/tamil-ie/media/media_files/uploads/2020/10/image-4-2.jpg)
இந்தியாவில் புதிதாக கொரோனா தொற்றுவோர் எண்ணிக்கை குறைந்து வருவதோடு, குறைவான இறப்புகளை இந்தியா தொடர்ந்து கண்டு வருகிறது. கொரோனா நோய்த் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த 12 நாட்களாக 1,000 க்கும் கீழ் உள்ளது
ஆகஸ்ட் 25 முதல், (சில நாட்கள் தவிராக), இந்தியாவில் தினசரி கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,000 க்கும் அதிகமாக இருந்தன. இதில் பல நாட்களில், கொரோனா வைரஸ் தொடர்பான உலகளாவிய இறப்புகளில் மிகப்பெரிய பங்களிப்பையும் இந்தியா பதிவு செய்து வந்தது.
ஆனால், புரிந்து கொள்ள முடியாத சூழலில்,இந்தியாவில் கடந்த மாதங்களில் புதிதாக கொரோனா தொற்றுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வரும் போக்கு காணப்பட்டது. இதன் காரணமாக, இறப்பு எண்ணிக்கையும் குறையத் தொடங்கின. கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 680 பேர், கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். ஜூலை 27 க்குப் பிறகு ஏற்பட்ட குறைவான எண்ணிக்கை இதுவாகும். கடந்த மூன்று நாட்களாக, இறப்பு எண்ணிக்கை 800 க்கும் குறைவாகவே உள்ளது.
கொரோனா தொற்று பாதிப்புகளோடு இறப்பு எண்ணிக்கை இணைக்கப்படுவதால், தற்போதைய குறைந்த இறப்புகள் ஆச்சரியப்படுத்தவில்லை. பொதுவாக, இறப்பு விகிதம் இரண்டு இரண்டு வாரகால தாமதத்துடன், புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் போக்கைப் பின்பற்றுகிறது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு வீதத்தின் வீழ்ச்சி தொடங்கி கிட்டத்தட்ட நான்கு வாரங்கள் ஆகிவிட்டன. அதன் காரணமாக, கடந்த இரண்டு வாரங்களில் இறப்பு எண்ணிக்கை குறையத் தொடங்கியது. இருப்பினும், வியாழக்கிழமை கொரோனா தொடர்பான உயிரிழப்பின் எண்ணிக்கை கடுமையாக குறைந்து காணப்பட்டது. இது, ஆச்சரியத்தை ஏற்படுத்தினாலும், வரவேற்கத்தக்க ஒன்றாகும்.
இந்தியாவில் கடந்த இரண்டு வாரங்களில், கோவிட்-19-னால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 12,500 ஆக இருந்தது. அதற்கு முந்தைய 14 நாட்களில், இந்த எண்ணிக்கை 15,000க்கும் அதிகமாக இருந்தன. அமெரிக்கா, பிரேசிலுக்குப் பிறகு உலகிலேயே அதிக கொரோனா உயிரிழப்புகளை கொண்ட நாடாக இந்தியா விளங்கி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது .
இதற்கிடையே, 3,000 க்கும் அதிகமான தினசரி கொரோனா பாதிப்பை டெல்லி மீண்டும் பதிவு செயடஹ்து. தொடர்ந்து கடந்த 12 நாட்களாக , கொவிட் தொற்று பாதிப்பு எண்ணிக்கையை, 3 ஆயிரத்துக்கும் கீழ் டெல்லி பராமரித்தது. ஆனால், டெல்லியில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளன? என்பதை தற்போது கூற இயலாது.
புதிதாக கொரோனா தொற்றுவோர் எண்ணிக்கையை குறைத்ததில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட மாநிலமாக ஆந்திர திகழ்கிறது. ஒரு மாத காலப்பகுதியில், 10,000 க்கும் அதிகமாக இருந்த தினசரி பாதிப்பு எண்ணிக்கையை, 4,000 க்கும் குறைவாக பராமரித்து வருகிறது. அங்கு, புதன்கிழமை கோவிட்-19 தொற்று வெறும் 3,900 பேருக்கு உறுதி செய்யப்பட்டது. ஜூலை மாதத்தில், தினசரி பாதிப்பு வளர்ச்சி விகிதம் 8 சதவீதத்திற்கும் மேலாக இருந்த நிலையில், தற்போது அந்த விழுக்காடு 0.6 சதவீதமாக உள்ளன.
கேரளாவிலும், தொற்றுவோர் எண்ணிக்கை குறையத் தொடங்யதற்கான அறிகுறிகள் தென்படுகிறது. கடந்த 3 நாட்களாக, அதன் தினசரி பாதிப்பு படிப்படியாக குறைய தொடங்கியது. அன்றாட வளர்ச்சி விகிதமும் 3 சதவீதத்திற்கும் குறைவாக உள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 67,708 புதிய பாதிப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. இதில் 77 சதவீதம் பத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து பதிவாகி உள்ளது. மகாராஷ்டிரா முதலிடத்திலும், கர்நாடகா இரண்டாம் இடத்திலும் உள்ளன.
அதே நேரத்தில், 81,514 நோயளிகள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது சிகிச்சையில் உள்ளவர்களின் எண்ணிக்கை 8,12,390 ஆகும். நாட்டில் இது வரை உறுதிப்படுத்தப்பட்ட மொத்த பாதிப்புகளில் இது 11.12 சதவீதமாகும். கடந்த 27 நாட்களில், 22 முறை கொரோனா பாதிப்பு எண்ணிக்கையை விட குணமடைவோரின் எண்ணிக்கை அதிகரித்து காணப்பட்டன .
கொரோனா நோய்த் தொற்று பாதிப்புகள் இரட்டிப்பாகும் காலம் கிட்டத்தட்ட 73 நாட்களாக (72.8 நாட்கள்) அதிகரித்துள்ளது. ஆகஸ்ட், மத்தியில் 25.5 நாட்களக இருந்த இரட்டிப்பாகும் விகிதம், தற்போது 73 நாட்களாக அதிகரித்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.