Amitabh Sinha
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு உள்ளவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்த வைரசிற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.சர்வதேச அளவில், 40 நாடுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை, இந்தியா இன்னும் கொரோனா வைரசின் கொடூர பிடியில் சிக்கவில்லை என்பதையே காட்டுகிறது. இருந்தபோதிலும் இந்த நிலையை நாம் சாதாரணமாக எடுத்துக்கொண்டிற முடியாது. அடுத்த இரண்டு மாதங்களில், இந்த வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மில்லியன் என்ற அளவை எட்டும் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இனிவரும் காலங்களில் , சமூக பரிமாற்றத்தின் மூலமாக பலருக்கும் இந்த தொற்று ஏற்பட வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். ஏனெனில், இந்த தொற்று உள்ளதாக சந்தேகிக்கப்பவர்களிடம், இதுரவை முழுமையான பரிசோதனை நடத்தப்படவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் (The Indian Council of Medical Research (ICMR)( அவர்களது கூற்றின்படி, இந்த வைரஸ் தொற்று உள்ளவர்களுக்கு எதன்மூலம் இந்த தொற்று பரவியது என்பதை தெளிவாக கூற முடியவில்லை, இதன்காரணமாகவே, சமூக பரிமாற்றத்தின் மூலம் இந்த தொற்று ஏற்பட வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலையில் இந்த கொரோனா வைரஸ் வாழ முடியாது, மற்ற நாடுகளை காட்டிலும், இந்தியாவில் இதன் பாதிப்பு குறைவானதாகவே இருக்கும் போன்ற பல்வேறு கருத்துகளால், உலகின் இரண்டாவது மிகப்பெரிய நாடான இந்தியாவில், தேசிய அளவிலான ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், பல்வேறு பகுதிகளில் தொழிலாளர்கள் ஓரிடத்திலிருந்து வேறு இடங்களுக்கு சென்ற வண்ணமே உள்ளனர்.
கொரோனா வைரஸ் தொற்று எப்போது நிறைவடையும், மீண்டும் புதிதாக ஏதாவது வைரஸ் தொற்று நிகழுமா? என்ற இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையின் கேள்விகளுக்கு விஞ்ஞானிகள், நிபுணர்கள் அளித்த பதில்கள் இதோ..
தொற்று ஆதாரத்தை தடைசெய்யுங்கள்
வைரஸ் தொற்று உள்ள நபரை தனிமைப்படுத்துவதன் மூலம், இந்த தொற்று பரவலை தடுத்து கட்டுப்படுத்தலாம். குறிப்பாக, நமது நாட்டில், வைரஸ் தொற்றுடன் ஒரு வெளிநாட்டு பயணி இந்தியா வருகிறார் என்றால், அவரை உடனடியாக தனிமைப்படுத்த வேண்டும். இதன்மூலம், இந்த தொற்று மற்றவர்களுக்கு பரவுவது கட்டுப்படுத்தப்படும். இந்த நடைமுறை பலனளிக்கும்பட்சத்தில், மேலும் அதிக தொற்று ஏற்படாவண்ணம், விமான சேவைகளை நிறுத்த வேண்டும்.
சமூக பரிமாற்றம்
வைரஸ் தொற்று உள்ள ஒருவரிடமிருந்து ஒரு சமூக மக்களுக்கு தொற்று பரவுதலையே நாம் சமூக பரிமாற்றம் என்கிறோம். இந்த தொற்று உயிரை பறித்துவிடும் என்பதால், தொற்று உள்ள நபரை, சமூகத்தில் இருந்து பிரிந்து தனிமைப்படுத்தி அவரை குணப்படுத்த முடிந்தால் குணப்படுத்த வேண்டும். அவர் இறந்துவிட்டால், போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் அவரது இறுதிச்சடங்கை நடத்திவிட வேண்டும். அவர் தனிமைப்படுத்தப்படுவதால், அவரிடமிருந்து தொற்று மற்றவர்களுக்கு ஏற்படும் விகிதம் குறைவு. தொற்று குறைய குறைய, அந்த வைரசின் தொற்று பரவல்திறன் கணிசமான அளவில் குறைந்து விடும். இதுவே மந்தை நோய் எதிர்ப்பு சக்தியின் தத்துவம் ஆகும். வைரஸ் தொற்று கொண்ட ஒருவரிடம் இருந்து எத்தனை பேருக்கு இந்த தொற்று ஏற்படும் என்பதை நாம் முன்கூட்டியே அறிந்து அதற்கேற்ப நமது செயல்பாடுகளை அமைத்துக்கொண்டால், இந்த வைரசின் பாதிப்புகளை நாம் கணித்து அதனை கட்டுப்படுத்திவிடலாம்.
தடுப்பு மருந்து :
கொரோனா நோய்க்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், வைரஸ் தொற்று உள்ள நபர்களுக்கு முறையாக வழங்கப்பட வேண்டும். SARS-CoV2 வைரசிற்கு தடுப்பு மருந்தை உருவாக்க இன்னும் 12 முதல் 18 மாத காலம் ஆகும் என்பதால், அதுவரை நாம் மந்தை நோய் எதிர்ப்பு சக்தி முறையையே பின்பற்ற வேண்டும் என்று விஞ்ஞானிகள் வலியுறுத்துகின்றனர்.
இதுமட்டுமல்லாது, மற்ற இரு காரணங்களினாலும் தொற்று பாதிப்பு குறையும்
வைரஸ் உயிர் வாழ இயலாத நிலை
கொரோனா வைரஸ் அதிக வெப்பநிலையில் உயிர் வாழ முடியாத நிலை ஏற்படும் பட்சத்தில் அதனால் தொற்றை அதிகளவில் பரப்ப இயலாது. தற்போது பாதிப்பை ஏற்படுத்தி வைரசால் அதிக பாதிப்பை ஏற்படுத்த முடியாது என்று சிலர் தெரிவித்து வருகின்றனர். ஆனால், அறிவியல்பூர்வமாக இது நிரூபிக்கப்படவில்லை. இந்தியாவில், இந்த வைரசின் பாதிப்பு ஒருமாத கால அளவிற்கு மேல் இருக்கும் என்றும் இதன் தொற்று அதிகப்படியான நபர்களிடையே ஏற்படும் என்று இன்னொரு சாராரும் தெரிவித்து வருகின்றனர்.
முன்பே இருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி
இந்தியாவில் SARS-CoV2 வைரஸ் அதிகளவில் பாதிப்பை ஏற்படுத்தாதற்கு நாட்டு மக்களிடையே முன்பிருந்தே உள்ள நோய் எதிர்ப்பு சக்தி தான் ஒரு சாரார் தெரிவிக்கின்றனர். மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்பு தற்போதைய அளவில் மிக மிகக்குறைவு தான்.
தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் அதன் இரண்டாம் கட்டத்தை எட்டியுள்ளது. மனிதர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை பொறுத்து அதன் தொற்று விகிதம் மாறுபடும் இந்தியாவில் சமூக பரிமாற்றத்தின் மூலம் இந்த வைரஸ் தொற்று பரவாது என்று விஞ்ஞானிகள் தெரிவித்திருந்த நிலையில், பல்வேறு பகுதிகளில் சமூகபரிமாற்றத்தினால் தொற்று ஏற்பட்டிருப்பது விஞ்ஞானிகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.
இந்த வைரஸ் தொற்றின் ஆதாரம் கண்டுபிடிக்கப்படாத நிலையில், அது சமூகபரிமாற்றத்தின் மூலமே பரவியது என்ற கூற்றை ஏற்கமுடியாது என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகம் தெரிவித்துள்ளது.
தற்போது இந்த தொற்று சிலபேரிடம் காணப்படுகிறது, அவர்களில் சிலர் மந்தை நோய் எதி்ப்பு சக்தியின் மூலம், குணமடைந்தும் உள்ளனர். முன்னொரு காலங்களில், வைரஸ் தொற்றினால் ஏற்படும் மரணம், அதன் பரவல் மற்றும் வைரசின் இயல்பு பொறுத்து அமையும். ஆனால், இந்த கொரோனா வைரஸ் உயிரை பறிக்கும் அளவிலான வைரஸ் அல்ல என்றும், மந்தை நோய் எதிர்ப்பு சக்தியின் மூலமே இதனை கட்டுப்படுத்தி விட முடியும் என்று ஒரு சாரார் தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த தொற்றின் காரணமாக சிலர் பலியான நிகழ்வு பெரும் அதிர்ச்சியை விஞ்ஞானிகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
ஏன் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம்
கொரோனா வைரஸ் உயிர்க்கொல்லி வைரஸ் அல்ல என்று ஒருதரப்பு விஞ்ஞானிகள் தெரிவித்து வரும் நிலையிலும், இந்த வைரஸ் தொற்று தொடர்பாக இந்திய அரசு அதிகப்படியான அக்கறை எடுத்து அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. உயிர்க்கொல்லி வைரஸ் இல்லை என்றாலும், இது பல உயிரிழப்புகளை ஏற்படுத்திவிடக்கூாது என்பதற்காகவும், தடுப்பு நடவடிக்கைகளால், நோய்த்தொற்றை கணிசமான அளவில் குறைக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டுள்ளதாக புனேயில் உள்ள இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் நோய் தடுப்பாற்றல் துறை பேராசிரியர் வினீதா பால் தெரிவித்துள்ளார்.
நடைமுறை சிக்கல்களாலும் அதிகளவில் நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. தற்போது நாட்டில் 5 முதல் 7 சதவீத மக்களே இந்த வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை நாம் அளித்துவிட முடியும். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் இதன் பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு தேவையான மருத்துவ சிகிச்சைகளை அரசுகளால் வழங்க முடியாது என்பதாலேயே, 144 தடை உத்தரவு, ஊரடங்கு உத்தரவு போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊரடங்கு உத்தரவு எவ்வாறு துணைபுரியும்
ஊரடங்கு உத்தரவின் மூலம் பெரும்பாலான மக்கள் தங்களது வீடுகளிலேயே இருப்பர். மற்றவர்களுடனான தொடர்பு பாதியாக குறையும். இதன்காரணமாக, வைரஸ் தொற்று பரவுவது பெருமளவில் தடுக்கப்படும். இந்த உத்தரவை நாம் எல்லா தரப்பு மக்களிடையேயும் அமல்படுத்திவிட முடியாது. ஏனெனில், சுகாதார துறை ஊழியர்கள் உள்ளிட்டோர் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவது இன்றியமையாததாகும். சிலர் இந்த ஊரடங்கு உத்தரவு விதிகளை மீறி மற்றவர்களுடன் தொடர்பில் இருப்பர், பொதுஇடங்களில் நடமாடிக்கொண்டு இருப்பர். அவர்களுக்கு வைரஸ் தொற்று ஏற்படும் பட்சத்தில், அவை அவர்களுடன் தொடர்புடைய மற்றவர்களுக்கும் பரவ வாய்ப்பாக அமைந்து விடுகிறது.
ஊரடங்கு உத்தரவு நிலை பிறப்பிக்கப்பட்ட போதிலும் அரசு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கைவசம் வைத்திருத்தல் வேண்டும். அப்போது தான் வருமுன் காப்போம் என்ற கோட்பாட்டிற்கேற்ப நாம் விரைந்து செயல்பட்டு வைரஸ் தொற்றின் தீவிரத்தை கட்டுப்படுத்த முடியும்.
சமூக விலகல் நிகழ்வுகளின் மூலமும், நாம் இந்த தொற்றுகளிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள முடியும். வைரஸ் தொற்று அதிகரிக்கும் பட்சத்தில், அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்கும் பொருட்டு,படுக்கை வசதி, ஐசியு, வெண்டிலேட்டர் வசதிகளை மத்திய மாநில அரசுகள் கைவசம் வைத்துக்கொள்ள வேண்டும்.
சில மாநிலங்களில் கோவிட் -19 தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், பெரிய பெரிய மைதானம் உள்ளிட்ட இடங்களை மருத்துவமனைகளாக மாற்றி அங்கு அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை அளிக்க வேண்டும்.
விளைவுகள்
ஊரடங்கு உத்தரவின் காரணமாக, ரயில், விமானம், பஸ் உள்ளிட்டவைகளின் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாக, ஒரு மாநிலத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு பணிக்கு சென்ற தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் பல நூறு கிலோ மீட்டர்கள் நடந்தே சென்று தங்களது வீடுகளுக்கு செல்கின்றனர். அவர்களின் இந்த நடவடிக்கைக்கு மத்திய அரசு எவ்வித உதவிகளும் செய்ய இயலாத நிலையில் உள்ளன.
இந்த தொழிலாளர்கள், தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றால் மட்டுமே தங்களை காத்துக்கொள்ள முடியும் என்ற அறியாமையினால் மட்டுமே, பல நூறு கிலோ மீட்டர்கள் தொலைவை நடந்தே சென்று தங்களது வீடுகளுக்கு சென்று வருகின்றனர். அவர்களுக்கு இருக்கும் இடத்திலேயே பாதுகாப்பாக இருந்தாலே, இந்த தொற்றில் இருந்து காத்துக்கொள்ளலாம் என்ற அறிவை அவர்களுக்கு புகட்ட யாரும் முன்வருவதில்லை என்பது வேதனையான விஷயம்.
இந்த நடைப்பயணத்தின் போதே பலர் மரணமடையும் நிகழ்வும் ஆங்காங்கே நடந்து வருகிறது. மத்திய மாநில அரசுகள் அவர்களுக்கு மாநில எல்லைகளில் தங்கும் இடங்களை வழங்கி, வைரஸ் தொற்று காலம் முடியும் வரை அவர்களுக்கு தேவையான உணவு, உறைவிடம் உள்ளிட்ட உதவிகளை வழங்கி, அவர்களும் இந்த தொற்றில் இருந்து காத்துக்கொள்வதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதே அனைவரது விருப்பம்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.