இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 4,500க்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறிப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது. சர்வதேச அளவில், 10 நாடுகளில் மட்டுமே கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்தை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் 1 லட்சம் என்ற கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, தேசிய அளவிலான ஊரடங்கு நிலை அமல்படுத்தாமல் இருந்திருந்தால், ஏப்ரல் மாதத்திலேயே ஏற்பட்டிருக்கும். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதன் விளைவாகவே, 1 லட்சம் பாதிப்பு என்ற மைல்கல்லை தொட 3 வராங்களுக்கு மேல் ஆகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில், அப்போது இருந்த தொற்று பரவலை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால், ஏப்ரல் இறுதி அல்லது அதற்கு முன்னதாகவே 1 லட்சம் பாதிப்பு என்ற நிலையை அடைந்திருப்போம் என்று கணிப்புகள் தெரிவித்துள்ளன.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 100 ஆக அதிகரிக்க 14 நாட்கள் கால அவகாசம் பிடித்தது, அதாவது மார்ச் 2 முதல் 15ம் தேதிவாக்கிலேயே, பாதிப்பு எண்ணிக்கை 100 ஆனது. கேரள மாநிலத்தில் தான் ஜனவரி 29ம் தேதி முதன்முறையாக 3 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டிருந்தது. அடுத்த 14 நாட்களில், அதாவது மார்ச் 29ம் தேதி, பாதிப்பு எண்ணிக்கை 1000 ஆக அதிகரித்தது. அடுத்த 15 நாட்களில் இந்த எண்ணிக்கை 10 ஆயிரமாக உயர்ந்தது. இதேநிலை தொடர்ந்திருக்கும் பட்சத்தில், ஏப்ரல் மாத இறுதியிலேயே, பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சமாக அதிகரித்திருக்கும். நாட்டில் கொரோனா சோதனைகள் போதுமான அளவு செய்யப்படாது இருந்த நிலையில், அதன் பாதிப்பை கனவிலும் நினைத்துப்பார்க்க இயலவில்லை.
இந்நிலையில் தான் , மார்ச் 24ம் தேதி தேசிய அளவிலான ஊரடங்கு நிலையை, பிரதமர் மோடி அமல்படுத்தினார். இதன்காரணமாக, கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் கணிசமான அளவுக்கு குறைந்தது. ஏப்ரல் மாத இறுதியில் தொற்று பரவல் கட்டுப்படுத்தப்பட்ட நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 35 ஆயிரம் என்ற அளவிலேயே இருந்தது.
ஊரடங்கு நிலை அமல்படுத்தப்பட்டதனால், கொரோனா தொற்று பாதிப்பு கணிசமான அளவு குறைந்தது மட்டுமல்லாமல், போதிய அளவு சோதனைகள் மேற்கொள்ள அரசுகளுக்கு வழிவகை ஏற்பட்டது. ஊரடங்கு நிலை அமல்படுத்தப்பட்டதன் விளைவாகவே, நம்மால் 1 லட்சம் என்ற கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நிலையை 3 வார காலம் தள்ளிப்போட முடிந்தது.
பல்வேறு மாநிலங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக்கொண்ட உள்ள நிலையில், ஊரடங்கு நடைமுறைகளில் பல்வேறு தளர்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்காரணமாக, கொரோனா தொற்று பரவல் விகிதம் மீண்டும் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
மே 18ம் தேதி, ஒரேநாளில் மட்டும் 4700 பேருக்கு மேற்பட்டோருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மே 4 ம்தேதி சில பகுதிகளில் ஊரடங்கு நடைமுறைகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது பாதிப்பு 50 ஆயிரத்தை எளிதில் கடந்துள்ளது.
ஊரடங்கு அமலில் இருந்த காலத்தில் கொரோனா தொற்று பரவல் குறைவாக இருந்த நிலையில், அது தற்போது மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளது. தற்போது தளர்வுகள் அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிப்பு இரட்டிப்பு விகித காலஅளவு கணிசமாக குறைந்துள்ளது. கடந்த 2 நாட்களில் மட்டும் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை கண்கூடாக அறியலாம்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கையில் 75 சதவீதம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, குஜராத், டெல்லி, ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களை சேர்ந்தவர்களே ஆவர். இந்த மாநிலங்களில், கொரோனா பாதிப்பு விகிதங்களை தொடர்ந்து டிரெண்டிங் ஆக இருந்துவருவதும் குறிப்பிடத்தக்கது.
பீகார், ஒடிசா மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. பீகாரில், நேற்று மட்டும் புதிதாக 139 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், கடந்த 3 நாட்களில் மட்டும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 300 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. அங்கு பாதிப்பு இரட்டிப்பு விகிதம் 7.5 நாட்களாக உள்ளது. இதற்குமுன்னதாக, இரட்டிப்பு விகித நாட்கள் 13.68 நாட்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
வெளிமாநிலங்களில் தவித்த தொழிலாளர்கள் மீண்டும் ஒடிசாவிற்கு திரும்பியுள்ள நிலையில், நேற்று மட்டும் அங்கு 102 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு எண்ணிக்கையில் 3ம் இடத்தில் இருந்த தமிழ்நாடு, தற்போது குஜராத்தை முந்தி இரண்டாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.