கொரோனா பாதிப்பு : பீகாரில் தொற்று அதிகரிக்க என்ன காரணம்?
Corona cases in Bihar : ஏப்ரல் 20ம் தேதி வரை, பீகாரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 என்ற அளவிலேயே இருந்தது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 3.5 சதவீதம் ஆகவும், பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 19 நாட்களாக இருந்தது.
Corona cases in Bihar : ஏப்ரல் 20ம் தேதி வரை, பீகாரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 என்ற அளவிலேயே இருந்தது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 3.5 சதவீதம் ஆகவும், பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 19 நாட்களாக இருந்தது.
corona virus. lockdown, bihar, doubling rate, maharashtra, migrant workers, coronavirus cases, covid 19 tracker, covid 19 tracker india, bihar coronavirus, bihar covid-19, india covid 19 tracker, corona cases in india, india corona cases, coronavirus cases in delhi, delhi coronavirus
பீகார் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக, கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மே 21ம் தேதி மட்டும் அங்கு ஒரேநாளில் புதிதாக 380 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இது அந்த மாநிலத்தின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 25 சதவீதம் ஆகும். பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு 2 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
Advertisment
தி இந்தியன் எக்ஸ்பிரஸ் வீடியோ
இம்மாத துவக்கத்தில், பீகாரில் 450க்கும் குறைவாகவே, கொரோனா பாதிப்பு இருந்துவந்தது. மத்திய அரசு மே 4ம் தேதி ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகளை மேற்கொண்ட நிலையில், புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் பீகார் மாநிலத்தை நோக்கி படையெடுக்க துவங்கினர். இதனையடுத்து, பீகாரில் கொரோனா பாதிப்பு கணிசமான அளவு அதிகரிக்க துவங்கியது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும், பீகாரில் கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்ததற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் அதிகளவில் பீகார் மாநிலத்திற்கு திரும்பியதே காரணமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisment
Advertisements
ஏப்ரல் 20ம் தேதி வரை, பீகாரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 100 என்ற அளவிலேயே இருந்தது. மாநிலத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் 3.5 சதவீதம் ஆகவும், பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 19 நாட்களாக இருந்தது.
மே முதல் வாரத்தில் இருந்து வெளிமாநிலங்களுக்கு தொழில் காரணமாக சென்றிருந்த பீகார் மாநிலத்தவர்கள் மீண்டும் மாநிலத்துக்கே திரும்பினர். இதனையடுத்து, பீகார் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக அதிகரித்தது. இதனைத்தொடர்ந்து கடந்த 7 நாட்களில், கொரோனா பாதிப்பு விகிதம் 10.32 சதவீதமாக அதிகரித்தது. பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 7 நாட்களுக்கும் கீழ் குறைந்தது.
தேசிய அளவில், பாதிப்பு இரட்டிப்பு விகிதம், தற்போதைய நிலையில், 13.45 நாட்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
மே 21ம் தேதி, தேசிய அளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரேநாளில் 6 ஆயிரத்திற்கு மேல் முதல்முறையாக அதிகரித்தது. நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை 1.16 லட்சமாக உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில், கடந்த 5 நாட்களாக தினமும் 2 ஆயிரத்திற்கும் மேல் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மே 21ம் தேதி மட்டும் புதிதாக 2345 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 41,642 ஆக உள்ளது. இது தேசிய அளவில், மூன்றில் ஒரு பங்கு ஆகும். 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.
தமிழகத்திலும், மே 21ம் தேதி புதிதாக 776 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், அங்கு பாதிப்பு எண்ணிக்கை 13,191 ஆக அதிகரித்துள்ளது.
மத்திய அரசு மே 4ம் தேதி தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவில் மேற்கொண்ட தளர்வுகளினால், மக்கள் பொதுவெளிகளில் அதிகமாக நடமாட துவங்கினர். மே 15ம் தேதிக்கு பிறகு, கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது.
நான்காம் கட்டமாக நீட்டிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவில் சில தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கொரோனா பாதிப்பு மேலும் அதிகரிக்கலாம் என்று வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil