Amitabh Sinha
இந்தியாவின் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட 18 மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் விகிதம் தேசிய சராசரியை விட கணிசமான அளவு குறைந்திருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Coronavirus (COVID-19): இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 18 ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில் மகாராஷ்டிரா தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. நாட்டில் புதிதாக 3 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்படின் அதில் ஒருவர் மகாராஷ்டிராவை சேர்ந்தவராக இருப்பார்.
நாட்டில், புதிதாக 1,274 பேருக்கு தொற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், 466 பேர் மகாராஷ்டிராவில் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
ஏப்ரல் 19ம் தேதி, மகாராஷ்டிராவில் புதிதாக 552 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தியாவில் ஒரேநாளில் புதிதாக 1577 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது.
ஏப்ரல் 20ம் தேதி நிலவரப்படி, நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 18,467 ஆக அதிகரித்துள்ள நிலையில், இதில் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்களின் எண்ணிக்கை 4,666 என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனாவால், 20ம் தேதி மட்டும் பலியானவர்களின் எண்ணிக்கை 25 ஆக உள்ள நிலையில், இவர்களில் 10 பேர் மகாராஷ்டிராவை சேர்ந்தவர்கள் ஆவர். தேசிய அளவில் கொரோனாவிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 585 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில், கடந்த 2 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள கொரோனா தொற்று கொண்டவர்களின் சோதனை முடிவுகள் இன்னும் வெளிவராத நிலையிலேயே, ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாநிலங்களின் பட்டியலில், தலைநகர் டெல்லி இரண்டாம் இடத்திலும் ( 20ம் தேதி புதிதாக 78 தொற்று உடன் 2081 பேருடனும், குஜராத் 196 புதிய தொற்றுகளுடன் 1939 பேருடன் 3ம் இடத்திலும் உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் 18 மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் விகிதம் சரிவடைந்திருப்பதை காணமுடிகிறது.
மார்ச் 24ம் தேதி முதல் நாடெங்கும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவு, ஏப்ரல் 14ம் தேதி முடிவடைய இருந்த நிலையில், தற்போது மே 3ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக அமலில் இருந்த ஊரடங்கு காலத்தின் போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3.4 நாட்கள் அல்லது 4 நாட்களுக்கு ஒருமுறை இரண்டு மடங்காக அதிகரித்திருந்த வண்ணம் இருந்தது.தற்போது மேலும் 19 நாட்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 7.5 நாட்களுக்கு ஒருமுறையே இரண்டு மடங்காக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
நாட்டின் 18 மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் விகிதம் குறைந்துள்ளது. கேரள மாநிலத்தில், கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 72.2 நாட்களுக்கும் மேலாக இரண்டு மடங்காக அதிகரிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 407 ஆக உள்ளது. இவர்களில் கடந்த 5 நாட்களில், 20 பேருக்கு மட்டுமே புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தலைநகர் டெல்லியிலும், கொரோனா தொற்று பரவல் விகிதம் 8.5 நாட்களுக்கு மேலாகவே இரண்டு மடங்காக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிரா, குஜராத். ராஜஸ்தான், உத்தரபிரதேசம், மத்தியபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா தொற்று பரவல் விகிதம் தொடர்ந்து ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. இந்த மாநிலங்களில் கடந்த சில நாட்களில் மட்டும் புதிதாக ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.