுகாப்பு, மனநிலை பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கும் அதிகளவில் பணம் செலவழிப்பது தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகைக்கு பேட்டியளித்த கேபிஎம்ஜி இந்தியா நிறுவனத்தின் இணையதள வர்த்தகப்பிரிவு தலைவர் ஹர்ஷா ரஜ்தான் கூறியதாவது, கொரோனா ஊரடங்கால், மக்கள் அதிகளவில் தங்களது உடல்நலனில் அக்கறை செலுத்த துவங்கிவிட்டனர். இதற்காக செயலிகள், இணையதளங்கள் உள்ளிட்டவைகளை பார்க்கவும், வாங்கவும் துவங்கிவிட்டனர். மக்களின் வாங்கும் திறன், அவர்களின் மனநிலை முற்றிலுமாக மாறியுள்ளதாக அவர் கூறினார்.

கொரோனா பாதிப்பு மக்கள் அதிகளவில் பொது இடங்களில் செல்வதை தவிர்த்து எதை வேண்டுமானாலும் டிஜிட்டலில் வாங்கலாம் என்ற மனநிலைக்கு மாறியுள்ளதாக பாரஸ்ட் எசன்சியல்ஸ் நிறுவனத்தின் உயர் அதிகாரி நேஹா ரவ்லா தெரிவித்துள்ளார். ஷோல்ட்ரீ, கயா உள்ளிட்ட பொருட்களின் விற்பனை 30 சதவீதம் அதிகரித்துள்ளது.

மிந்த்ரா நிறுவனம், கடந்த மாதம் முதல் முறையாக 7 லட்சம் வாடிக்கையாளர்கள் என்ற நிலையை எட்டியுள்ளது. நாட்டின் இரண்டாம் தர நகரங்களான கவுகாத்தி, புவனேஸ்வர், இம்பால், அய்ஜ்வால், பஞ்ச்குலா உள்ளிட்ட நகரங்களில் 56 சதவீத விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.

இ-காமர்ஸ் வர்த்தகத்தை போன்று, டெலிவரி, பிக்அப் போன்ற தொடர்பில்லாத நபர்களின் சேவைகளும் கணிசமான அளவில் அதிகரித்துள்ளது. இ-காமர்ஸ் வர்த்தகத்தில், இன்னும் அதிகம் பாப்புலாரிட்டி கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், பிராண்ட்களின் மீதான மக்களின் அபிப்பிராயம் அதிகரித்துள்ளதாகவும், ஆன்லைன் ஷாப்பிங்கில் இனி பிரகாசமான எதிர்காலம் தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க – Explained: How Covid-19 pandemic has changed consumer behaviour

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Explained News by following us on Twitter and Facebook

Web Title:Corona virus human behaviour online shopping covid 19 online sales

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X