/tamil-ie/media/media_files/uploads/2020/08/Untitled-design-36.png)
Amitabh Sinha
கர்நாடக மாநிலத்தில் ஆகஸ்ட் 13ம் தேதி 6,700க்கும் மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு மொத்த பாதிப்பு 2 லட்சம் என்ற அளவை கடந்துள்ளது. இதனையடுத்து, தேசிய அளவில் அதிக கொரோனா பாதிப்பு உள்ள மாநிலங்கள் பட்டியலில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, ஆந்திராவை தொடர்ந்து கர்நாடகா உள்ளது.
கர்நாடகா மாநிலத்தின் ஜூன் மாத பிற்பகுதி வரை கொரோனா கட்டுக்குள் இருந்த நிலையில், ஜூலை 2வது வாரத்தில் பாதிப்பு அதிகரிக்க துவங்கியது. ஆந்திராவில் இதேநிலை நீடித்த நிலையில் தற்போது அங்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது, கர்நாடகாவில் கட;ந்த 3 வாரங்களுக்கும் மேலாக, புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை கணிசமான அளவில் அதிகரித்த வண்ணமே உள்ளது.
கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மொத்த கொரோனா பாதிப்பு, ஜூலை 27ம் தேதி தான் 1 லட்சம் என்ற அளவை எட்டியிருந்தது.. ஆந்திராவில் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், 1 லட்சம் என்ற அளவில் இருந்த பாதிப்பு அடுத்த 11 நாட்களில் 2 லட்சமாக அதிகரித்தது. கர்நாடகாவில் பாதிப்பு 2 லட்சமாக அதிகரிக்க 18 நாட்கள் பிடித்தது. மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு மாநிலங்களில் பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தில் இருந்து 2 லட்சமாக அதிகரிக்க 23 நாட்கள் தேவைப்பட்டது.
கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு இந்தளவிற்கு அதிகரித்ததற்கு, பெங்களூரு, மைசூரு, பெல்லாரி, கலாபுர்கி, தெற்கு கன்னடா உள்ளிட்ட பகுதிகள் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டதே காரணம் ஆகும்.
கடந்த 2 வாரங்களாக, கர்நாடகாவில், கொரோனா பாதிப்பு கணிசமான அளவிற்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஜூலை முதல் வாரதத்தில் கொரோனா வளர்ச்சி பரவல் விகிதம் 8.5 சதவீதமாக இருந்தநிலையில், தற்போது அது 3.4 சதவீதமாக உள்ளது. கடந்த சில நாட்களாக, புதிய பாதிப்பு எண்ணிக்கையை விட, குணமடைந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஆகஸ்ட் 13ம் தேதி, 8,609 பேர் குணமடைந்திருந்த நிலையில், அன்று புதிய பாதிப்புகளின் எண்ணிக்கை 6,706 ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொற்றின் பாதிப்பு சரிவடைந்து வரும் நிலையில், அங்கு கொரோனா மரணங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அங்கு நாள் ஒன்றுக்கு 100க்கும் அதிகமான மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. தற்போதைய நிலையில் அங்கு கொரோனாவால் 3,600க்கும் மேற்பட்ட மரணங்கள் நிகழ்ந்துள்ளன. அதிக கொரோனா மரணங்கள் நிகழ்ந்துள்ள மாநிலங்களின் பட்டியலின் முதன்மை இடங்களில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி உள்ளன.
தேசிய அளவில், ஆகஸ்ட் 13ம் தேதி, புதிதாக 64,500 பேருக்கு பாதிப்புகள் கண்டறியப்பட்ட நிலையில், 55 ஆயிரம் பேர் தொற்றிலிருந்து குணமடைந்தனர். மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24.61 லட்சத்தை கடந்துள்ள நிலையில், குணமடைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 17.51 லட்சம் ஆகும். இது சதவீதத்தின் அடிப்படையில் 71 சதவீதத்திற்கு மேல் ஆகும்.
ஆகஸ்ட் 13ம் தேதி மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மரணமடைந்துள்ள நிலையில் இதில் மகாராஷ்டிராவின் பங்கு மட்டும் 413 ஆகும்.
இந்தியாவில் சராசரியாக தினமும் 800 மரணங்கள் நிகழ்கின்றன. மொத்த மரணங்களின் எண்ணிக்கை 48 ஆயிரத்தை கடந்துள்ளது. சர்வதேச அளவில் அதிகளவில் மரணம் நிகழ்ந்துள்ள நாடுகளின் பட்டியலில் இந்தியா 4வது இடத்தில் உள்ளது. முதன்மை இடங்களில், அமெரிக்கா பிரேசில் மற்றும் மெக்ஸிகோ உள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.