Pranav Mukul
சர்வதேச அளவில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஏர் பப்பிள் அரேஞ்ச்மெண்ட் அடிப்படையில், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவில் இருந்து விமான சேவையை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்தந்த நாடுகளின் சட்டதிட்டங்களுக்கு ஏற்பவே, விமான சேவைகள் இயக்கப்பட உள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Air transport bubbles என்றால் என்ன?
கொரோனா தொற்று காரணமாக பெரும்பாலான நாடுகளில் சர்வதேச விமான போக்குவரத்து சேவை தடைபட்டுள்ள நிலையில், இரண்டு நாடுகளுக்கிடையேயான பயணிகள் விமான சேவையை தற்காலிகமாக நடத்தும் நடவடிக்கையே ஏர் டிரான்ஸ்போர்ட் பப்பிள் என்றழைக்கப்படுகிறது. இது இயற்கை நடவடிக்கைகளுக்கு எதிரானது என்றாலும், இந்த நடவடிக்கையால் இரண்டு நாடுகளும் பலனடையும். அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, இங்கிலாந்து, யுஏஇ, மாலத்தீவு உள்ளிட்ட நாடுகளுடன் இந்த வகையில் விமானப்போக்குவரத்தை மேற்கொள்ள உள்ளது.
யார் யார் வெளிநாடு செல்ல முடியும்?
ஏர் பப்பிள் டிரான்ஸ்போர்ட் விதிமுறைகளின்படி, பயணம் செய்ய வேண்டிய இந்தியாவை சேர்ந்த அல்லது வெளிநாட்டு பயணிகளுக்கு சில நிபந்தனைகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியர்கள் எனில், சம்பந்தப்பட்ட நாடு வழங்கியுள்ள விசா காலாவதியாகாமல் இருக்க வேண்டும். விசா காலாவதி ஆக குறைந்தது 1 மாதம் இருக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்கள் மட்டுமே பயணத்துக்கு அனுமதிக்கப்படுவர்.
யுஏஇ, மாணவர் வீசா, தொழில்முறை விசா, பணியிட விசா உள்ளிட்ட எவ்வித விசா வைத்திருப்பவர்களையும் அனுமதிக்க திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகமும், ஆகஸ்ட் 17ம் தேதி முதல், மாணவர் விசாக்களை குறைந்த அளவில் இருந்து வழங்க நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்மூலம் மாணவர்கள், தங்கள் தேர்வுகளை எழுத முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சர்வதேச விமான சேவை துவக்கப்பட்டாலும், அந்தந்த நாடுகள் எடுக்கும் முடிவுகளுக்கு பயணிகளே முழுப்பொறுப்பு ஏற்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
இந்த திட்டத்தின் மூலம், இந்தியர்கள், உள்நாட்டு விமான நிறுவனங்கள் மட்டுமல்லாது, சர்வதேச விமான நிறுவனங்களிலும் பயணிக்கலாம், அதேபோல, சில பிரிவுகளின் மூலம், வெளிநாட்டவர்களும் இந்தியாவுக்கு வரலாம். முன்னதாக இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் பிரிவில் ஒரு வகையினர் மட்டுமே இந்தியாவுக்கு வர அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது இந்தியாவின் வெளிநாட்டு குடிமக்கள் அட்டை வைத்துள்ள அனைவரையும் இந்தியா வர மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
வெளிநாட்டவர்கள் எனில், தொழிலதிபர்கள், மருத்துவ நிபுணர்கள், மருத்துவ ஆராய்ச்சியாளர்கள், இஞ்ஜினியர்கள், தொழில்நுட்ப அறிஞர்கள், இந்திய மருத்துவத்துறையில் பணியாற்ற அங்கீகரிக்கப்பட்ட இந்திய நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட கடிதங்களுடன் வருவோர். நிர்வாகவியல் அறிஞர்கள், இந்தியாவில் செயல்பட்டு வரும் வெளிநாட்டு நிறுவனங்களின் ஊழியர்கள் உள்ளிட்டோருக்கு இந்தியா வர அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
எந்த நிறுவனங்கள் விமானங்களை இயக்க உள்ளன?
ஏர் இந்தியா விமான நிறுவனம், டெல்லி, மும்பை, ஆமதாபாத், பெங்களூரு, ஐதராபாத், கொச்சி, அமிர்தசரஸ் மற்றும் திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களிலிருந்து லண்டன், பிர்மிங்ஹாம், பிராங்க்பர்ட், பாரீஸ், நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ மற்றும் வாஷிங்டன் டிசி நகரங்களுக்கு விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
யுனைடெட், ஏர் பிரான்ஸ், லுப்தான்சா, ஏர் கனடா, எமிரேட்ஸ், எடியாத், விர்ஜின் அட்லாண்டிக் உள்ளிட்ட விமான நிறுவனங்களும் சேவையை நடத்த முன்வந்துள்ளன.
இதுதொடர்பாக, லுப்தான்சா ஏர்லைன்ஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்கா, கனடா, ஜெர்மனி நாடுகளில் உள்ள இந்தியர்கள் இந்தியா செல்ல நாங்கள் பிராங்க்பர்ட்டில் இருந்து டெல்லி, மும்பை, பெங்களூருவிற்கும், முனிச் நகரத்தில் இருந்து டெல்லிக்கும் விமானங்களை இயக்க உள்ளது.
விர்ஜின் அட்லாண்டிக் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது, லண்டனில் இருந்து டெல்லிக்கு செப்டம்பர் 1 முதல் வாரம் 3 விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளோம். லண்டன் - மும்பை விமான சேவையை, செப்டம்பர் 16 முதல் துவக்க உள்ளதாக தெரிவித்துள்ளது
டொரண்டோ - டெல்லி விமான சேவையை, வாரத்திற்கு 3 முறை இயக்க ஏர் கனடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந்தியாவில், ஏர் இந்தியா நிறுவனத்தை தவிர்த்து, விஸ்தாரா ஏர்லைன்ஸ், இங்கிலாந்து, பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது. லண்டன் - டில்லி இடையே வாரத்திற்கு 3 விமானங்களை இயக்க அந்நிறுவனம் ஒப்புதல் பெற்றுள்ளது. மேலும், பாரீஸ், பிராங்க்பர்ட் நகரங்களுக்கும் சேவையை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது.
ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், லண்டன் ஹீத்ரு ஏர்போர்ட்டில் இருந்து இந்திய நகரங்களுக்கு தினசரி விமானங்களை இயக்க திட்டமிட்டுள்ளது.
என்ன ஆவணங்கள் தேவை?
வெளிநாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகள், http://www.newdelhiairport.in என்ற இணையதளத்தில் சுய அறிவிப்பு வடிவத்தை (self-declaration form)சமர்ப்பித்திருக்க வேண்டும். இவர்கள் தங்கள் பயணம் துவங்குவதற்கு 72 மணிநேரத்திற்கு முன்னதாக இதனை செய்திருக்க வேண்டும். இந்தியா வந்தவுடன் அவர்கள் சொந்த செலவில் 7 நாட்கள் தனிமைப்படுத்தல் முகாமில் இருக்க வேண்டும். அதன்பின் அவர்கள் 7 நாட்கள் அவர்கள் வீடுகளில் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
கொரோனா தனிமைப்படுத்துதல் நிகழ்வு, நாடுகளுக்கு நாடு வேறுபடுகிறது. பிரான்ஸ் நாட்டிற்கு செல்லும் இந்தியா, அமெரிக்கா, பிரேசில் நாட்டவர்களை உடனடியாக கொரோனா சோதனைக்குட்படுத்த திட்டமிட்டுள்ளது. இங்கிலாந்து, சுய தனிமை நிகழ்வுக்கு தனி வரையறை ஒன்றும் விதிக்கவில்லை. இந்தியாவில் இருந்து இங்கிலாந்து செல்பவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.