இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சகட்டத்தை நெருங்குகிறது - காரணம் என்ன?
India coronavirus numbers explained : கொரோனா சோதனைகள் அதிகரித்துள்ளதன் காரணமாகவும் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
India coronavirus numbers explained : கொரோனா சோதனைகள் அதிகரித்துள்ளதன் காரணமாகவும் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக தொடர்ந்து ஏறுமுகத்திலேயே இருந்து வருகிறது. இதுவரை இல்லாத புதிய உச்சமாக, செப்டம்பர் 6ம் தேதி, ஒரேநாளில் புதிதாக 90,800 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருந்தது.
கடந்த ஒருவாரத்தில் மட்டும் புதிதாக 6 லட்சம் புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன்மூலம், சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகள் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடம் பிடித்துள்ளது. முதலிடத்தில் அமெரிக்கா உள்ளது.
Advertisment
Advertisements
புதிதாக கண்டுபிடிக்கபட்ட 6 லட்சம் பாதிப்புகளில் மகாராஷ்டிரா மாநிலத்தின் பங்கு மட்டும் 22 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் பொரோனா பாதிப்பு கணிசமான அளவு அதிகரித்ததற்கு மகாராஷ்டிரா மாநிலத்தில் நாளொன்றுக்கு 12 ஆயிரம் முதல் 14 ஆயிரம் வரை புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டதே காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த சில நாட்களாக மென்மேலும் அதிகரித்து வருகிறது. கடந்த 5ம் தேதி புதிய தொற்று எண்ணிக்கை 20 ஆயிரத்தை கடந்தநிலையில், 6ம் தேதி புதிய தொற்று எண்ணிக்கை 23 ஆயிரமாக அதிகரித்துள்ளது.
ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக, புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 10 முதல் 11 ஆயிரங்களாக தொடர்ந்து உள்ளது. கடைசி 3 நாட்களில், கண்டறியப்படும் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கையைவிட, குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 3 நாட்களில் 6 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சராசரியாக குணமடைந்து வருகின்றனர்.
தலைநகர் டெல்லியிலும் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள முதல் 10 மாநிலங்களில் ஜார்க்கண்ட் மற்றும் சட்டீஸ்கர் மாநிலங்களில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக, நாளொன்றுக்கு 1,500 புதிய தொற்றுக்கள் கண்டறியப்பட்ட நிலையில், அது செப்டம்பர் 6ம் தேதி, 3,500 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்து வரும் இந்நிலையில், ஊரடங்கு தளர்வு உள்ளிட்ட விவகாரங்களில் அரசின் தலையீடு அதிகரித்திருப்பதாக விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
கொரோனா சோதனைகள் அதிகரித்துள்ளதன் காரணமாகவும் புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
கொரோனா சோதனைகளின் அளவு கணிசமாக குறைந்து வருகிறது. செப்டம்பர் 6ம் தேதி மட்டும் 7.2 லட்சம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil